கிராஸ்ஓவர் தொழில்நுட்பத்தின் முதல் படத்தை (டீஸர்) அதன் ரசிகர்களுக்கு நிசான் வெளியிட்டது
published on செப் 08, 2015 03:49 pm by nabeel
- 21 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஜெய்ப்பூர்:
பிராங்போர்ட் மோட்டார் ஷோ துவங்க, நாட்கள் நெருங்கி வரும் நிலையில், இந்த ஷோவில் ரசிகர்கள் காண ஆவலோடு எதிர்பார்க்கும் தயாரிப்புகளின் முதல் படங்களை (டீஸர்), வாகன தயாரிப்பாளர்கள் வெளியிட்டு வருகின்றனர். ஹூண்டாயை தொடர்ந்து நிசான் நிறுவனமும், இந்த மோட்டார் ஷோவில் அறிமுகப்படுத்த உள்ள Z கிராஸ்ஓவர் தொழில்நுட்பத்தின் முதல் படம் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த பட வெளியீட்டின் மூலம் Z சீரிஸ் ரசிகர்களை ஈர்த்து, ஆட்டோ ஷோவில் தங்கள் தயாரிப்பின் கண்காட்சிக்கு அதிக வாகன விரும்பிகளை கவர்ந்திழுக்க, நிசான் நிறுவனம் நோக்கம் கொண்டுள்ளது.
நிசான் மற்றும் ரெனால்ட் நிறுவனங்களின் கூட்டு முயற்சியில் உருவாக்கப்பட்ட காமன் மாடியூல் பேமலி (CMF) பிளாட்பாமை, இந்த புதிய கிராஸ்ஓவரும் அடைப்படையாக கொண்டுள்ளது. அடுத்து வர உள்ள ரெனால்ட் க்விட் காரும், இதே பிளாட்பாமை தான் பயன்படுத்த உள்ளது. இந்த பிளாட்பாம் ஹைபிரிட் தொழில்நுட்பங்களை உட்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டது என்பதால், இந்த தொழில்நுட்பத்திலும் ஒரு ஹைபிரிட் பவர்ட்ரெயின் காட்சிக்கு வைக்கப்படலாம் என தெரிகிறது. இதன் மூலம் இந்த கார் உருவ அமைப்பில் நிசான் கியூவேஸ்கை மற்றும் நிசான் ஜூக் ஆகியவற்றிற்கு இடைப்பட்ட அளவில் இருக்கலாம் என்று புரிந்து கொள்ளலாம். இந்த காரில் 1.2 மற்றும் 1.5-லிட்டர் நான்கு-சிலிண்டர் என்ஜின்கள் மூலம் உயர்தர பதிப்புகளும், செயல்திறன் மாறுபட்ட பதிப்பில் 1.6-லிட்டர் டர்போசார்ஜ்டு என்ஜினையும் கொண்டு இயங்குகிறது. அமெரிக்க வாகன சந்தையில் கிராஸ்ஓவர்கள் பெரும் பகுதியை ஆக்கிரமித்துள்ள நிலையில், இந்த புத்தம் புதிய மாடலுக்கு இங்கு ஒரு இனிய இடத்தை பெற்று தர நிசான் நிறுவனம் நினைக்கிறது. இந்த கிராஸ்ஓவருக்கு ஒரு கூபேயின் வெளிபுற அமைப்பின் அம்சங்கள் காணப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் நிசான் நிறுவனத்தின் செயல்திறனை சார்ந்த சீரமைப்பு பிரிவான நிஸ்மோ ஆற்றியுள்ள பணிகளும் இதில் சேரக் கூடும்.
கடந்த வாரத்தில், 2015 பிராங்போர்ட் மோட்டார் ஷோவில் அணிவகுக்க உள்ள BMW 225xe மற்றும் நவீன முக்கியத்துவம் வாய்ந்த 2016 7 சீரிஸ் ஆகியவற்றை BMW நிறுவனம் அறிவித்தது. அதேபோல ஹூண்டாய் நிறுவனம் தனது விஷன் கிரான் டுரிஸ்மோ பணித்திட்டத்தின் முதல் படமாக, சில படங்களை வெளியிட்டது. இதை தொடர்ந்து புக்கார்டி நிறுவனமும் தனது விஷன் கிரான் டுரிஸ்மோ பணித்திட்டத்தின் படங்களை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.