சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

ஒன்றாக கூட்டு சேரும் நிஸான், ஹோண்டா மற்றும் மிட்சுபிஷி நிறுவனங்கள்

shreyash ஆல் டிசம்பர் 23, 2024 09:02 pm அன்று மாற்றியமைக்கப்பட்டது செய்யப்பட்டது

இந்த இணைப்பு ஜூன் 2025 -க்குள் இறுதி செய்யப்படுவதோடு கூட்டு நிறுவனத்திற்கான பங்குகள் ஆகஸ்ட் 2026 -க்குள் பட்டியலிடப்படும்.

ஜப்பானிய வாகன ஜாம்பவான்களான ஹோண்டா, நிஸான், மற்றும் மிட்சுபிஷி ஆகிய நிறுவனங்கள் சாத்தியமான வணிக ஒருங்கிணைப்பு பற்றிய விவாதங்களைத் தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டுள்ளனர். ஹோண்டா மற்றும் நிஸான் ஆகிய இரண்டு நிறுவனங்களும் இணையவுள்ளன என்பது தொடர்பான செய்திகள் நீண்ட காலமாக வெளிவந்த நிலையில் இப்போது அது உறுதியாகியுள்ளது. கூடுதலாக இப்போது மிட்சுபிஷியும் இந்த நிறுவனங்களுடன் இணையவுள்ளது.

வணிக ஒருங்கிணைப்பு கூட்டமைப்புக்கான காலவரிசை

இப்போதைக்கு அதிகாரப்பூர்வமாக பேச்சுவார்த்தைகள் மட்டும் தொடங்கியுள்ள நிலையில் ஹோண்டா-நிஸான்-மிட்சுபிஷி ஆகியவற்றின் இணைப்பு ஜூன் 2025 -க்குள் முடிவடையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மூன்று நிறுவனங்களும் ஒன்றாக கையெழுத்திட்ட பிறகு ஒரு கூட்டு இணைப்பு நிறுவனம் ஒன்று உருவாக்கப்படும். இதுவரை இந்த கூட்டமைப்புக்கு பெயரிடப்படவில்லை. புதிய நிறுவனத்தின் பங்குகள் டோக்கியோ எக்ஸ்சேஞ்ச் -ன் பிரைம் சந்தையில் பட்டியலிடப்படும். 2026 ஆகஸ்ட் பங்குகள் பட்டியலிடப்படும் என திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த இணைப்பிலிருந்து என்ன எதிர்பார்க்கலாம்?

ஹோண்டா, நிஸான் மற்றும் மிட்சுபிஷி ஆகியவை தங்கள் உலகளாவிய போட்டித்தன்மையை வலுப்படுத்தவும் உலகெங்கிலும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு மிகவும் கவர்ச்சிகரமான தயாரிப்புகள் மற்றும் சேவைகளை தொடர்ந்து வழங்கவும் இணைந்து செயல்பட திட்டமிட்டுள்ளன. நிறுவனங்களின் இணைப்பு ஒரு வருடத்தில் 3 டிரில்லியன் யென் (19 பில்லியன் அமெரிக்க டாலர்) லாபத்தை ஈட்டும் என்று எதிர்பார்க்கிறது இது உலகளவில் மிகப்பெரிய வாகன சக்திகளில் ஒன்றாக இருக்கும்.

ஹோண்டா-நிஸான்-மிட்சுபிஷி இணைப்பால் கிடைக்கும் சில சாதகமான விளைவுகள் இங்கே:

கட்டமைப்பு தளங்களின் பகிர்வு

வாகன கட்டமைப்பு தளங்கள் இந்த 3 பிராண்டுகளுக்கும் இடையில் பகிரப்படும். இது நிறுவனங்கள் தங்கள் லாபத்தை அதிகரிக்க உதவும் எதிர்கால டிஜிட்டல் சேவைகள் உட்பட ஒரு வாகனத்திற்கான மேம்பாட்டு செலவுகளை குறைக்க அனுமதிக்கும். ICE, HEV, PHEV மற்றும் EV உள்ளிட்ட அனைத்து வகையான மாடல்களுக்கும் பொருந்தும்.

வளர்ச்சி திறன்களை மேம்படுத்துதல்

ஆகஸ்ட் 1, 2024 அன்று நிஸான் மற்றும் ஹோண்டா ஆகியவை மென்பொருளால் இயக்கப்படும் அடுத்த தலைமுறை வாகன தளங்களுக்கான ஆராய்ச்சியில் ஒத்துழைக்க ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. வணிக ஒருங்கிணைப்புக்குப் பிறகு இரு நிறுவனங்களும் அனைத்து RD செயல்பாடுகளிலும் ஒருங்கிணைந்து செயல்படுவதற்கான ஒத்துழைப்பில் அதிக கவனம் செலுத்தும்.

உற்பத்தி அமைப்புகள் மற்றும் வசதிகளை சிறப்பாக பயன்படுத்துதல்

இந்த நிறுவனங்கள் அவர்களது வாகனங்களின் உற்பத்தி செயல்முறைகள் உற்பத்தி அமைப்புகளை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்வதன் மூலம் அதை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. இது செலவுகளை குறைக்கும் மற்றும் சிறந்த செயல்திறனுக்கு வழிவகுக்கும் திறன் பயன்பாட்டில் கணிசமான முன்னேற்றத்தை ஏற்படுத்தும்.

விநியோகச் சங்கிலி -யில் கிடைக்கும் நன்மைகள்

உற்பத்தியை போல விநியோகச் சங்கிலியிலிருந்தும் வணிகக் கூட்டாளிகளுடனும் இணைந்து கொள்முதல் செயல்பாடுகளை மேம்படுத்தி, அவற்றை சீரமைத்து, பொதுவான பாகங்களை ஆதாரமாகக் கொண்டு போட்டித் தன்மையில் சிறப்பாக செயல்பட திட்டமிடப்பட்டுள்ளது.

விற்பனை நிதி செயல்பாடுகளில் ஒருங்கிணைப்பு

நிறுவனங்கள் தங்கள் விற்பனை நிதிச் செயல்பாடுகளை ஒருங்கிணைத்து, விரிவான இயக்கம் தீர்வுகள் மற்றும் புதிய நிதிச் சேவைகளை வழங்குவதற்கான செயல்பாடுகளை விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.

நுண்ணறிவு மற்றும் மின்மயமாக்கலுக்கான திறமைகளை கண்டறிய ஒரு அறக்கட்டளையை நிறுவுதல்

பணியாளர் பரிமாற்றம் மற்றும் நிறுவனங்களுக்கிடையேயான தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஆகியவை கார்களின் எதிர்கால இயக்கம் தொழில்நுட்பங்களில் பணிபுரிவதற்காக திறன் வாய்ந்தவர்களை கண்டறியவும், திறன் மேம்பாட்டையும் ஊக்குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த 3 பெரிய ஜப்பானிய கார் உற்பத்தியாளர்களின் இணைப்பு பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ? கீழே உள்ள பகுதியில் உங்களது கருத்தை தெரிவிக்கவும்.

ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகள் வேண்டுமா ? கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.

Share via

Write your கருத்தை

Enable notifications to stay updated with exclusive offers, car news, and more from CarDekho!

டிரெண்டிங் கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
புதிய வேரியன்ட்
Rs.15.50 - 27.25 லட்சம்*
புதிய வேரியன்ட்
Rs.15 - 26.50 லட்சம்*
புதிய வேரியன்ட்
புதிய வேரியன்ட்
Rs.6.20 - 10.51 லட்சம்*
எலக்ட்ரிக்
Rs.48.90 - 54.90 லட்சம்*
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை