இதை கவனியுங்கள் ! ரோல்ஸ் ராய்ஸ் டான் கார்கள் இன்று அறிமுகமாகிறது.
modified on செப் 08, 2015 01:24 pm by konark
- 17 Views
- ஒரு கருத்தை எழுதுக
இளைஞர்கள் மத்தியில் தொழில்நுட்ப திறன்களை வளர்ப்பதற்கான ஒரு புதிய தளத்தை உருவாக்குவதற்கு, டாடா மோட்டார்ஸ் மற்றும் பிலனியில் உள்ள பிர்லா இன்ஸ்ட்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி அண்ட் சயின்ஸ் (BITS) நிறுவனங்கள் இணைந்து ஒரு நீண்ட கால கூட்டணி அமைத்துள்ளனர். டாடா மோட்டார்ஸ் தன் வரலாற்றில், முதல் முறையாக இத்தகைய ஒரு கூட்டணியை அமைத்துள்ளது. வாகன தொழில்துறையில், இது ஒரு சிறந்த முயற்சியாக கருதப்படுகிறது, ஏனெனில், இதன் மூலம் இளைஞர்கள் மட்டுமல்லாது தொழில்துறையும் பன்மடங்கு பயனடையும்.
டாடா மோட்டார்ஸ் லிமிடெட் தலைமை மனித வள அதிகாரியான திரு. கஜேந்திரா சண்டேல் மற்றும் BITS –இன் வளாக திட்டங்கள் மற்றும் தொழில்துறை அலுவல்களின் (ஆஃப் கேம்பஸ் புரோகிராம்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரி எங்கேஜ்மெண்ட்) இயக்குனருமான பேராசிரியர் ஜி. சுந்தர், இருவரும் 5 வருட MOU –வில் கையெழுத்திட்டு ஒப்பந்தம் செய்தனர். பின்னர், இந்த திட்டத்தின் மூலம் வாகன பொறியியல் தொழில்நுட்ப கல்வியில், இளநிலை மற்றும் முதுநிலை பட்டங்களுக்கான வகுப்புகள் அறிமுகப்படுத்தப்படும் என்று விளக்கினர். இந்த திட்டம், இந்தியாவின் பல்வேறு இடங்களில் செயல்படுத்தப்படும் என்றும் கூறினர்.
டாடா மோட்டார்ஸ் லிமிடெட் தலைமை மனித வள அதிகாரியான திரு. கஜேந்திரா சண்டேல், இது பற்றி கூறும் போது, “வர்த்தக உலகம் மிக வேகமாக பரிணாம வளர்ச்சி அடைந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், எங்களது வல்லமை மிக்க நிலையை தக்க வைத்துக் கொள்ள, நாங்கள் பின்வரும் நிலையை முன்னுணர்ந்து, அதற்கேற்றபடி உலகத்தரமான, ஆற்றல் வாய்ந்த, திறமையான மற்றும் புதியது புனையத் தகுந்த தொழிலாளர்களை உருவாக்க வேண்டியது மிகவும் முக்கியமாகிறது,” என்று கூறினார்.
“நாங்கள் பல முன்னணி நிறுவனங்களுடன் நெருங்கி வேலை செய்து, அவர்களின் பொறியியல் திறன்களை தொடர்ந்து வளர்க்கிறோம். மற்ற பொறியியல் நிறுவனங்கள் மட்டுமல்லாது, எங்கள் நிறுவனத்திலும் பொறியியல் திறனை மென்மேலும் வளர்க்கிறோம். இதை ஒரு படி மேலே கொண்டு செல்ல, பிலானியில் உள்ள BITS உடனான இந்த கூட்டணி கைகொடுக்கும். இதன் மூலம், தொழில் துறை மற்றும் கல்வித் துறை இடையே ஒரு கூட்டு முயற்சியை கொண்டு வந்து, தொழில்நுட்பத்திற்கும் திறமைக்கும் உள்ள இடைவெளியை, வரும் வருடங்களில் குறைப்பதற்கு தகுந்தவாறு செயல்பட உள்ளோம். நாங்கள் இந்த திட்டத்தின் மூலம், கல்வி கற்பதில் உள்ள எல்லையை விரிவாக்க திட்டமிட்டுள்ளோம். மேலும், இதே காலகட்டத்தில், இதைப் போலவே இன்னும் பல கல்விதுறைகளுடன் கூட்டணி அமைத்து, தொழில்துறைக்கு தயாரான வளங்களை உருவாக்க முனைப்புடன் இருக்கிறோம். எங்களின் இந்த புதிய திட்டம் இந்திய அரசாங்கத்தின் ‘இந்தியாவிலேயே தயாரிப்போம்” என்ற திட்டத்தை ஆதரிக்கும், ஏனெனில், இந்தியா தொழில் துறை உலக அரங்கில் போட்டி போட இது ஒரு சிறந்த தளமாக இருக்கும்,” என்றார்.
இதன் பாடங்கள் இரண்டு பிரிவுகளாக இருக்கும். தொழில்நுட்ப நோக்குநிலை (ஓரியேண்ட்டேஷன்) வகுப்பறைகளிலும்; நேரடி வேலைப் பயிற்சியாக, நவீன பொறியியல், வடிவமைப்பு, உற்பத்தி மற்றும் வாடிக்கையாளர் ஆதரவு வசதிகள் போன்றவை டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திலும் கற்பிக்கப்படும். மாணவர்களை கவனிக்கவும், வழிகாட்டவும் தொழில்துறை தலைவர்கள் முன்னிற்பர். மேலும், மாணவர்கள் டாடா மோட்டார்ஸில் 6 மாத காலத்திற்கு நடைமுறைப் பயிற்சியில் நேரடியாக ஈடுபடுவர்.
0 out of 0 found this helpful