இந்தியாவில் வெளியிடப்பட்டது புதிய MG Astor
இந்தியாவில் எம்ஜி நிறுவனம் ஸ்ட்ராங் ஹைப்ரிட் இன்ஜினுடன் அறிமுகப்படுத்தும் முதல் காராக இது உள்ளது.
பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 நிகழ்வில் புதிய எம்ஜி ஆஸ்டர் காட்சிப்படுத்தப்பட்டது. புதுப்பிக்கப்பட்ட ஆஸ்டர் முன்பு ஆகஸ்ட் 2024 ஆண்டில் உலகளவில் வெளியிடப்பட்டது. இது கார் விரைவில் இந்தியாவில் வெளியிடப்படும் என்பதை எம்ஜி நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. புதுப்பிக்கப்பட்ட எஸ்யூவி புதிய வடிவமைப்பு, கூடுதல் வசதிகள் மற்றும் புதிய ஹைப்ரிட் பவர்டிரெய்ன் ஆகியவற்றுடன் வரும். வரவிருக்கும் ஆஸ்டர் பற்றி இங்கே பார்ப்போம்:
வெளிப்புறம்
எம்ஜி ஆஸ்டர் இணைக்கப்பட்ட LED டிஆர்எல்கள், புரொஜெக்டர் LED ஹெட்லைட்கள் மற்றும் தேன்கூடு வடிவ மெஷ் எலமென்ட்களுடன் கூடிய பெரிய கிரில் ஆகியவற்றை கொண்டுள்ளது. இது சி வடிவ ஏர் இன்டேக்குகளை கொண்டுள்ளது.
பக்கவாட்டில் இது புதிய டூயல்-டோன் அலாய் வீல்கள் மற்றும் பிளாக் பாடி கிளாடிங்கில் ஒரு குரோம் ஸ்டிரிப் கொடுக்கப்பட்டுள்ளது. பின்புறத்தில் இது ரேப்பரவுண்ட் டெயில் லைட்ஸ் மற்றும் சில்வர் ஆக்ஸென்ட்களுடன் புதிய பம்பருடன் வருகிறது.
இன்ட்டீரியர்
உள்ளே தட்டையான மேல் மற்றும் கீழ் பகுதிகள் மற்றும் அறுகோண வடிவ ஏசி வென்ட்களுடன் புதிய 3-ஸ்போக் ஸ்டீயரிங் வீலுடன் வருகிறது. சென்டர் கன்சோல் புதிய விமான பாணியிலான கியர் லீவர், இரண்டு கப்ஹோல்டர்கள் மற்றும் எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் ஆகியவற்றுடன் வடிவமைப்பு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இருக்கைகள் அனைத்து இருக்கைகளிலும் சரிசெய்யக்கூடிய ஹெட்ரெஸ்ட்கள் மற்றும் லெதரெட் சீட் அப்ஹோல்ஸ்டரியுடன் வருகின்றன.
வசதிகள் மற்றும் பாதுகாப்பு
வசதிகளைப் பொறுத்தவரையில் குளோபல்-ஸ்பெக் ஆஸ்டர் 12.3-இன்ச் டச் ஸ்கிரீன், 7-இன்ச் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே, 6-வே பவர்டு டிரைவர் சீட், வயர்லெஸ் ஃபோன் சார்ஜர், ஹீட்டட் முன் இருக்கைகள் மற்றும் ஆட்டோ ஏசி ஆகியவற்றுடன் வருகிறது.
பாதுகாப்புக்காக 6 ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா மற்றும் லெவல்-2 அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம்கள் (ADAS) கொலிஷன் மிட்டிகேஷன் அசிஸ்ட் மற்றும் அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல் போன்ற வசதிகள் உள்ளன.
இந்த வசதிகள் அனைத்தும் இந்தியா-ஸ்பெக் மாடலின் ஒரு பகுதியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பவர்டிரெய்ன் ஆப்ஷன்
புதிய ஆஸ்டர் 1.5 லிட்டர் ஸ்ட்ராங் ஹைப்ரிட் பெட்ரோல் இன்ஜினுடன் வரும். அதன் விவரங்கள் பின்வருமாறு:
இன்ஜின் |
1.5 லிட்டர் ஸ்ட்ராங் ஹைப்ரிட் பெட்ரோல் இன்ஜின் |
பவர் |
196 PS |
டார்க் |
465 Nm |
டிரான்ஸ்மிஷன் |
3-ஸ்பீடு ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன் |
எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் போட்டியாளர்கள்
புதுப்பிக்கப்பட்ட எம்ஜி ஆஸ்டரின் விலை ரூ.10 லட்சத்தில் இருந்து (எக்ஸ்-ஷோரூம்) எதிர்பார்க்கப்படுகிறது. இது ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ், மாருதி கிராண்ட் விட்டாரா, ஹோண்டா எலிவேட் மற்றும் ஸ்கோடா குஷாக் போன்றவற்றுக்கு போட்டியாக இருக்கும்.
ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகள் வேண்டுமா ? கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.