இந்தியாவில் வெளியிடப்பட்டது 2025 BMW 3 சீரிஸ் LWB
மாடல் இயர் (MY) 2025 3 சீரிஸ் LWB (லாங்-வீல்பேஸ்) தற்போது ஒரு ஃபுல்லி-லோடட் 330 Li M ஸ்போர்ட் வேரியன்ட் -ல் மட்டுமே கிடைக்கும்.
-
அடாப்டிவ் LED புரொஜெக்டர் ஹெட்லைட்கள், குரோம்-பினிஷ் செய்யப்பட்ட BMW கிட்னி கிரில் மற்றும் ஒரு கிளாஸி-பிளாக் கலரில் ஃபினிஷ் செய்யப்பட்ட பின்புற டிஃப்பியூசர் ஆகியவற்றை வெளிப்புறத்தில் பார்க்க முடிகிறது.
-
உள்ளே இது புதிய வடிவிலான ஏசி வென்ட்களை கொண்டுள்ளது. மற்றபடி ஒட்டுமொத்த டாஷ்போர்டு தளவமைப்பு மாறாமல் உள்ளது.
-
இன்டெகிரேட்டட் டூயல் கர்வ்டு டிஸ்பிளேக்கள், 3-ஜோன் ஏசி மற்றும் ஆம்பியன்ட் லைட்ஸ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
-
பாதுகாப்புக்காக 6 ஏர்பேக்குகள், டைனமிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (DSC), பார்க் அசிஸ்ட் மற்றும் லெவல் 2 ADAS ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன.
-
258 PS 2-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் உள்ளது. கார் வெறும் 6.2 வினாடிகளில் 0-100 கி.மீ வேகத்தை எட்டும்.
-
இந்த ஆண்டு இறுதியில் டீசல் பதிப்பு கிடைக்கும்.
இந்தியாவில் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் BMW 3 சீரிஸ் மிகவும் பிரபலமான செடான்களில் ஒன்றாக இருக்கிறது. இப்போது இந்த செடானுக்கு MY25 (மாடல் ஆண்டு) அப்டேட் கொடுக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் 330 Li மாடலுக்கு விலை ரூ. 62.60 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் பான்-இந்தியா) ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது அதன் MY24 பதிப்போடு ஒப்பிடும்போது ரூ. 2 லட்சம் கூடுதல் ஆகும். இது ஒரு ஃபுல்லி லோடட் M ஸ்போர்ட் வேரியன்ட் -ல் மட்டுமே கிடைக்கும். மேலும் இப்போது சில ஸ்போர்ட்டியர் M ஸ்போர்ட்டி வடிவமைப்பு எலமென்ட்களும் கொடுக்கப்பட்டுள்ளன. புதுப்பிக்கப்பட்ட 3 சீரிஸ் LWB எப்படி இருக்கிறது மற்றும் அது என்ன வழங்குகிறது என்பதை இங்கே பார்க்கலாம்.
வடிவமைப்பில் எந்த மாற்றங்களும் இல்லை
குறிப்பிடத்தக்க வகையில் 2025 3 சீரிஸ் LWB -ல் வெளிப்புறத்தின் வடிவமைப்பில் எந்த மாற்றங்களும் இல்லை. ஹெட்லைட்கள் அடாப்டிவ் எல்இடி ப்ரொஜெக்டர் யூனிட்களாக அப்டேட் செய்யப்பட்டுள்ளன, அதே சமயம் இது சிக்னேச்சர் பிஎம்டபிள்யூ கிட்னி கிரில் குரோமில் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது. மற்றும் கிளாஸி-பிளாக் ஃபினிஷிங் உடன் பின்புற டிஃப்பியூசர் கொடுக்கப்பட்டுள்ளது. BMW 2025 3 சீரிஸ் LWB ஆனது மினரல் ஒயிட், ஸ்கைஸ்க்ரேப்பர் கிரே, எம் கார்பன் பிளாக் மற்றும் ஆர்க்டிக் ரேஸ் ப்ளூ என நான்கு எக்ஸ்ட்டீரியர் கலர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
உள்ளே குறைவான அப்டேட்கள்
ஏசி வென்ட்கள் புதிய வடிவத்தில் உள்ளன. இருப்பினும் டாஷ்போர்டின் ஒட்டுமொத்த தளவமைப்பு பெரிதாக மாறாமல் உள்ளது. இது வெர்னாஸ்கா காக்னாக் லெதரெட் சீட் அப்ஹோல்ஸ்டரி, எம் ஸ்போர்ட் லெதரெட் ஸ்டீயரிங் ஆகியவற்றை கொண்டுள்ளது.
கம்ஃபோர்ட் மற்றும் வசதிகளின் பட்டியலில் பெரிய மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை. இது இன்டெகிரேட்டட் கர்வ்டு டிஸ்பிளேக்கள் (12.3-இன்ச் டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே மற்றும் 14.9-இன்ச் டச்ஸ்கிரீன்), 16-ஸ்பீக்கர் ஹர்மன் கார்டன் சவுண்ட் சிஸ்டம், 3-ஜோன் ஏசி, ஆம்பியன்ட் லைட்ஸ், வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் மற்றும் பனோரமிக் சன்ரூஃப் ரூஃப் போன்ற வசதிகளுடன் வருகிறது.
இதன் பாதுகாப்புக்காக சில லெவல் 2 அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) டிரைவர் அசிஸ்டன்ஸ் வார்னிங் மற்றும் லேன் சேஞ்ச் அசிஸ்ட் உட்பட சில வசதிகளை உள்டக்கியுள்ளது.
தவிர இதில் 6 ஏர்பேக்குகள், டைனமிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (டிஎஸ்சி) மற்றும் பார்க் அசிஸ்ட் ஆகியவை உள்ளன.
அதே டர்போ-பெட்ரோல் இன்ஜின்
BMW MY25 3 சீரிஸ் LWB உடன் அதே 2-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினை அப்படியே தக்க வைத்துக் கொண்டுள்ளது. அதன் விவரங்கள் இங்கே:
இன்ஜின் |
2-லிட்டர் 4-சிலிண்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் |
பவர் |
258 PS |
டார்க் |
400 Nm |
டிரான்ஸ்மிஷன் |
8-ஸ்பீடு AT |
ஆக்ஸிலரேஷன் 0-100 kmph |
6.2 வினாடிகள் |
டீசல் பதிப்பு இந்த ஆண்டின் பிற்பகுதியில் அறிமுகமாகும்.
போட்டியாளர்கள்
இந்தியாவில் BMW 3 சீரிஸ் LWB ஆனது Mercedes-Benz C கிளாஸ் மற்றும் ஆடி ஏ4 ஆகியவற்றுக்கு போட்டியாக இருக்கும்.
ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து லேட்டஸ்ட் அப்டேட்டுகளுக்கு கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.