இந்தியாவில் விஷன் S SUV-யை, ஸ்கோடா அறிமுகம் செய்ய வாய்ப்புள்ளது

வெளியிடப்பட்டது மீது Feb 19, 2016 02:39 PM இதனால் Raunak

  • 10 பார்வைகள்
  • ஒரு கருத்தை எழுதுக

ஃபோர்டு எண்டோவர், புதிய ஃபார்ச்யூனர் மற்றும் பஜேரா ஸ்போர்ட் போன்ற SUV-கள் உடன் இது போட்டியிடும்.

சர்வதேச அளவில் முன்னணி வகித்த தனது தயாரிப்புகளான சூப்பர்ப் மற்றும் எட்டி போன்ற வாகனங்களை, இந்த செக் குடியரசு நாட்டை சேர்ந்த வாகனத் தயாரிப்பாளர், இந்தியாவில் அறிமுகம் செய்வது வழக்கமாக உள்ளது. இந்நிலையில் அதன் விஷன் S தொழிற்நுட்பத்தின் தயாரிப்பு பதிப்பு நேற்று இந்தியாவில் வெளியிடப்பட்டதால், ஸ்கோடா நிறுவனம் மூலம் அது நம் நாட்டிலும் அறிமுகம் செய்யப்பட வாய்ப்புள்ளது. இந்த தயாரிப்பு பதிப்பிற்கு இன்னும் பெயரிடப்படாமல் உள்ள நிலையில், பெரும்பாலும் இது ‘கோடியாக்’ என்று அழைக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. நம் நாட்டில் இது அறிமுகம் செய்யப்படும் பட்சத்தில், பிரிமியம் SUV பிரிவில் உள்ள புதிய எண்டோவர், அடுத்த தலைமுறையைச் சேர்ந்த ஃபார்ச்யூனர் மற்றும் பஜேரா ஸ்போர்ட் உடன் அடுத்துவரவுள்ள VW டிகுவான் ஆகியவற்றுடன் போட்டியிடும். இந்தாண்டு அக்டோர் மாதம் நடைபெற உள்ள 2016 பாரீஸ் மோட்டார் ஷோவில், இதன் தயாரிப்பு பதிப்பு கொண்டு வரப்படலாம் என்று கூறப்படுகிறது. இவ்வாகனத்தை ஸ்கோடா நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்வதாக இருந்தால், வரும் 2017 ஆம் ஆண்டு இறுதி அல்லது 2018 துவக்கத்திற்கு முன்பாக அதை எதிர்பார்க்க முடியாது.

இன்னும் சில வாரங்களில் அறிமுகம் செய்யப்பட உள்ள மூன்றாம் தலைமுறையை சேர்ந்த புதிய சூப்பர்ப் காரை போல, இதன் விளிம்பு வரை அம்சங்களால் நிரம்பியுள்ளது. விஷன் S என்று அறியப்படும் கோடியாக் கூட, MQB பிளாட்பாமை தான் அடிப்படையாக கொண்டுள்ளது. ஸ்கோடாவின் கார்களிலேயே இந்த விஷன் S தொழிற்நுட்பம் தான் முதல் முறையாக 6 சீட்களை கொண்டுள்ளது என்று வாகனத் தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் தயாரிப்பு மாதிரியில் பெரும்பாலும் ஒரு சீரான 7 சீட் அமைப்பை கொண்டிருக்கலாம் என்று தெரிகிறது. இந்த வாகனம் 2.79-மீட்டர் வீல்பேஸை கொண்டு, 4.70 மீட்டர் நீளமும், 1.91 மீட்டர் அகலமும், 1.68 மீட்டர் உயரமும் பெற்றுள்ளது.

இந்த தொழிற்நுட்ப பதிப்பில், ஒரு 225 hp ஹைபிரிடு ஆற்றலகம் காணப்படுகிறது. ஆனால் இது அறிமுகம் செய்யப்படும் போது, இந்த ஹைபிரிடு ஆற்றலகத்தை தவிர, தரமான TDI மற்றும் TSI போன்ற டீசல் மற்றும் பெட்ரோல் மோட்டார்களையும் கொண்டிருக்கும் என்பது தெள்ளத் தெளிவாக அறிந்த காரியமாகும். இந்தியாவிற்கான தயாரிப்பை குறித்து பார்க்கும் போது, பெரும்பாலும் அடுத்துவரவுள்ள சூப்பர்ப் காரின் என்ஜின் வரிசையை இது பகிர்ந்து கொள்ளலாம் என்று தெரிகிறது.

மேலும் வாசிக்கஸ்கோடா தனது விஷன் S கான்செப்டை 2016 ஜெனீவா மோட்டார் ஷோவிற்கு முன்னதாகவே வெளியிட்டுள்ளது.

வெளியிட்டவர்

Write your கருத்தை

Read Full News
  • டிரெண்டிங்கில்
  • சமீபத்தில்
×
உங்கள் நகரம் எது?