S க்ராஸ் – போட்டிகளிலிருந்து தனித்துவமாக மிளிர்வதர்க்கான காரணங்கள் என்ன?
published on ஆகஸ்ட் 04, 2015 04:45 pm by manish for மாருதி எஸ்-கிராஸ் 2017-2020
- 15 Views
- 2 கருத்துகள்
- ஒரு கருத்தை எழுதுக
தற்பொழுது, க்ராஸ் ஓவர் கார்களின் மேல் மக்களுக்கு உள்ள மோகம் தொடர்ந்து மென்மேலும் அதிகரித்து வருகிறது. சிறிய கார்களின் எதார்த்தமும், கம்பீரமாக ஓடும் SUV இன் தகுதிகளையும் இணைத்து ஒரு புதிய வெற்றி சூத்திரத்தை உருவாக்கித் தயாரிக்கப்பட்டதுதான் இந்த கவர்ச்சிகரமான க்ராஸ் ஓவர் ரக கார்கள். அநேகமாக அனைத்து கார் தயாரிப்பாளர்களும், இந்த வெற்றி சூத்திரத்தை மேற்கொள்கின்றனர். எனவே தான், மாருதி நிறுவனமும் புதிதாக உருவாக்கப்பட்ட, அனைவரையும் கவர்ந்த க்ராஸ் ஓவர் பிரிவில் சேர ஆர்வம் கொள்கிறது.
சுசூக்கியின் குழுமத்திலிருந்து சமீபத்தில் அறிமுகம் ஆன கார் - மாருதி S க்ராஸ். இதனை ஒரு தலைசிறந்த மேம்படுத்தப்பட்ட சிறிய கார் (ஹாட்ச் பேக்) ரகம் என்று மட்டும் நினைத்தீர்கள் என்றால், அதுதான் இல்லை, ஏனெனில், இந்த கார் முற்றிலும் புதிய ரகத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. கவர்ச்சியான S க்ராஸ் கார், க்ராஸ் ஓவர் ரகத்தின் அனைத்து விதமான அருமையான அம்ஸங்களையும் கடந்து மேலும் பல புதிய உத்திகளைப் புகுத்தி துடிப்பான முறையில் வடிவமைக்கப்பட்டு, அனைவரையும் ஈர்க்கிறது. அதன் திறமைகளை அளக்கும் விதத்தில், நாங்கள் S கிராசை அதன் பல்வேறு போட்டியாளர்களுடன், பலவிதமான க்ராஸ் ஓவர் கார்களின் வரையறைகளோடு ஒப்பிட்டு, முடிவுகளை இங்கே கொடுத்துள்ளோம்.
வடிவமைப்பு:
S க்ராஸ் கார்கள், மாருதியின் புதிதாக உருவாக்கப்பட்ட உயர்தரமான விநியோகிஸ்தர் பிரிவான நெக்சா மூலம் மட்டுமே விற்பனை செய்யப்படும். அனுமதிக்கப்பட்ட நெக்சா வணிகர் பிரிவு, சுசூக்கியின் உயர்தரமான தலையாய கார்களைச் சந்தைப்படுத்தி விற்பனை செய்வதற்கே உருவாக்கப்பட்டது. மாருதி நிறுவனம், S க்ராஸ் மாடலை இத்தகைய உயர்தர பிரிவில் வைத்துள்ளதை கொண்டு இந்த காரின் அருமையான தரத்தை நாம் எளிதாக ஊகித்துக் கொள்ளலாம்.
ஏறக்குறைய அனைத்து கார் தயாரிப்பாளர்களும், க்ராஸ் ஓவர் கார்களைத் தயாரித்தாலும், மாருதி சுசூக்கி பிறர் உபயோகப்படுத்திய அதே கோட்பாடுகளை பிரதிபலிக்காமல், தனித்துவமான ஒரு அணுகுமுறையை கையாண்டுள்ளனர். S க்ராஸின் வடிவமைப்பை பிரத்தியேகமாக இருக்கும்படி, இதன் உற்பத்தியாளர்கள் உறுதி செய்துள்ளனர். இந்த காரில், அதிரடி அம்சங்களை நிலைப்படுத்தி உள்ளனர், அதாவது இதன் நீளம் 4.3 மீட்டரில் அமைந்து, பார்க்கும் போதே மிரட்டும் தோரணையில் உள்ளது.
S க்ராஸில், பளபளப்பாக பிரதிபலிக்கும் முகப்பு விளக்குகளும், HID யும், காலை நேரத்திலும் பளிச்சென எரியும் LED விளக்குகளும், பின்புற விளக்குகள் உள்நோக்கி விரிவடைந்து பூட்டின் மூடி வரை வந்து காருக்கு மெருகூட்டுகின்றன.
பிற போட்டியாளர்களைப் போன்று, S க்ராஸ் அதிகப்படியான கிளாடிங்களும், வெளிப்படையாகத் தெரியும் ஸ்கஃப் பிளேட்களும் இல்லாமல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் பழமையான ஜப்பானியர்களின் வடிவமைப்பு, நீண்ட காலம் பழுதில்லாமல் உங்களுக்கு சேவை செய்ய சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. i20 ஆக்டிவ்வின் ஏனோதானோவென்ற நீரில் செய்த சிற்பம் போல எளிதில் பழுதாகிவிடும் வடிவமைப்பைப் விடவும், முரட்டுத்தனமான வேறு சில க்ராஸ் ஓவர் கார்களை விடவும், S க்ராஸ் அமைப்பு அனைவரையும் கவரும் விதத்திலும், நீண்ட வருடங்கள் உங்களுடன் பயணம் செய்யவும் தகுந்ததாக உள்ளது.
எப்போதுமே கருப்பு வண்ணம் SUV ரக கார்களுக்கு மிகவும் பொருத்தமாகவே இருக்கிறது. சுசூக்கி நிறுவனமும் அதனை உணர்ந்திருக்கிறது. மேலும், S க்ராஸில் முகப்பு பெட்டி (டாஷ் போர்டு) நேர்த்தியாக பொருத்தப்பட்டுள்ளது. உறுதியான நெகிழியால் அமைக்கப்பட்ட பர்கர் அடுக்கு போன்ற அமைப்பின் நடுவே, மென்மையான நெகிழியால் அமைக்கப்பட்ட இந்த முகப்பு பெட்டி செம்மையாகப் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மைய கட்டுப்பாட்டு பகுதியும் (சென்ட்ரல் கன்ஸோல்) AC காற்று வெளியேற்றியும் (வெண்ட்), வெள்ளி முலாம் பூசப்பட்டு, S க்ராஸுக்கு ஒரு தனி அழகைக் கொடுக்கிறது.
ஹுண்டாயின் i20 ஐ விட மாருதி S க்ராஸின் சக்கர அளவு 30 mm பெரியதாக உள்ளதால், இந்த பெரிய காரின் உள்ளே கால்களை சவுகர்யமாக வைத்துக் கொள்ள முடியும். இது கடுமையான பயணத்தையும் எளிதாக்கும். இது தவிர, இந்த காரில் 353 லிட்டர் கொள்ளளவு கொண்ட பூட் பகுதி உள்ளது. இந்த அளவு, மற்ற எந்த க்ராஸ் ஓவர் கார்களிலும் இல்லாதது போல கணிசமாக பெரிதாக உள்ளது. உட்பகுதியில், தொடு திரை (டச் ஸ்கிரீன்) இன்ஃபோடைன்மெண்ட் அமைப்பு, புளு டூத் வசதி, AUX வசதி மற்றும் பயண வழிகாட்டும் சாதனம் ஆகிய அனைத்து வசதிகளும் இணைக்கப்பட்டுள்ளன. வேகத்தை அறிந்து தானியங்கும் பூட்டு, சீர் வேக கட்டுப்பாட்டு வசதி மற்றும் மென்மையான தோலினால் ஆன இருக்கைகள் போன்ற முதல் தர சொகுசான வசதிகளும் S க்ராஸில் பொருத்தப்பட்டு, சொகுசாக பயணம் மேற்கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அம்சம்:
க்ராஸ் ஓவர் தர வரிசையில் உள்ள மற்ற பிற போட்டியாளர்களைப் போலவே, S க்ராஸிலும், ஓட்டுனருக்கும், பயணிகளுக்கும் பாதுகாப்பு காற்றுப் பைகள் வழங்கப்பட்டு பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்கின்றனர். இந்த ஜப்பானியர்களின் க்ராஸ் ஓவரில் ABS வசதியும் உண்டு. இதன் நான்கு சக்கரங்களிலும், தனித்தனியாக வட்டில் முட்டு (டிஸ்க் ப்ரேக்) பொருத்தி, பாதுகாப்பை மேலும் பலப்படுத்துகின்றனர். ஆனால், வாகனச் சந்தையில் உள்ள பிற க்ராஸ் ஓவர்களில் முன்னிரு சக்கரங்களில் மட்டுமே வட்டில் முட்டுகள் (டிஸ்க் ப்ரேக்) பொருத்தப்பட்டுள்ளன, பின்னிரு சக்கரங்களில் உருளை முட்டுகள் (ப்ரேக் ட்ரம்) மட்டுமே உள்ளன.
ஓடும் திறன்:
மாருதி S க்ராஸ் இரு மாறுபட்ட இஞ்ஜின் மாடல்களில் வருகிறது, ஃபியட்டின் தயாரிப்பான 90bhp 1.3 லிட்டர் டீசல் இஞ்ஜின் அல்லது 118 bhp @ 3750 rpm திறனுடனும், 320 Nm முறுக்கு விசையையும் கொண்ட சக்தி வாய்ந்த 1.6 லிட்டர் டீசல் இஞ்ஜின் பொருத்தப்பட்டு வருகிறது. இந்த பிரிவில் வரும் மற்ற நிறுவன கார்கள் அனைத்தும் 67 முதல் 93 bhp திறன் கொண்டே வருவதால் இஞ்ஜின் திறன் அடிப்படையில் S க்ராஸ் தனக்கென ஒரு தனி இடத்தை தக்க வைத்து கொள்ளும் என்று நம்பப்படுகிறது. இந்த காரின் உட்சபட்ச திறனை மிக குறைந்த அளவான 1500 rpm கொண்டே அடைந்து விடுகிறது. மேலும் இது 6 வேக சக்தியூட்டல் அமைப்பை கொண்டு வருகிறது. இந்த காரின் பயன்பாட்டு முறை மிகவும் எளிமையாகவும், அனைவரும் விரும்பும் விதமாகவும் உள்ளது,
இதன் ஓட்டு சக்கரம் (ஸ்டியரிங் ) அதிக தூர வெளியூர் பயணத்திற்கும், ஊருக்கு உள்ளேயே செல்வதற்கும் ஏற்ப, சீரான முறையில் இயக்கும் வகையில் பொருத்தபட்டுள்ளது. குறிப்பாக இந்த மேம்பாட்டிற்கு காரணம், இந்த பிரிவில் உள்ள மற்ற கார்கள் கொடுக்கும் செயற்கையாக ஓட்டும் உணர்வு இல்லாமல், மிருதுவான அதிர்வு தாங்கிகளை (சஸ்பென்சர்) கொண்டு S க்ராஸ் மனதிற்கினிய அனுபவத்தை வழங்குகிறது. மேலும் இதன் அகண்ட சக்கரம் வாகன ஓட்டுனர்களுக்கு மிகுந்த நம்பிக்கையை அளிக்கிறது.
எரிபொருள் திறன்:
உண்மையைச் சொல்வதென்றால், suv வகை கார்களின் வசதிகளை கொடுக்க கூடிய ஒரு ஹாட்ச்பேக் கார் கட்டாயமாக சிக்கனமான எரிபொருள் சக்தியை வழங்க வேண்டும். மாருதி 1.6 லிட்டர் டீசல் வகை S க்ராஸ் கார் 22.7 கி மீ / லி என்ற சிறப்பான செயல்திறனை கொடுக்கும் வல்லமை உடையது. இந்த மதிப்பீட்டின் மூலம் முதல் இடத்தை பிடித்த டொயோட்டா எட்டியாஸ் க்ராசின் 23.6 கி மீ / லி என்ற முதன்மை செயல்திறனை தரவல்ல காருக்கு அடுத்த இரண்டாவது இடத்தையே S க்ராஸ் பெற்றுள்ளது. எட்டியாஸ் க்ராஸ் காரை விட இரு மடங்கு அதிக உந்துசக்தியை கொண்ட S க்ராஸ் கார் 0.9 கி மீ / லி என்ற சிறிய வித்தியாசத்தை மிக சாதாரணமாக சமாளித்து விடும்.
விலை விவரம்
அனைத்து வசதிகளையும் கொண்ட S க்ராஸ் மற்றும் பெரிய கூட்டமைப்பு சேவை தர கூடிய மாருதி நிறுவனம் ஆகிய இரண்டையும் கருத்தில் கொண்டு பார்க்கும் போது, S க்ராஸ் இன் விலை, மற்ற கார்களின் விற்பனையை பின்னுக்கு தள்ள கூடிய வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்குரிய விலையாகவே இருக்கும் என எதிர்பார்க்கபடுகிறது. S க்ராஸ் வாகனம் நமக்கு, கச்சிதமான SUV வகையில் உள்ள வசதிகள் மற்றும் க்ராஸ் ஓவர் சிறிய ரக கார் (ஹாட்ச் பேக்) வகையில் உள்ள வசதிகள் ஆகிய இரண்டையும் சேர்த்தே வழங்குகிறது. இதான் காரணமாகவே, ரினால்ட் டஸ்டரை விட S க்ராஸ் 1.6 லிட்டர் வகை விலை குறைவாக இருப்பதற்கும், S க்ராஸ் 1.3 லிட்டர் வகை ஹுண்டாயின் i20 ஆக்டிவ் விலைக்கு போட்டியாக இருப்பதற்கும் காரணமாக உள்ளது.
சுருக்கமாக கூறினால், நாம் நீண்ட காலமாக க்ராஸ் ஓவர் பிரிவிற்கு வருகை தரும் மாருதிக்காக காத்து கொண்டிருந்தோம், அந்த பொறுமைக்கு சிறப்பான மதிப்பும் விருந்தும் காத்திருக்கிறது. மாருதி S க்ராஸ் தலை சிறந்த சக்தியையும், நல்ல இட வசதியையும் மற்றும் பல சிறப்பம்ஸங்களையும் நமக்கு அளித்துள்ளது. இது, போட்டிகளில் இருந்து வித்தியாசமாக தனித்து சிறப்பாக தெரிவதற்கு மட்டுமல்லாமல் ஒரு புதிய பிரிவை தனக்காக ஏற்படுத்தி கொள்வதற்கும் உறுதுணையாக உள்ளது.
கீழே உள்ள சிறப்பு வல்லுனர்களின் மாருதி S க்ராஸ் இன் மதிப்பீட்டு திரை விமர்சனத்தை பார்க்கவும்:
0 out of 0 found this helpful