அதிக திறன் வாய்ந்த டொயோட்டா பிரியஸ் மாடல் வெளியிடபட்டது!
published on செப் 10, 2015 09:54 am by konark for டொயோட்டா பிரியஸ்
- 17 Views
- ஒரு கருத்தை எழுதுக
டொயோட்டா நிறுவனம், அதன் இரண்டாம் தலைமுறை டொயோட்டா பிரியஸ் காரை, சந்தையில் வெளியிட்டது. டொயோட்டாவின் பிரியஸ் கார்தான் முதன் முறையாக மிகவும் அதிகமாக உற்பத்தி செய்யப்பட்ட கலப்பின காராகும். இதன் வடிவமைப்பு முதல் எரிபொருள் சிக்கன திறன் வரை, அனைத்து வித கோணங்களிலும் மேம்படுத்தப்பட்டு வெளிவருகிறது. இந்த கார் முந்தைய மாடலை விட 10% அதிக மைலேஜ் மற்றும் 40% அதிக வெப்பத் திறன் (தெர்மல் எஃபிசியன்சி) கொண்டு மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்த இரண்டாம் தலைமுறை டொயோட்டா பிரியஸ் கார், முந்தைய தலைமுறை மாடலை விட 60 மிமீ நீளமானதாகவும், 15 மிமீ அகலமானதாகவும், 20 மிமீ உயரம் குறைவானதாகவும் உள்ளது.
கூர்மையான வடிவத்தை கொடுக்கக் கூடிய, எறிவளைதட்டு வடிவத்தை பிரதிபலிக்கும் முகப்பு விளக்குகளும், முக்கோண வடிவ பனி விளக்குகளும், கிட்டதட்ட முட்டுதாங்கி வரை நீட்டிக்கப்பட்ட பின்புற விளக்குகளும் பொருத்தப்பட்ட இந்த கார், சாலைகளில் செல்லும் போது தனித்துவமாக காட்சியளித்து, மற்றவர்கள் அனைவரும் கவனிக்கும்படி பவனி வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்புற உள்வடிவமைப்பில், புதுப்பிக்கப்பட்ட கருவிகள் இணைமையம் (இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல்), விரிவான தொடுதிரை இன்போடெயின்மென்ட் அமைப்பு, புதிய மூன்று ஆரங்களைக் (ஸ்போக்) கொண்ட ஓட்டு சக்கரம் (ஸ்டீயரிங்) மற்றும் இதன் வெண்மை நிற உட்புற பின்னனி போன்றவை சேர்ந்து, உட்புற சூழல் முழுவதையும் புதுமைப்படுத்தியுள்ளன.
TNGA (டொயோட்டா புதிய தலைமுறை கட்டுமானம்) தொழில்நுட்பத்தின் மூலம், 60% அதிகமாக உறுதித்தன்மை மேம்படுத்தப்பட்டுள்ளது. புதிய முன்புறம் மற்றும் பின்புறம் உள்ள விஷ்போன் சஸ்பென்சன் அமைப்பு, காரை சாலையில் எளிதாக நிறுத்துவதற்கும் (ஹோல்டிங்), ஓடும்போது எளிதாக கையாளுவதற்கும் உறுதுணையாக உள்ளது.
கலப்பின பவர்டிரைன் அமைப்பை சக்தியூட்ட, முன்பை விட சிறிய, இலகுவான மற்றும் நீடித்த உழைப்பு கொண்ட புதிய நிக்கல் மெட்டல் ஹைட்ரைட் பேட்டரி அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது.
புதிய ப்ரியஸின் சிறப்பம்சங்களின் பட்டியலும் மேலும் மேம்படுத்தப்பட்டுள்ளது. தானியங்கி உயர் கற்றை (ஆட்டோமேடிக் ஹை பீம்), மோதும் முன்பே முன்எச்சரிக்கை தரும் ப்ரீ-கொலிசன் அமைப்பு, பாதை விலகுவதை எச்சரிக்கும் லாண்ட் டிபார்சர், வேகத்தை கட்டுப்படுத்த உதவும் துரித ரேடார் குரூஸ் கட்டுப்பாடு மற்றும் சாலை எச்சரிக்கை குறிகளை அறிய உதவும் அமைப்பு, போன்ற பல விதமான பாதுகாப்பு அம்சங்கள் இந்த ப்ரியஸ் காரில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் இறுதியில், 2016 ப்ரியஸ் மாடல் கார் ஜப்பான் நாட்டில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த சமயத்தில், அதன் விலை மற்றும் மேலும் சில சிறப்பு அம்சங்கள் வெளியிடப்படும் என்று தெரிகிறது.
0 out of 0 found this helpful