நிஸ்ஸான் நிறுவனம் சர்வதேச கிரிக்கெட் வாரியத்துடன் 8 வருட நிதியுதவி (ஸ்பான்சர்ஷிப்) ஒப்பந்ததில் கையெழுத்திட்டுள்ளது
published on அக்டோபர் 15, 2015 01:20 pm by raunak
- 17 Views
- ஒரு கருத்தை எழுதுக
2023 -ஆம் ஆண்டு வரை நடக்கவுள்ள ICC கிரிக்கெட் உலக கோப்பை மற்றும் உலக கோப்பை டுவென்டி 20 போட்டிகளை, ஜப்பானிய வாகன தயாரிப்பாளரான நிஸ்ஸான் நிறுவனம் பொறுப்பேற்று நடத்தவுள்ளது.
நிஸ்ஸான் நிறுவனம் மற்றும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இணைந்து, 2023 –ஆம் ஆண்டு வரை செல்லுபடியாகும், எட்டு வருட ஒப்பந்த உடன்படிக்கையில் கையெழுத்திட்டனர். இந்த உடன்படிக்கையின் அடிப்படையில், ICC கிரிக்கெட் உலக கோப்பை, ICC சாம்பியன் ட்ராஃபி, ICC உலக டுவென்டி 20, 19 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான கிரிக்கெட் போட்டி மற்றும் தகுதி சான்று நிகழ்ச்சிகள் போன்ற அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளையும், நிஸ்ஸான் நிறுவனமே உலகளவில் பொறுப்பேற்று நடத்தவுள்ளது. ICC -யின் சர்வதேச பங்காளி என்ற முறையில், அனைத்து விதமான ICC நிகழ்ச்சிகளின் இடத் தேர்வுகள், செயல்பாடுகள், ஒளிபரப்பு மற்றும் டிஜிட்டல் ரைட்ஸ் என அனைத்து வித உரிமைகளையும் நிஸ்ஸான் நிறுவனமே பெறுகிறது.
“நிஸ்ஸான் நிறுவனம் எப்போதும் ஆச்சர்யமூட்டும் புதுமையைச் செய்து கொண்டே இருப்பதில் வல்லமை பெற்றது,” என்று, நிஸ்ஸான் நிறுவனத்தின் கார்பரேட் துணை தலைவர் மற்றும் சர்வதேச மார்கெட்டிங் மற்றும் பிராண்ட் நிர்வாகத்தின் தலைவருமான ரோஎல் டி விரீஸ், தனது உரையில் பெருமையுடன் குறிப்பிட்டார். “ICC பங்காளிகளான எங்களுக்கு, குளோபல் ட்ராஃபி டூர் நிகழ்ச்சி, இன்டர்நேஷனல் பிளாக் பேரர் நிகழ்ச்சி மற்றும் நேரலை நிகழ்ச்சிகளை நடத்தும் உரிமை உள்ளது. எனவே, இந்த நிகழ்ச்சிகளின் நேரடி ஒளிபரப்பில், இவ்விளையாட்டுகளை முன்னின்று பார்ப்பதைப் போன்ற மேம்பட்ட அனுபவத்தை கிரிக்கெட் ரசிகர்களுக்குப் புதுமையான முறையில் வழங்கி, அவர்களை உற்சாகப்படுத்தத் திட்டமிட்டுள்ளோம்,” என்று அவர் கூறினார்.
“உலகின் மிகவும் மதிப்புமிக்க மற்றும் பிரபலமான போட்டிகளில் பங்கெடுத்துக் கொள்வதிலும், உலக கிரிக்கெட் குடும்பத்தில் முக்கிய அங்கம் வகிப்பதிலும் நாங்கள் மிகுந்த உற்சாகமும், மட்டற்ற மகிழ்ச்சியும் அடைந்துள்ளோம். நாங்கள் தயாரித்த சிறப்பான கார்களையும் மற்றும் இந்த பிரபல போட்டிகள் நடக்கும் போது ஏற்படும் உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும், உலகம் முழுவதும் பரந்து விரிந்துள்ள கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில், பகிரவேண்டும் என்பதே, எங்களின் முக்கிய நோக்கமாகும். தங்களது செயல்களில் பேரார்வம் கொண்ட மக்களால் மட்டுமே, இந்த உற்சாகம் மிகுந்த போட்டிகளையும், சிறந்த செயல்திறனுடைய கார்களையும் உருவாக்க முடியும். எனவே, நாங்கள் இரண்டையும் செய்வதில் பேரார்வம் கொண்டுள்ளோம்” என்று கூறினார்.
சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் தலைமை நிர்வாகியான டேவிட் ரிச்சர்ட்சன், இந்த புதிய ஒப்பந்தத்தை பற்றி கருத்து தெரிவித்த போது, “மதிப்பு மிகுந்த நிஸ்ஸான் நிறுவனத்தை எங்களின் உலகளாவிய பங்காளியாக ஏற்றுக்கொண்டு, அவர்களை வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். அடுத்து வரும் எட்டு ஆண்டுகளில் நடக்கவுள்ள அனைத்து ICC உலக நிகழ்ச்சிகளையும், நிஸ்ஸான் நிறுவனத்துடனான வலுவான நட்பு கூட்டணியுடன் இணைந்து நடத்த ஆவலுடன் இருக்கிறோம்” என்று கூறினார்.
மேலும் விவரம் அறிய:
0 out of 0 found this helpful