• English
  • Login / Register

சிவப்பு நிற வண்ண கலவையில் நிசான் விஷன் GT காட்சிக்கு வைப்பு

published on அக்டோபர் 30, 2015 01:46 pm by manish

  • 19 Views
  • ஒரு கருத்தை எழுதுக

ஜெய்ப்பூர்:

Nissan 2020 Vision Concept red wallpaper pics

விஷன் கிராண் டுரிஸ்மோ தொழில்நுட்பம் மீதான பணியை துவங்கி, சுமார் ஒரு ஆண்டு அல்லது அதற்கும் மேலாக நிசான் நிறுவனம் பணியாற்றி வருகிறது. இந்நிறுவனத்தின் துணிவுமிக்க செயலாற்றல், 2020 விஷன் தொழில்நுட்பத்திற்கான விடையாக அமையும் என்று தெரிகிறது. சாலைகளை வந்து எட்டாத மற்ற தொழில்நுட்பங்களை போல இல்லாமல், இதை ஒத்த அழகியல் அம்சங்களை கொண்டு அடுத்தப்படியாக காட்சிக்கு வைக்கப்பட உள்ள GT-R-ன் மூலம் நிசான் நிறுவனத்திற்கு ரசிகர்களின் பாராட்டுகள் கிடைக்க வாய்ப்புள்ளது. 2020 விஷன் தொழில்நுட்பத்திற்கு கிடைத்த சிறந்த சாதகமான வரவேற்பை தொடர்ந்தே, இந்த காரியம் செயலுக்கு வந்துள்ளது. ஒரு புதிய நிறத் திட்டம் மற்றும் மற்ற நுட்பமான அழகியல் மேம்பாடுகள் ஆகியவற்றை கொண்டு, 2015 டோக்கியோ மோட்டார் ஷோவில், இந்த தொழில்நுட்பம் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

புதிய நிறத் திட்டமான ‘பயர் நைட் ரேட்’டையும், ஒட்டுமொத்த வடிவமைப்பில் அதிகளவிலான கார்பன் ஃபைபரின் பயன்பாட்டையும் காண முடிகிறது. முன்புறத்தில் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த நிசான் ‘V’ அம்சத்தை கொண்டுள்ளது. இந்த கார் இன்னும் ஒரு மிகுந்த தொழில்நுட்பம் கொண்டதாக இருக்கிறது. ஆனால் இந்த காரை விரைவில் பொதுமக்கள் மறந்துவிடக் கூடாது என்பதில் இந்த ஜப்பான் வாகன தயாரிப்பாளர் நிறுவனம் உறுதியாக உள்ளது.

இந்த தொழில்நுட்பத்தை குறித்து நிசான் அளித்துள்ள விளக்கத்தில், “எதிர்காலத்தில் ஒரு அதிக செயல்திறன் கொண்ட நிசான் எப்படி காட்சியளிக்கும் என்பதற்கான ஒரு பார்வை. மேலும், இதில் செயல்திறன் மீதான எங்களின் பேரார்வத்தை எப்போதும் பகிர்ந்து உள்ளோம் என்பது பார்வையாளர்களுக்கான அடுத்த செய்தி ஆகும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய GT-R-ல் ஒரு ட்வின்-டர்போ V6-யை பெற்று, சுற்றுச்சூழலுக்கு இடையூறு ஏற்படுத்தாத ஹைபிரிடு தொழில்நுட்பத்துடன் இணைந்து செயல்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த GT-R-யின் ஒரு முழுமையான எலக்ட்ரிக் பதிப்பை கூட இந்நிறுவனம் வெளியிட வாய்ப்புள்ளது. அதே நேரத்தில் இவ்விரண்டு கார்களும், தகுதியில்லாத தன்மைகளை கொண்டிருக்காமல், ஒரு உண்மையான GT-R பாரம்பரியத்தை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க:

வெளியிட்டவர்
was this article helpful ?

Write your கருத்தை

Read Full News

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience