நெக்ஸ்ட்-ஜென் மெர்சிடிஸ் பென்ஸ் E-கிளாஸ் காரின் உட்புற அமைப்பு விவரங்கள் வெளியிடப்பட்டது
published on டிசம்பர் 10, 2015 05:40 pm by raunak for மெர்சிடீஸ் இ-கிளாஸ் 2017-2021
- 15 Views
- ஒரு கருத்தை எழுதுக
புதிய W213 E-கிளாஸ் காரின் கேபினில் பொருத்தப்பட்டுள்ள, பகட்டான லைட்டிங்கள்; இன்ஸ்ட்ரூமென்ட் க்லஸ்டர் மற்றும் இன்ஃபோடைன்மெண்ட் அமைப்பை மேம்படுத்த இரண்டு பெரிய 12.3 அங்குல டிஸ்ப்ளே கருவிகள் போன்றவை புதிய S-கிளாஸ் ஃப்லாக்ஷிப் காரின் கேபினை நமக்கு நினைவு படுத்தும் வகையில் உள்ளன.
மெர்சிடிஸ் நிறுவனம் அடுத்து அறிமுகப்படுத்தவுள்ள உள்ள, தனது நெக்ஸ்ட்-ஜென் E-கிளாஸ் காரின் விவரங்களை அதிகாரபூர்வமாக வெளியிடத் தொடங்கி உள்ளது. அடுத்த மாதம் நடக்கவுள்ள 2016 NAIAS என்ற டிட்ராயிட் மோட்டார் ஷோ கண்காட்சியில், மெர்சிடிஸ் தனது புதிய W213 E கிளாஸ் காரை அறிமுகப்படுத்த உள்ளது. அடுத்து வரவுள்ள சேடானின் உட்புற கேபினின் தோற்றத்தைப் பற்றிய விரிவான விவரங்களை, இந்த ஜெர்மன் வாகன தயாரிப்பு நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது ஒவ்வொரு விவரமும், நமக்கு தற்போது சந்தையில் உள்ள S-கிளாஸ் காரை நினைவூட்டுகிறது என்பதை மறுக்க முடியாது.
ஆடி காரில்தான் முதல் முதலாக முழுவதும் டிஜிட்டல் மாயமான 12.3 அங்குல டிஸ்ப்ளே யூனிட் இன்ஸ்ட்ரூமெண்டேஷன் க்ளஸ்டருடன் இணைந்து வந்தது (கடைசியாக வெளிவந்த புதிய A4 மற்றும் TT மாடல்களில் இதை நீங்கள் அனுபவிக்கலாம்). உங்களை இந்த அம்சம் கவர்ந்திருந்தால், நிச்சயமாக E கிளாஸ் மாடல் உங்களுக்கு விருப்பமானதாக இருக்கும், ஏனெனில், இந்த மாடலில் மெர்சிடிஸ் நிறுவனம் இரண்டு 12.3 அங்குல டிஸ்ப்ளே யூனிட்களை அருகருகே பொருத்தி உள்ளது.S-கிளாஸ் மாடலில் வருவது போலவே, புதிய E கிளாஸ் காரிலும் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் மற்றும் இன்ஃபோடைன்மெண்ட் அமைப்பிற்கும் இரண்டு 12.3 அங்குல டிஸ்ப்ளே யூனிட்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஆனால், S கிளாஸில் உள்ளதைப் போல இல்லாமல், E கிளாஸில் உள்ள இரண்டு ஸ்கிரீன்களுக்கும் ஒரு பொதுவான கண்ணாடி பொருத்தப்பட்டுள்ளதால், அவை ஒரு டிஸ்ப்ளே யூனிட் போன்ற தோற்றத்தைத் தருகின்றன. மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் பிரெத்தியேக கமாண்ட் ஆன்லைன் இன்ஃபோடைமெண்ட் சிஸ்டம் மற்றும் சென்ட்ரல் டனலில் புதிய டச் பேட் இணைப்பும், ஆப்ஷனாக வழங்கப்படுகின்றன. மேலும், இசையின் டெசிபல் அளவை கூடுதலாக்க 23 ஸ்பீக்கர்கள் கொண்ட 1450 W டிவின் அம்ப்ளிபையர் பொருத்தப்பட்ட உயர்தர செகண்ட் ஜெனரேஷன் பர்மெஸ்டர் 3D சரௌண்ட் சவுண்ட் சிஸ்டமும் ஆப்ஷனாக வருகிறது.
உட்புற வடிவமைய்பு பிரிவின் தலைவரான ஹார்ட்முட் சிங்க்விட்ஜ், “வாகன உலகின் தற்கால ஆடம்பரத்திற்கு, ஒரு புது வடிவத்தை புதிய E-கிளாஸ் காரின் உட்புறத் தோற்றத்தின் மூலம் உருவாக்கியுள்ளோம். விசாலமான மற்றும் அற்புதமான உட்புறத்தை நாங்கள் வடிவமைத்துள்ளோம். மெர்சிடிஸ் பென்ஸின் உண்மையான வடிவமைப்பு தத்துவமான செண்சுவல் பியூரிட்டி என்ற கருத்தை மனதில் கொண்டு, நாங்கள் நவீன தொழில்நுட்ப கருவிகளையும், உயர்தர உபகரணங்களையும் பொறுத்தியுள்ளதால், ஓட்டுனரும், முன்புறத்தில் அமர்ந்திருக்கும் பயணியும் ஒரு அற்புதமான உணர்வு பூர்வமான அனுபவத்தை ஒவ்வொரு பயணத்தின் போதும் பெற முடியும். எனவே, E கிளாஸ் பிசினஸ் கிளாஸ் மாடலுக்கு மட்டும் ஒரு புதிய தரநிலையை அமைக்கவில்லை, அதற்கு அதிகமாகத் தருகிறது. பயணிகள், தங்களது பணியிடம் மற்றும் அந்தரங்க இடத்தைத் தவிர, அதிநவீன ஆடம்பரங்களில் ஏகாந்த நிலையை அனுபவிக்கும் மூன்றாவது லிவிங் ஏரியாவாக இந்த கார் இருக்கும்,” என்று கூறுகிறார்.
புதிய E-கிளாஸ் காரில் உள்ள கிட்டத்தட்ட அனைத்து பட்டன்களுமே, தொடு உணர்வு கொண்ட டச் சென்சிடிவ் பட்டன்களாகும். மல்டி-ஃபங்சனல் ஸ்டியரிங் வீலிலும் டச் சென்சிடிவ் பட்டன்களே இடம் பெற்றுள்ளன. அனைத்து தொடு உணர்வு பட்டன்களும், மேல்-கீழ் மற்றும் வலம்-இடம் முறையில் விரல்களில் ஸ்வைப் செய்யும் போது துல்லியமாக செயல்படுகின்றன. இத்தகைய டச் சென்சிடிவ் தொழில்நுட்பம் பொருத்தப்பட்ட முதல் கார் E-கிளாஸ் தான் என்று மெர்சிடிஸ் நிறுவனம் பெருமை பொங்கக் கூறுகிறது. இன்ஃபோடைன்மெண்ட் சிஸ்டத்தை இந்த தொடு உணர்வு பட்டன்கள் மூலமாகவோ அல்லது சென்ட்ரல் டனலில் உள்ள டச்பேட் மூலமாகவோ கட்டுப்படுத்தலாம். இது தவிர, உள்ளே உள்ள லைட்டிங்களுக்கு, மெர்சிடிஸ் 64 கலர்களை ஆப்ஷனாகத் தருகிறது. காரை வாங்குபவர்கள், தங்களின் விருப்பத்திற்கேற்ப நிறங்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். டிரிம் பாகங்கள், சென்ட்ரல் டிஸ்ப்ளே யூனிட், சென்ட்ரல் கன்சோலில் உள்ள ஸ்டோரேஜ் பகுதி, கைப்பிடிகள், கதவில் உள்ள பாக்கெட்கள், முன்புறமும் பின்புறமும் உள்ள கால் வைக்கும் இடங்கள், தலைக்கு மேல் பொருத்தப்பட்டுள்ள கன்சோல், மிர்ரர் ட்ரையாங்கில் மட்டுமல்லாது ட்வீட்டர்களைச் சுற்றியும் இந்த விளக்குகள் பொருத்தப்பட்டிருப்பது, இந்த காரின் பகட்டை மேலும் அதிகப்படுத்துகிறது.
இதையும் படியுங்கள்
0 out of 0 found this helpful