புதிய ஆடி Q7 மலேசியாவில் அறிமுகமானது, விரைவில் இந்தியாவிலும் அறிமுகம்
published on நவ 23, 2015 12:58 pm by cardekho for ஆடி க்யூ7 2006-2020
- 13 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஜெய்பூர் :
இந்தியாவிலும் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படும் ஆடி Q7 SUV ரக வாகனங்களின் 3.0 லிட்டர் TFSI குவாட்ரோ என்ஜின் பொருத்தப்பட்ட வெர்ஷன்கள் RM 589,900 ( ரூ. 91.06 லட்சங்கள் ) என்ற விலைக்கு மலேசியா நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முன்னதாக டெட்ராய்ட் நகரில் நடந்த 2015 NAIAS ஷோவிற்கு முன்பாகவே 2014 டிசெம்பரில் இந்த SUV வாகனம் காட்சிக்கு வைக்கப்பட்டது. 2,900 முதல் 5,300 rpmல் 333 பிஎச்பி அளவுக்கு சக்தியையும் ,440 Nm அளவுக்கு டார்கையும் வெளியிடவல்ல அதி சக்தி வாய்ந்த 3.0 லிட்டர் TFSI V6 என்ஜின் மூலம் இந்த வாகனங்கள் சக்தியூட்டப்பட உள்ளது. இந்த என்ஜினுடன் 8- வேக டிப்டிரானிக் ட்ரேன்ஸ்மிஷன் வசதி இணைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய Q7 மணிக்கு அதிகபட்சமாக 250 கி.மீ வேகம் வரை செல்லக் கூடியது. மேலும் 0- 100 கி.மீ. வேகத்தை வெறும் 6.3 வினாடிகளில் தொட்டு விடுகிறது. இது முந்தைய Q7 கார்களை விட 1.6 வினாடிகள் குறைவான நேரம் என்பது கூடுதல் சிறப்பு செய்தியாகும். இந்த வருட இறுதிக்குள் இந்த இந்த புதிய Q7 இந்தியாவிலும் அறிமுகமாகும் என்று தெரிகிறது.
இந்த புதிய SUV யின் அளவுகளைப் பார்க்கையில், 5,050மி.மீ நீளம், 1,970 மி.மீ அகலம் மற்றும் வீல்பேஸ் 2,990மி.மீ என்ற அளவுகளில் உள்ளது. இதற்கு முந்தைய Q7 மாடலுடன் ஒப்பிடுகையில் 37 மி.மீ உயரம் குறைந்தும் , 15 மி.மீ அகலம் குறைந்தும், 12 மி.மீ வீல்பேஸ் அளவு குறைந்தும் காணப்படுகிறது. மேலும் அடேப்டிவ் ஏயர் சஸ்பென்ஷன் , DRL உடன் கூடிய LED முகப்பு விளக்குகள் , 20- அங்குல 10- ஸ்போக் ட்ரிம்கள் ,தானியங்கி ஆன்டி - க்ளேர் விங் மிரர்கள் , சக்தியூட்டப்பட்ட டெய்ல்கேட், சுற்றி நாலாபுறமும் காட்டக்கூடிய சரௌன்ட் வியு கேமெரா உடன் கூடிய பார்க் அசிஸ்ட், நான்கு - சோன் ஆட்டோ குளிர்சாதன அமைப்பு , புஷ் பட்டன் ஸ்டார்ட் மற்றும் 4 - வழி லும்பர் மற்றும் ஓட்டுனருக்கு நினைவூட்டும் திறன் கொண்ட எலெக்ட்ரிக் முன்புற இருக்கைகள் போன்ற பல்வேறு சிறப்பம்சங்கள் இந்த புதிய Q7 SUVயில் இணைக்கப்பட்டுள்ளது. இவைகள் மட்டுமா ? MMI டச் மற்றும் MMI நேவிகேஷன் வசதி கொண்ட இந்போடைன்மென்ட் சிஸ்டம் , 8.3- அங்குல மதிய டிஸ்ப்ளே, 3D மேப் டிஸ்ப்ளே, கையெழுத்தை புரிந்து கொள்ள கூடிய டச் சென்சிட்டிவ் பேனல் மற்றும் இசை மற்றும் பாடல்கள் சேமிப்பிற்கு 10 GB ப்ளேஷ் மெமரி என்று ஏராளமான சிறப்பம்சங்கள் இந்த புதிய Q7ல் அடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்