• English
  • Login / Register

124 -வது மஹிந்த்ரா க்ரேட் எஸ்கேப் நிகழ்ச்சி: அறிக்கை மற்றும் படங்கள்

published on ஆகஸ்ட் 26, 2015 04:55 pm by arun

  • 21 Views
  • ஒரு கருத்தை எழுதுக

இந்தியாவில் மிகவும் பிரபலமான பாதையில்லா வழியில் வாகனங்களை ஒட்டி சாகசங்கள் புரியும் ‘மஹிந்திரா க்ரேட் எஸ்கேப்’ 124-வது நிகழ்ச்சி, லோனாவலாவில், வெற்றிகரமாக சென்ற வார இறுதியில் முடிந்தது. கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்ட மஹிந்த்ராவின் 4WD வாகனங்கள் இந்நிகழ்ச்சியில் காடு மேடு, சேறு சகதி பார்க்காமல் பல்வேறு நிலப்பகுதிகளில் சுற்றித்திரிந்தன.

பொலிரோவிலிருந்து XUV வரை அனைத்து வாகனங்களுக்கும், அந்த கரடு முரடான பாதையை சமாளிப்பது மிகப் பெரிய சவாலாக இருந்தது. இந்த தொடரணியின் பெரும்பான்மையான பகுதியை மஹிந்த்ராவின் தார் கைப்பற்றியது. இது தடைகளைத் தாண்டும் விதம் அசாதாரணமானதாக இருந்தது. இதற்கு ஏன் ஒரு மலை ஆட்டின் பெயரை வைத்தனர் என்பதை கரடு முரடான பாதையை எளிதாக கடந்த விதத்திலிருந்து நன்கு விளங்குகிறது. 2013 இல் தொடங்கப்பட்ட காலத்திலிருந்து, மஹிந்திராவின் இனிய சாலை டிராஃபி, கடுமையான போட்டியை கண்டிருக்கிறது. அனைத்து பங்கேற்பாளர்களும், பல்வேறு நிலைகளில் உள்ள தடைகளைக் கடந்து, எப்படிப்பட்ட வழிகளிலும் வாகனங்களை சாதுர்யமாக ஓட்டும் தங்களது திறமையை, இந்த நிகழ்ச்சி மூலம் நிரூபிக்கும் ஒரு வாய்ப்பு கிடைக்கின்றது. 

இந்த முறை, பங்கேற்பாளர்கள் மூன்று விதமான தடைகளை கடக்கும்படி இருந்தது. அது முறையே ஸ்ட்ரீம் கிராசிங், கிளாசிக் ஸ்லஷ் பிட் மற்றும் ராக் கிரால் ஆகும். அதாவது, அவர்கள் ஆற்று படுகைகளையும், கரடு முரடான பாறை நிறைந்த வழிகளையும், மற்றும் சகதி நிறைந்த குழிகளையும், வாகனங்களை ஓட்டும் போது, சமாளிக்க வேண்டியிருந்தது.

 

பந்தைய முடிவுகள்:

ஸ்டாக் வகை:

வெற்றியாளர் – கிருஷ்ணா பாபே

இரண்டாம் நிலை வெற்றியாளர் – அமோல் சேத்தி

மாடிஃபைட் வகை:

வெற்றியாளர் – தேஜஸ் ஷிண்டோல்கர்

பெண்கள் பிரிவு:

வெற்றியாளர் – டாக்டர் வாணி பார்மர் மஹிந்திரா & மஹிந்திரா லிமிடெட் நிறுவனத்தின் தானியங்கி பிரிவின் தலைமை மார்கெட்டிங்க் அதிகாரியான விவேக் நாயர், இந்த விழாவில் பேசிய பொது, “வார இறுதிகளில், கரடு முரடான பாதையில்லா இனிய சாலை பந்தயங்களில் பங்கேற்பவர்களுக்கு, லோனாவாலா எப்போதும் சிம்ம சொப்பனமாக இருக்கிறது. இந்த பகுதியின் எழில் கொஞ்சும் இயற்கை அழகும் சவாலான நிலப்பரப்பும், இத்தகைய கடுமையான பந்தையங்களுக்கு பொருத்தமாக உள்ளன. எனவே, மஹிந்த்ராவின் க்ரேட் எஸ்கேப் விழா இந்த முறை லோனாவாலாவில் நடைபெறுவது, இங்கு உள்ள இயற்கை வளத்தை எங்களின் வாடிக்கையாளர்கள் முழுமையாக அனுபவித்துக் கொண்டே, கடுமையான மற்றும் முரட்டுத்தனமான எங்களது தயாரிப்பை சோதனை செய்வதற்கு ஒரு மிகச் சிறந்த வாய்ப்பாக உள்ளது. பல ஆண்டுகளாக, க்ரேட் எஸ்கேப் நிகழ்ச்சி இந்தியாவின் மிகவும் பரபரப்பான சாலை நிகழ்வுகளில் ஒன்றாக இருக்கிறது. இந்த முறையும், பரபரப்புக்கு எந்த குறைவும் இல்லாமல், ‘மனிதன் மற்றும் இயந்திரம்’ என்ற இரண்டு இயற்கை நியதிக்கும் உள்ள வரம்புகளை தீவிரமாக சோதனை செய்தது போல ஆர்ப்பாட்டமாக இருந்தது,” என்று கூறினார். 

ஹைத்ராபாத், கோட்டயம், சென்னை, சண்டிகர், சாக்லெஷ்பூர் மற்றும் குர்கான் போன்ற இடங்களில் நடக்க உள்ள க்ரேட் எஸ்கேப் நிகழ்ச்சியில் வெற்றி பெறவிருப்பவர்களுடன், தற்போது நடந்து முடிந்த லோனாவாலா க்ரேட் எஸ்கேப் மற்றும் ஷில்லாங், கோவா, மற்றும் நாக்பூர் க்ரேட் எஸ்கேப் நிகழ்ச்சியில் வெற்றி பெற்றவர்கள் இணைந்து, மீண்டும் ஒருவருக்கொருவர் இறுதி போட்டியில் எதிர்த்து போட்டியிட்டு வெல்வர்.

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your கருத்தை

Read Full News

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience