நிசான் பேட்ரோல் டெஸ்சர்ட் பதிப்பு: துபாயில் அரங்கேற்றம் காண்கிறது
published on நவ 17, 2015 07:31 pm by bala subramaniam
- 15 Views
- ஒரு கருத்தை எழுதுக
சென்னை:
நிசான் பேட்ரோல் டெஸ்சர்ட் பதிப்பின் உலக அளவிலான அறிமுகம், 13வது துபாய் இன்டர்நேஷ்னல் மோட்டார் ஷோவில் நடைபெறும் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது. UAE ரேலி சாம்பியன், FIA துணை தலைவர் மற்றும் UAE ஆட்டோமொபைல் மற்றும் டூரிங் கிளப் தலைவர் டாக்டர் முகமது பென் சுலேயிம் உடன் இணைந்து செயலாற்றி, குறிப்பாக அப்பகுதியில் உள்ள வாடிக்கையாளர்களை கருத்தில் கொண்டு, இந்த பேட்ரோல் டெஸ்சர்ட் பதிப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இதேபோல, புதிய பேட்ரோல் NISMO-வை இந்த நிதியாண்டின் முடிவிற்கு முன்னதாக, UAE-யில் $100,470 USD விலை நிர்ணயத்தில் வெளியிடப் போவதாக, நிசான் நிறுவனம் அறிவித்துள்ளது.
நிசான் மிடில் ஈஸ்ட்டின் நிர்வாக இயக்குனரான சமீர் சியர்பேன் கூறுகையில், “நிசானை பொறுத்த வரை, இந்த பகுதிக்காக ஒரு சக்திவாய்ந்த அர்ப்பணிப்பை செலுத்தி, மத்திய கிழக்கு நாடுகளை சேர்ந்த வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட கோரிக்கைகளை நாங்கள் புரிந்து கொள்ள முடிகிறது என்று நம்புகிறோம். சாலையிலும், கரடுமுரடான பாதைகளிலும் ஓட்டத்தக்க, அதிக செயல்திறன் மற்றும் ஆடம்பரமான கார்களை அளிக்குமாறு எங்களுக்கு தொடர்ந்து கருத்துகள் வந்த வண்ணம் உள்ளன. இதையடுத்து நிசான் பேட்ரோலின் பதிப்புகளை புகழ்பெறும் வகையில் மிகவும் சிறப்பாக அளிக்க, எங்களின் தயாரிப்பு எல்லைகளை விரிவுப்படுத்த உள்ளோம். நிசான் பேட்ரோல் டெஸ்சர்ட் பதிப்பை, துபாய் இன்டர்நேஷ்னல் மோட்டார் ஷோவில் சர்வதேச அளவில் அறிமுகம் செய்வதன் மூலம், எங்களின் பிராந்திய வாடிக்கையாளர்களின் வேண்டுகோள்களுக்கு ஏற்ற ஒரு வாகனத்தை நாங்கள் வெளியிடுகிறோம்” என்றார்.
திரு.சியர்பேன் மேலும் கூறுகையில், பேட்ரோலின் டெஸ்சர்ட் பதிப்பு மற்றும் NISMO பதிப்பு ஆகிய இவ்விரண்டு உடன் சேர்த்து, தனது வாடிக்கையாளர்களின் வேண்டுகோள்களை முழுமையாக பூர்த்தி செய்யும் வகையிலான வியக்கத்தக்க வாகனங்களை நேரடியாக அளிக்க, நிசான் ஈடுபாட்டை செலுத்தி வருகிறது.
நிசான் ஸ்மார்ட்கார் அப்ளிகேஷனுக்காக, இட்டிஸ்லாட் உடன் கூட்டணி அமைத்துள்ளதாக அறிவித்துள்ள நிசான் நிறுவனம், தனது தலைமையில் இட்டிஸ்லாட் அளிக்கும் நெட்வேர்க் மற்றும் M2M கன்ட்ரோல் சென்டர் பிளாட்பாம் ஆகியவற்றை செயல்படுத்த உள்ளது. நிசான் ஸ்மார்ட்கார் அப்ளிகேஷன் மூலம் MY16 நிசான் பேட்ரோல் மற்றும் புதிய நிசான் மேக்சிமா ஆகிய கார்களின் உரிமையாளர்களுக்கு மற்ற திறன்களோடு, AC-யை ஆன் செய்வது, தங்களின் காரை லாக், அன்லாக் மற்றும் ட்ரேக் செய்ய ரிமோட் வசதியை பெற முடிகிறது.
துபாய் ஷோவில் உள்ள நிசான் மிடில் ஈஸ்ட்டின் உள்ளரங்க பகுதியில், NISMO ரேன்ஞ் மற்றும் நிசான் பேட்ரோல் டெஸ்சர்ட் பதிப்பு ஆகிய இரண்டையும் தவிர, அதனோடு நிசான் பேட்ரோலின் MY2016 பதிப்புகளான 370Z, ஆல்டிமா, ஜூக், பாத்ஃபைன்டர், பாத்ஃபைன்டர் ஹைபிரிடு, சென்ட்ரா, சன்னி மற்றும் X-ட்ரையல் முதலான நிசானின் முழு பட்டாளத்தையும் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது.
தவற விடாதீர்கள்:
0 out of 0 found this helpful