ரியர்-வீல்-டிரைவ் லம்போர்கினி ஹுராகேன்: லாஸ் ஏஞ்சல்ஸ் ஆட்டோ ஷோவில் அரங்கேற்றம் காணலாம்!
published on நவ 09, 2015 02:42 pm by bala subramaniam for லாம்போர்கினி ஹூராகான்
- 14 Views
- ஒரு கருத்தை எழுதுக
சென்னை:
சில நம்பத்தக்க தகவல்கள் உறுதியாகும் பட்சத்தில், அடுத்து வரவுள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் ஆட்டோ ஷோவில், லம்போர்கினி ஹுராகேனின் ரியர்-வீல்-டிரைவ் கார் அறிமுகம் செய்யப்படலாம் என்று தெரிகிறது. லாஸ் ஏஞ்சல்ஸில் ஒரு சர்வதேச தயாரிப்பை வெளியிடுவதற்கான அழைப்பிதழை, லம்போர்கினி அனுப்பியுள்ள நிலையில், இதன் RWD ஹுராகேன் மாடலின் அறிமுகத்திற்கே அதிக சாத்தியக்கூறுகள் இருப்பதாக தெரிகிறது. இந்த தகவல்களை ஒரு சாதாரண வதந்தி என்று எண்ண முடியாத வகையில், சில ஆதாரங்களை அடிப்படையாக கொண்டுள்ளது. ஏனெனில் இந்த இத்தாலி நாட்டைச் சேர்ந்த பொங்கி வரும் காளையை அடையாள சின்னமாக கொண்ட நிறுவனம், ஹுராகேனின் முன்னோடியான கல்லார்டோவிற்கு ஒரு ரியர்-வீல்-டிரைவ் மாடலை வெளியிடவில்லை.
தற்போது பொதுமக்களுக்கு அளிக்கப்படும் ஹுராகேன் மாடல்களில், LP 610-4 மற்றும் LP 610-4 ஸ்பைடர் போன்றவை ஆல்-வீல்-டிரைவ் தேர்வுகளில் மட்டுமே கிடைக்கின்றன. இந்த இரு மாடல்களும், 5.2-லிட்டர் V10 என்ஜின் மூலம் இயக்கப் பெற்று, 602 hp மற்றும் 560 Nm முடுக்குவிசையை வெளியிடுகிறது. மேற்கூரை கொண்ட பதிப்பு 3.2 வினாடிகளில், மணிக்கு 100 கி.மீ வேகத்திற்கு சீறி பாயும் நிலையில், ஸ்பைடர் அதே வேகத்தை எட்ட 3.4 வினாடிகளை எடுத்துக் கொள்கிறது. ஹுராகேனில் ஏற்கனவே ரேர்-வீல்-டிரைவ் இருந்தாலும், அவை டிராக்குகளில் ஓடக்கூடிய LP 620-2 சூப்பர் ட்ரோஃபியோ வடிவத்தில் மட்டுமே கிடைக்கிறது.
AWD வகைகளுடன் ஒப்பிட்டால், RWD ஹுராகேன் எடைக்குறைவாக இருப்பதால், அதிக சக்தி வாய்ந்ததாக உள்ளது. அநேகமாக இதை தொடர்ந்து ஒரு ஸ்பைடர் பதிப்பு கூட வர வாய்ப்புள்ளது. எனவே இது குறித்த கூடுதல் விபரங்களுக்கு, இந்த இணையதளத்தோடு இணைந்து இருங்கள்.
இதையும் படியுங்கள் :
0 out of 0 found this helpful