சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

உலக ஆட்டோமொபைல் தின வீடியோவில், புதிய சூப்பர்ப் டீஸரை ஸ்கோடா இந்தியா வெளியிட்டது

cardekho ஆல் பிப்ரவரி 02, 2016 09:39 am அன்று பப்ளிஷ் செய்யப்பட்டது

வாகனங்கள் என்பது மனிதனின் வளர்ச்சியின் அளவை சரியான எதிரொலிப்பதாக அமைகிறது. வாகன தொழில்துறையின் கண்டுபிடிப்புகள், ஒருசில காரியங்களுடன் இணையாக செல்கின்றன. ஆட்டோமொபைலின் எளிய துவக்கத்தை நினைவுக்கூறும் வகையில், ஜனவரி 29 ஆம் தேதியை ‘உலக ஆட்டோமொபைல் தினம்' என்று கொண்டாடப்படுகிறது. கடந்த 1886 ஆம் ஆண்டு இந்நாளில் தான், காரல் பென்ஸ் மூலம் முதல் மோட்டார் காருக்கான காப்புரிமை பெறப்பட்டது.

‘கேஸ் மூலம் இயக்கப்படும் வாகனம்' என்ற காப்புரிமையின் மூலம் தயாரிக்கப்பட்ட இந்த முதல் மோட்டார் வாகனம், ஒரு ட்ரை-கார் ஆக இருந்தது. இந்த காரில் இருந்த ஒரு ஒற்றை சிலிண்டர், 4-ஸ்ட்ரோக் என்ஜின் மூலம் 0.75 குதிரை சக்தியை வெளியிட்டு, அதிகபட்சமாக மணிக்கு 16 கி.மீ. வேகத்தில் செல்லும் திறனை கொண்டிருந்தது. இன்றைய தர நிர்ணயத்திற்கு அறவே ஒவ்வாத ஒன்றாக தெரியும் இந்த அளவில் இருந்து தான், பல புதிய கண்டுபிடிப்புகளின் மூலம் நகர துவங்கிய ஆட்டோமொபைல் துறை, இன்று நாம் காணும் நிலையை வந்து எட்டியுள்ளது.

இந்நிலையில் உலகின் மிகப் பழமையான பிராண்டுகளில் செக் குடியரசு நாட்டை சேர்ந்த மாபெரும் தயாரிப்பு நிறுவனமான ஸ்கோடாவும் ஒன்றாக திகழ்கிறது. இந்த வாகனத் தயாரிப்பு நிறுவனம் எப்போதும் காலத்திற்கு முன்னோடியாக, சந்தையின் தேவையை அறிந்து தனது தயாரிப்புகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் உலக ஆட்டோமொபைல் தினத்தன்று, ‘ஸ்கோடாவின் பாரம்பரியம்' (லிஜென்ஸி ஆப் ஸ்கோடா) என்று அவர்கள் அழைக்கும் ஒரு குறும்பட வீடியோவை, ஸ்கோடா இந்தியா நிறுவனம் வெளியிட்டது. செக் குடியரசு நாட்டை சேர்ந்த இந்த வாகனத் தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்புகளின் துவக்கம் முதல் இன்று வரை, அது கடந்து வந்த பாதைகளின் வழியாக இந்த வீடியோ நம்மை அழைத்து செல்கிறது.


இந்த வீடியோவின் காலக்கட்டம் 1899-ல் ஆரம்பித்து, அப்போது அறிமுகம் செய்யப்பட்ட முதல் LK ஸ்லாவியா பைக் மற்றும் டைப் CCD மோடோ-வையும் காட்சிக்கு கொண்டு வருகிறது. அதன்பிறகு ஸ்கோடாவின் தயாரிப்பு பயணத்தின் முக்கிய மைல்கற்களின் வழியாக இந்த வீடியோ நம்மை அழைத்து செல்கிறது. இதில் LK வாய்ட்யூரேட் A, 110, 860, ஒரிஜினல் ஸ்கோடா ராபிட் மற்றும் கடந்தாண்டின் ஆக்டேவியா உள்ளிட்ட எல்லா முக்கிய ஸ்கோடா தயாரிப்புகளும் காட்டப்படுகிறது.

இதில் எங்களின் கவனத்தை ஈர்த்த ஒன்று என்னவென்றால், இந்த வீடியோவின் இறுதியில், 2015 ஸ்கோடா சூப்பர்ப் காரின் டீஸர் வெளியிடப்படுகிறது. புதிய சூப்பர்ப் காரின் டீஸரை, ஸ்கோடா நிறுவனம் அதிகாரபூர்வமான முறையில் வெளியிடுவது இதுவே முதல் முறையாகும்.

வோல்க்ஸ்வேகனின் புதிய MQB பிளாட்பாமில், இந்த புதிய ஸ்கோடா சூப்பர்ப் உருவாக்கப்பட்டுள்ளது. முன்பக்கத்தில் உள்ள என்ஜின், ஒரு 1.8 லிட்டர் மற்றும் 2.0 லிட்டர் TSI பெட்ரோல் மோட்டாரை பெற்றிருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டீசல் என்ஜினை பொறுத்த வரை, தற்போது ஆக்டேவியாவில் பணியாற்றி வருவதும், சோதிக்கப்பட்டு நம்பகமாக உள்ளதுமான 2.0 TDi மோட்டார் அளிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது.

மேலும் வாசிக்க : இந்தோனேசிய வாகன சந்தையில் ஹோண்டா ப்ரியோ RS கார்களின் அறிமுகம் உறுதி - ஹோண்டாவின் துணை நிறுவனம் தகவல்

Share via

Write your கருத்தை

Enable notifications to stay updated with exclusive offers, car news, and more from CarDekho!

டிரெண்டிங் கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
பேஸ்லிப்ட்
Rs.9 - 17.80 லட்சம்*
புதிய வேரியன்ட்
Rs.11.82 - 16.55 லட்சம்*
எலக்ட்ரிக்
புதிய வேரியன்ட்
Rs.44.90 - 55.90 லட்சம்*
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை