ஸ்கார்பியோ தொடர்ந்து ஆதிக்கம்: விற்பனை 5 லட்சத்தை எட்டியது
published on செப் 24, 2015 06:17 pm by cardekho for மஹிந்திரா ஸ்கார்பியோ 2014-2022
- 21 Views
- ஒரு கருத்தை எழுதுக
மஹிந்த்ரா நிறுவனத்தின், வானளாவிய புகழ் பெற்ற அதன் முதல் SUV ரக காருக்கு மேலும் ஒரு பெருமை சேர்ந்துள்ளது. மஹிந்த்ரா ஸ்கார்பியோ காரின் ஒட்டுமொத்த விற்பனை 5 லட்சத்தை அடைந்தது. இந்த பெருமையின் ஒரு பகுதி இந்த காரை வடிவமைத்த வடிவமைப்பாளர்களைச் சாரும். ஏனெனில், ஸ்கார்பியோவை, அந்த நேரத்தில் இருந்த போக்கின்படி வடிவமைத்தது இதன் வடிவமைப்பாளர்களே. மேலும், இந்த 13 வருட காலத்தில் 2 புதிய மேம்பாடுகளை வெளியிட்டுள்ளனர். இதன் மூலமாக, சராசரியாக 48,000 கார்கள் ஒரு வருடத்தில் விற்பனை ஆகி உள்ளன.
ஸ்கார்பியோ, 12 விதமான மாடல்களில் வந்தாலும், 2WD, AWD, MT மற்றும் AT என்கிற விருப்பத் தெரிவுகளில் பிரிக்கப்பட்டுள்ளன. தற்போது, இந்தியா தவிர வெளிநாட்டு சந்தையையும் குறி வைக்கிறது. இந்நிறுவனம், இந்த காரின் எடையைக் குறைக்கவும், புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தவும் அரும்பாடு பட்டுள்ளது. இதன் 2.5 லிட்டர் டீசல் இஞ்ஜின் 75 hp குதிரைத் திறனும், 200 Nm உந்து விசையையும் தருகிறது. மேலும், இதன் 2.2 லிட்டர் இஞ்ஜின் 120 hp குதிரைத் திறன் மற்றும் 280 Nm உந்து விசையையும் உற்பத்தி செய்கிறது.
தற்போது, SUV பிரிவில் அதிகரித்துள்ள போட்டியின் காரணமாக, இந்த காரின் சில அம்சங்களை மாற்றவும், புதிய கூடுதல் அம்சங்களை சேர்ப்பதும் மிகவும் முக்கியமாகிவிட்டது. புதிதாக வந்த SUV ரக கார்களான ஹுண்டாய் கிரேட்டா, ரினால்ட் டஸ்டர், நிஸ்ஸான் டெர்ரனோ மற்றும் ஃபோர்ட் எக்கோ ஸ்போர்ட் ஆகிய கார்கள், ஸ்கார்பியோவின் விற்பனையை சிறிது மட்டுப்படுத்தியுள்ளன. எனவே, புதிய மாற்றங்கள் செய்யப்பட்டதால், இந்த கார் அதிக ஆற்றல் வாய்ந்ததாக மாற்றப்பட்டு, இப்போது இதன் போட்டியாளர்களுடன் மோத தயாராகிவிட்டது போல தெரிகிறது.
மஹிந்த்ரா நிறுவனம், தென் கொரியாவில் உள்ள தனது துணை நிறுவனமான S சாங்யோங்குடன் இணைந்து, புதிய 1.6 அல்லது 2 லிட்டர் பெட்ரோல் டர்போ இஞ்ஜினை அறிமுகப்படுத்த ஆயத்த வேலை செய்து கொண்டிருக்கிறது. இதன் மூலம், அதிக போட்டி உள்ள SUV மாடல்களின் செயல்திறனை மேலும் அதிகமாக்க திட்டமிட்டுள்ளது. இந்த மாடல் எப்போது வெளிவரும் என்ற எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாக இருந்தாலும், இதை சந்தைக்கு கொண்டு வருவதற்கு மூன்றிலிருந்து ஐந்து வருடங்கள் ஆகிவிடும் என்று தெரிகிறது.
0 out of 0 found this helpful