டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விநாயகர் சதுர்த்தி தினத்தன்று 1,100 கார்களை விநியோகித்தது.
modified on செப் 21, 2015 04:12 pm by nabeel
- 17 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஜெய்பூர்:
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 1,100 கார்களை வாடிக்கையாளர்களை விநியோகித்து இந்த பணிடை காலத்தை கொண்டாடியது. மகாராஷ்டிரா, குஜராத், சட்டீஸ்கர் மற்றும் மத்திய பிரதேசம் மாநிலங்களில்விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்த 1,100 கார்களின் விற்பனை நடந்துள்ளது. பண்டிகை காலத்தின் காரணமாக மும்பை, பூனே, நாக்பூர் , ராய்பூர் மற்றும் போபால் நகரங்களில் அதிகரித்த தேவையை டாடா நிறுவனம் கவனிக்க தவறவில்லை. மகாராஷ்ட்ரத்தில் மட்டும் 700 கார்கள் விநியோகிக்கப்பட்டன. மத்திய பிரதேசம், குஜராத் மற்றும் சட்டீஸ்கர் மாநிலங்களில் மொத்தமாக சேர்ந்து மேலும் 400 வாகனங்கள் விநியோகிக்கப்பட்டது.
திரு. ஆஷிஷ் தர், தேசிய விற்பனை பிரிவு தலைவர், பேசஞ்சர் வாகன வணிகம் , டாடா மோட்டார்ஸ் , பின்வருமாறு கூறினார். “ பொதுவாகவே பண்டிகை காலம் போது மக்கள் மத்தியில் கூடுதல் உத்வேகத்தையும் ஆர்வத்தையும் மகிழ்ச்சியையும் அதிகரிக்கும். இந்த பண்டிகை கால துவக்கத்திலேயே வாடிக்கையாளர்கள் கொடுத்துள்ள ஆதரவையும் , எங்கள் மீது அவர்கள் வைத்துள்ள நம்பிக்கையையும் கண்டு மிகுந்த மகிழ்ச்சியும் பெருமையும் கொள்கிறோம். இந்த நன்னாளில் பல குடும்பங்களின் குதூகலமான பயணத்திற்கு வழி வகை செய்ய கிடைத்த வாய்ப்பை எண்ணி மிகுந்த உற்சாகமடைகிறோம். எங்களது ஜெஸ்ட், போல்ட் மற்றும் ஜென்எக்ஸ் நானோ கார்களின் வளர்ச்சி சந்தையில் அதிகரித்து உள்ள நிலையில் நாங்கள் மீண்டும் ஒரு முறை மிகுந்த நம்பிக்கையுடன் எங்கள் தரம் மற்றும் நம்பிக்கை மீதான உத்திரவாதத்தை வாடிக்கையாளர்களுக்கு அளிக்கிறோம்.”
எங்கள் வாடிக்கையாளரின் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பண்டிகை காலத்திற்கு என்றே 'உற்சாகமூட்டும்' பல சலுகைகளை உள்ளடக்கிய பேக்கேஜ்களை வெளியிட்டுள்ளது மட்டுமின்றி பயணிகள் வாகன பிரிவில் வாடிக்கையாளர் தேவைகளுக்கு ஏற்ப சரியான நேரத்தில் வாகனங்கள் விநியோகிக்கப்பட தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
மேலும் நேபால் நாட்டின் , காத்மாண்டு நகரில் நடந்த 11 ஆவது NADA ஆட்டோ ஷோவிலும் டாடா நிறுவனம் உற்சாகத்தோடு கலந்து கொண்டு தன்னுடைய ஜெஸ்ட், போல்ட் மற்றும் இஎக்ஸடா கார்களை காட்சிக்கு வைத்தது மட்டுமின்றி தனது முற்றிலும் புதிய ஸ்டார்ம் வாகனத்தை NPR 42.25 லட்சங்கள் என்ற விலையில் (LX வேரியன்ட்) மற்றும் VX வேரியன்ட்களை NPR 56.85 லட்சம் என்ற விலையிலும் அறிமுகப் படுத்தியுள்ளது. மேலும் இந்த ஆட்டோ ஷோவில் வாகனங்கள் வாங்குவது சம்மந்தமான முடிவுகள் எடுப்பதில் வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் குழபங்களை தீர்க்க உதவும் விதத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மியூசிக் பூத், கேமிங் சோன் மற்றும் வாடிக்கையாளர் நேரிடையாக வாகனம் குறித்த சந்தேகங்களை கேட்டு தெளிவு பெறும் விதத்தில் கஸ்டமர் இன்டெரேகஷன் செக்க்ஷன் போன்ற மூன்று பிரிவுகளை உள்ளடக்கிய நிகழ்ச்சி ஒன்றிற்கும் ஏற்பாடு செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
0 out of 0 found this helpful