• English
  • Login / Register

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் செப்டம்பர் 2015 ல் 45,215  வாகனங்களை விற்றுள்ளது.

published on அக்டோபர் 05, 2015 12:28 pm by konark for டாடா சாஃபாரி ஸ்டோர்ம்

  • 15 Views
  • ஒரு கருத்தை எழுதுக

மும்பை: 

TATA Safari Storme 2015

இந்தியாவின் மிகப் பெரிய வாகன தயாரிப்பாளர்களான டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு பயணிகள் மற்றும் வர்த்தக வாகன பிரிவுகளில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் விற்பனையான வாகனங்களை காட்டிலும் இந்த 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் 2% குறைவாகவே விற்பனை ஆகி உள்ளன. பயணிகள் வாகன பிரிவு மற்றும் வர்த்தக வாகனங்களையும் சேர்த்து மொத்தமாக 45,215 வாகனங்கள் இந்த செப்டம்பரில் விற்பனை ஆகி உள்ளன. அதுவே கடந்த 2014 செப்டம்பரில் 46,154  வாகனங்கள் ( ஏற்றுமதியையும் சேர்த்து) விற்பனை ஆகி இருந்தன.

பயணிகள் வாகன பிரிவை பொறுத்தவரை 11,774  வாகனங்கள் கடந்த மாதம் விற்பனையானது. அதுவே 2014 செப்டம்பரில் 11,931  வாகனங்கள் என்ற எண்ணிக்கையில் விற்பனை ஆகியிருந்தது. இன்னும் விரிவாக கார்கள் என்று மட்டும் பிரித்து பார்த்தால் 2014 செப்டம்பரில் 9,766  கார்கள் தான் விற்பனையாகி இருந்தன. அது இந்த வருடம் 5% உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இருந்தும் பயன்பாட்டு வாகனங்களின் (UV) விற்பனை 28% குறைந்து வெறும் 1,548  வாகனங்களே 2015 செப்டம்பரில் விற்பனை ஆகி உள்ளன.

TATA Cars

ஏற்றுமதியை பொறுத்தமட்டில் இந்த நிதியாண்டில் அனைத்து பிரிவு வாகனங்களின் மொத்த எண்ணிக்கை 242,569  ஆகும். அதுவே கடந்த நிதியாண்டின் மொத்த ஏற்றுமதி எண்ணிக்கை 236,670  ஆகும். இது கடந்த ஆண்டை விட 2% அதிகமாகும்.

வர்த்தக வாகன பிரிவில் M ( நடுத்தர ) மற்றும் HCV  ( கனரக வர்த்தக வாகனம் ) வாகனங்களின் எண்ணிக்கை 15,915  ஆக உயர்ந்துள்ளது. இது செப்டம்பர் 2014 உடன் ஒப்பிடுகையில் 52% கூடுதலாகும்.

இலகுரக மற்றும் சிறிய வர்த்தக வாகனங்கள் பிரிவில் கடந்த 2014 செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் 29% குறைந்து 13,124  வாகனங்கள் விற்பனை ஆகியுள்ளன . நம் இந்திய சந்தையிலும் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வர்த்தக வாகன பிரிவில் இந்த பாதிப்புக்கள் உணரப்பட்டுள்ளன. அனைத்து உட்பிரிவுகளையும் சேர்த்து 29,039 வர்த்தக வாகனங்கள் கடந்த மாதம் விற்பனை ஆகியுள்ளன.

TATA NANO 2015

நம் இந்திய சந்தையிலும் வர்த்தக வாகனங்களின் அனைத்து பிரிவுகளையும் சேர்த்து கணக்கிடுகையில் கடந்த ஆண்டை விட 4% விற்பனை இந்த ஆண்டு குறைந்துள்ளதை அறியலாம். மொத்தம் 149,361 வாகனங்கள் விற்பனையாகியுள்ளன.

எற்றுமதிலும் கடந்த ஆண்டு செப்டெம்பரில் 5.246  வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன. அதுவே இந்த ஆண்டு 16% குறைந்து செப்டம்பர் 2015 ல் 4,402  வாகனங்களே விற்பனை ஆகி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment on Tata Safar ஐ Storme

Read Full News

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending எஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience