அடுத்த மாத இறுதியில், புதுப்பிக்கப்பட்ட டஸ்டர் அறிமுகம் செய்யப்பட வாய்ப்புள்ளது!
ரெனால்ட் டஸ்டர் 2016-2019 க்கு published on பிப்ரவரி 17, 2016 02:35 pm by manish
- 8 பார்வைகள்
- ஒரு கருத்தை எழுதுக
சமீபகால பிரபல கண்காட்சியான 2016 இந்தியன் ஆட்டோ எக்ஸ்போவில், பிரெஞ்சு வாகனத் தயாரிப்பாளரான ரெனால்ட் நிறுவனம் மூலம் மிகவும் மதிப்பிற்குரிய க்விட் ஹாட்ச்பேக்கின் சிறப்பு பதிப்புடன் சேர்த்து, புதுப்பிக்கப்பட்ட 2016 டஸ்டரும் காட்சிக்கு வைக்கப்பட உள்ளது. இந்த பிரிவின் மீது ஆதிக்கம் செலுத்தி வரும் புதுப்பிக்கப்பட்ட கச்சிதமான SUV-யின் ஒரு அரங்கேற்றமாக இது அமைந்தது. இந்தியன்ஆட்டோபிளாக் உடனான ஒரு பேட்டியில் பேசிய ஒரு ரெனால்ட் நிறுவன நிர்வாகி, இந்த AMT டஸ்டருக்கான ஊடகம் சார்ந்த பணிகள், வரும் மார்ச் மாதத்தின் இரண்டாவது வாரத்தில் நடைபெற போவதாகவும், இந்த காரின் விலையை இந்நிறுவனம் அறிவிக்கும் எனவும், அவர் உறுதிப்படுத்தினார். இதை வைத்து பார்க்கும் போது, அடுத்த மாதத்தின் கடைசி வாரத்தில் புதுப்பிக்கப்பட்ட இந்த ரெனால்ட் டஸ்டரின் அறிமுகம் நடைபெறலாம் என்று தெரிகிறது.
இந்த காரின் ஆற்றலங்களில் எந்த மாற்றமும் செய்யப்படாமல் அப்படியே தொடர உள்ளது. இதனுடன் புதுப்பிக்கப்பட்ட டஸ்டரில் பிராண்டின் புதிய 6-ஸ்பீடு ஈசி-R AMT கியர்பாக்ஸை கொண்டிருக்கும். இந்த காரின் வெளிப்புறம் மற்றும் உட்புறம் ஆகிய இவ்விரண்டிலும் செய்யப்பட்டுள்ள மற்ற மேம்பாடுகளையும் உட்கொண்டுள்ளது.
அதிகம் கவனிக்கப்படாத நுட்பமான விஷயங்களையும் சற்று ஆழ்ந்து பார்க்கும் போது, இந்த கச்சிதமான SUV-யின் தற்போதைய மாடலில் காணக் கிடைக்கும் ரெனால்ட் நிறுவனத்தின் 1.5-லிட்டர் 4-சிலிண்டர் K9K டீசல் என்ஜினே, இந்த காருக்கு ஆற்றலை அளித்து இயக்க உள்ளது. இதனுடன் ஒரு தேர்விற்குரிய 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் மற்றும் 6-ஸ்பீடு AMT ஆகியவை இணைந்து செயலாற்ற உள்ளன. அதே நேரத்தில், உயர்தரமான 110PS மாடல்களில் பிரத்யேகமாக, இந்த AMT-யும் அளிக்கப்பட உள்ளது.
ஒரு ஒற்றை ஸ்லாட் கிரில், புதுப்பிக்கப்பட்ட ஹெட்லெம்ப் மற்றும் டெயில்லைட் கிளெஸ்டர் உள்ளிட்டவை அழகியல் மேம்பாடுகளில் முக்கியத்துவம் பெறுகின்றன. இந்த புதுப்பிக்கப்பட்ட டஸ்டரின் உட்புறத்தில், நவீன மீடியாNAV இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்தை கொண்டு, ஒரு 7 இன்ச் டிஸ்ப்ளே அளிக்கப்படுகிறது. இதனுடன் கூடுதல் அம்சங்களான ப்ளூடூத் டெலிபோனி மற்றும் க்ரூஸ் கன்ட்ரோல் ஆகியவற்றை கேபினின் உள்ளே கொண்டுள்ளது.
மேலும் வாசிக்க
- ரெனால்ட் கிவிட் இக்னிஸை முந்துமா?
- அடுத்த மாதம் முதல் ரெனால்ட் க்விட் கார்கள் பிரேசில் நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட உள்ளன.
- Renew Renault Duster 2016-2019 Car Insurance - Save Upto 75%* with Best Insurance Plans - (InsuranceDekho.com)
- Loan Against Car - Get upto ₹25 Lakhs in cash
0 out of 0 found this helpful