• English
  • Login / Register

அடுத்த தலைமுறை ரெனால்ட் டஸ்டர் 2018 ஆம் ஆண்டு அறிமுகம்

published on அக்டோபர் 15, 2015 09:17 am by raunak for ரெனால்ட் டஸ்டர் 2016-2019

  • 11 Views
  • ஒரு கருத்தை எழுதுக

ஜெய்பூர்:

இரண்டாம் தலைமுறை ரெனால்ட் டஸ்டர்  SUV வாகனங்கள் இந்தியாவில் 2018  ஆம் ஆண்டு 5+2 சீட்டிங் ஆப்ஷனுடன் வெளியா கம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எகனாமிக் டைம்ஸ் பத்திரிக்கையில் வெளியான செய்தி ஒன்றில்   ரெனால்ட் நிறுவனம் இரண்டாம் தலைமுறை டஸ்டர் வாகனங்களை 2018ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. . காம்பேக்ட் SUV பிரிவில் அறிமுகமான இந்த டஸ்டர் கார்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது நாம் எல்லோரும் அறிந்ததே.  அது மட்டுமின்றி இந்த டஸ்டர் கார்கள் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு காம்பேக்ட் SUV பிரிவின் மீது வாடிக்கையாளர்களுக்கு ஒரு புதிய ஆர்வம்  ஏற்பட்டது என்று சொன்னால் அது மிகை ஆகாது. போர்ட் நிறுவனத்தின் ஈகோஸ்போர்ட் கார்களின் அறிமுகத்திற்கு பின் (2013)  டஸ்டர் கடும் போட்டியை சந்தித்தது. சமீபத்தில் அறிமுகமாகி உள்ள ஹயுண்டாய் நிறுவனத்தின் க்ரேடா கார்களும் டஸ்டர் கார்களுக்கு பெரும் சவாலாக விளங்குகின்றது, . இரண்டாவது தலைமுறை டஸ்டர் கார்களை அறிமுகப்படுத்துவதற்கு  முன் ,  வடிவமைப்பு மற்றும் எந்திர (மெக்கானிகள்)  ரீதியிலும்  நல்ல மேம்பாடுகளை செய்து புதிய மேம்படுத்தப்பட்ட வெர்ஷன் ஒன்றை 2016ல் நடைபெற உள்ள ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகப்படுத்தவோ/ / காட்சிக்கு வைக்கவோ ரெனால்ட் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

2018ஆம் ஆண்டுஅறிமுகமாகும்   என்று யூகிக்கப்படும் இரண்டாம் தலைமுறை டஸ்டர் வாகனத்தை பற்றிய பெரிய அளவிலான தகவல்கள்  ஏதும்  வெளிவரவில்லை என்றாலும்  5+2 இருக்கை ( சீட்டர்) வசதி  செய்யப்பட்டிருக்கலாம் என்பது போன்ற  வதந்திகள் வாகன உலகில்   உலவுகின்றன. முற்றிலும் புதிய வடிவமைப்பை எதிர்பார்க்கலாம் என்றாலும் தற்போது உள்ள டஸ்டர் வாகனங்களின் முக்கிய சாராம்சங்களும் சாயலும் தக்கவைத்துக் கொள்ளப்படும் என்றே உறுதியாக சொல்லலாம். ( எவ்வாறு  இப்போது விற்பனையில்  உள்ள இரண்டாம் தலைமுறை மாருதி ஸ்விப்ட் முந்தைய ஸ்விப்ட் கார்களின் தோற்றத்தை பெரிதும் ஒத்து இருக்கிறதோ அதே போல ) . அதைத் தவிர தற்போது உள்ள AWD ( ஆல் வீல் ட்ரைவ்) தொழில்நுட்பம் எதிர்வரும் வெர்ஷன்களிலும் தக்கவைத்துக் கொள்ளப்படும் என்றும் தற்போதய டஸ்டரில் உள்ள 1.5 லிட்டர் டீசல் மோட்டார் மேலும் மேம்படுத்தப்பட்டு அறிமுகமாக உள்ள மாடல்களிலும் பயன்படுத்தப்படும் என்றும் நம்பப்படுகிறது.  இதைத் தவிர , இரண்டாம் தலைமுறை டஸ்டர் வாகனத்தில் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன் ஒன்றும் வெளியிடப்படலாம் என்றும் தெரிகிறது.

இதற்கிடையே, அடுத்து வெளியாக உள்ள மேம்படுத்தப்பட்ட டஸ்டர்  110PS  வெர்ஷனில் AMT தானியங்கி கியர் பாக்ஸ் பொருத்தப்பட உள்ளது. ரெனால்ட் / டாசியாவின் AMT கியர் பாக்ஸ் கடந்த மாதம் நடந்த இந்த வருடத்திற்கான  ப்ரேன்க்பர்ட் மோட்டார் ஷோவில் காட்சிக்கு வைக்கப்பட்டது. இவற்றை எல்லாம் விட 2016 ல் அறிமுகமாக உள்ள  மேம்படுத்தப்பட்ட டஸ்டர் கார்களில் சர்வதேச சந்தைக்கான டஸ்டர்  மாடலில் செய்யப்பட்டுள்ள மேம்பாடுகள் அனைத்தும்  நிச்சயம் இந்த 2016 ல் அறிமுகமாகும் இந்திய டஸ்டர் வாகனத்திலும் பிரதிபலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

இதையும் படியுங்கள்

உறுதியானது: மேம்படுத்தப்பட்ட  ரெனால்ட் டஸ்டர்  AMT தொழில்நுட்பம் இணைக்கப்பட்டு வெளிவரும்.
ரெனால்ட் நிறுவனம் லிமிடட் எடிஷன் டஸ்டர் எக்ஸ்ப்ளோர் கார்களை வெளியிட்டது.

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment on Renault டஸ்டர் 2016-2019

Read Full News

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending எஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience