இந்தியாவின் மாருதி எர்டிகா: ரகசியமாக எடுக்கப்பட்ட காரின் மேற்பரப்பை காட்டும் படங்கள்.
published on ஆகஸ்ட் 11, 2015 03:12 pm by அபிஜித் for மாருதி எர்டிகா 2015-2022
- 13 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஜெய்ப்பூர்:மாருதி தனது பிரபல மாடலான MPV எர்டிகாவின் புதுப்பிக்கப்பட்ட பதிப்பை, வரும் 20 ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ள இந்தோனேஷியா இண்டர்நேஷ்னல் மோட்டார் ஷோவில் பார்வைக்கு வைக்க உள்ளது. இதற்கு முன்னர், எர்டிகாவின் புதுப்பிக்கப்பட்ட பதிப்பை இந்தோனேஷியாவில் வைத்து படம் பிடிக்கப்பட்டது. இந்த புதுப்பிக்கப்பட்ட மாடலை ஆகஸ்ட் மாத இறுதியில் தயாரிப்பாளர்கள், இந்தியாவிற்கு கொண்டு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களை குறித்து பார்க்கும் போது, குரோம் கிரில் சற்று மேல்நோக்கி சென்று போனேட்டிற்குள் சென்றதாக தெரிகிறது. மேலும் புதுப்பிக்கப்பட்ட பதிப்பில் அதிகளவில் கிரோம் பயன்படுத்தப்பட்டுள்ளது. தற்போதைய பதிப்பை விட, முன்புற பம்பர் மறுவடிவமைப்பு செய்யப்பட்டு அதிக ஸ்போர்ட்டியாக காட்சியளிக்கிறது. உளவு பார்க்கப்பட்ட இந்த காரின் பக்கவாட்டு பகுதியில் அலாய் வீல்கள் பொருத்தப்பட்டு, அழகு மிகுந்த சென்ட்ரல் கிரோமை நோக்கி செல்லும் பின்புற விளக்குகளுக்காக பின்புறம் சற்று விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. பின்புற பம்பரில், ஆழமாக பதிக்கப்பட்ட எதிரொளிப்பான்கள் (ரிப்லக்டர்கள்) மற்றும் ஒரு பெரிதான அமைப்புகள் மூலம் சில மாற்றங்களை காண முடிகிறது.
அதிகம் கவனிக்கப்படாத நுட்பமான காரியங்களை சற்று ஆழ்ந்து பார்க்கையில், புதிய பதிப்பு எர்டிகாவில் மீண்டும் அதே 1.4 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.3 லிட்டர் டீசல் உடன் 90 PS சக்தி மற்றும் 200 Nm டார்க் ஆகியவை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனோடு, 5-ஸ்பீடு மேனுவல் உடன் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வும் அளிக்கப்படலாம். பரிணாமத்தை பொறுத்த வரை, வீல் பேஸ், உயரம், நீளம் ஆகியவற்றில் கூட எந்த மாற்றமும் இருக்க வாய்ப்பில்லை.
மற்றொருபுறம், சியஸில் உள்ளது போன்ற ஸ்டாட் / ஸ்டாப் பட்டன், டச்ஸ்கீரின் இன்போடெயின்மென்ட் சிஸ்டம் ஆகியவையும், புதிய திரைகள் மற்றும் ப்ளூடூத் இணைப்பு ஆகிய சில மாற்றங்கள் மட்டும் இருக்க வாய்ப்புள்ளது.
0 out of 0 found this helpful