மிட்ஷுபிஷி இந்தியாவின் புதிய பஜேரோ ஸ்போர்ட் லிமிடெட் எடிஷன் கார் அறிமுகம்
published on ஜனவரி 27, 2016 02:50 pm by raunak for மிட்சுபிஷி பாஜிரோ
- 15 Views
- 2 கருத்துகள்
- ஒரு கருத்தை எழுதுக
புதிய பஜேரோ ஸ்போர்ட் லிமிடெட் எடிஷன் காரின் ஆட்டோமேடிக் டிரிம்மில், மேம்படுத்தப்பட்ட தோற்றப் பொலிவைத் தவிர, 4WD அமைப்பும் இடம்பெறுகிறது.
ஃபோர்ட் நிறுவனம், தனது புதிய எண்டேவரை இந்தியாவில் களமிறக்கியதைத் தொடர்ந்து, மிட்சுபீஷி இந்தியா நிறுவனம் பஜேரோ ஸ்போர்ட் SUV காரின் லிமிடெட் எடிஷன் வெர்ஷனை, இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. எனவே, SUV பிரிவில் அனல் பறக்கும் போட்டி நடக்கவிருப்பது உறுதி. குறிப்பிட்ட காலத்திற்கு, ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே கிடைக்கவுள்ள இந்த லிமிடெட் எடிஷன் காரின் ஆட்டோமேடிக் வேரியண்ட்டில், மெக்கானிக்கல் மேம்பாடுகள் மட்டுமின்றி, இதன் தோற்றத்தை மேலும் வசீகரப்படுத்துவதற்காக ஏராளமான மேம்பாடுகளை மிட்சுபீஷி நிறுவனம் செய்துள்ளது. பஜேரோ காரை கவர்ச்சிகரமாக்க, ஏற்கனவே உள்ள கலர்களைத் தவிர, கோல்டன் பீஜ் மற்றும் க்லோவ் ப்ரௌன் என்ற இரண்டு புதிய வண்ணங்களை, ஆப்ஷனில் இணைத்துள்ளது. எனினும், இந்த காரின் உட்புற அமைப்பில் எந்த வித மாற்றமும் செய்யப்படவில்லை.
கடந்த வருடம், டொயோடா நிறுவனம் ஃபார்ச்யூனர் காரில் பொருத்திய டைடனியம் க்ரே அலாய் சக்கரங்களை, தற்போது மிட்சுபீஷி தனது லிமிடெட் எடிஷன் பஜேரோ காரில் பொருத்தி அழகு பார்க்கிறது. அது மட்டுமல்ல, பக்கவாட்டு பகுதிகளில் ‘பஜேரோ ஸ்போர்ட்’ என்று இதன் பெயரைப் பறைசாற்றும் 3டி டிகால்கள் மற்றும் ‘லிமிடெட் எடிஷன்’ என்பதைப் பறைசாற்றும் டிகாலை பின்புறத்திலும் ஒட்டி, இதன் கம்பீர தோற்றத்தை மேம்படுத்தியுள்ளது மிட்சுபீஷி. இவை தவிர, ஹெட் லைட்கள், டெய்ல் லாம்ப்கள், கதவு கைப்பிடிகள் மற்றும் சன் வைசர்கள் போன்றவற்றில் க்ரோம் வேலைப்பாடுகளைச் செய்துள்ளதால், இந்த லிமிடெட் எடிஷன் SUV, ஆடம்பரத் தோற்றத்தைப் பெறுகிறது. மேலும், கடந்த வருடம் வெளியான பஜேரோ ஃபேஸ்லிஃப்ட் மாடலில் இடம்பெற்ற அனைத்து அம்சங்களும், இந்த காரிலும் இடம்பெறுகின்றன என்பது SUV பிரியர்களுக்கு ஒரு நற்செய்தி ஆகும். தற்போது இந்திய சாலைகளில் சீறிப் பாய்ந்து கொண்டிருக்கும் இரட்டை வண்ண பஜேரோ தவிர, லிமிடெட் எடிஷன் மாடலுக்காக பிரெத்தியேகமாக மேலும் இரண்டு புதிய நிறங்களை மிட்சுபீஷி அறிமுகப்படுத்தியுள்ளது. கோல்டன் பீஜ் மற்றும் க்லோவ் ப்ரௌன் என்ற இரண்டு வண்ணங்களும் நவீனமாகவும், சாலைகளில் செல்லும் போது அனைவரையும் திரும்பிப் பார்க்கச் செய்யும்படியும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
அனைவரையும் கவர்ந்திழுக்கும் வகையில் மாற்றப்பட்டுள்ள லிமிடெட் எடிஷன் பஜேரோ காரின் ஆட்டோமேடிக் வேரியண்ட்டில், பாடில் ஷிப்டர்கள் இணைக்கப்பட்டுள்ள 5 ஸ்பீட் ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிஷன் மட்டுமல்லாது, வாடிக்கையாளர்கள் விரும்பும் 4WD அமைப்பும் இடம்பெறுகிறது. இதற்கு முன் வந்த பஜேரோவின் ஆட்டோமேடிக் டிரிம்மில் 4x2 லேஅவுட் மட்டுமே வந்தது என்பதை நாம் இங்கு நினைவுகூற வேண்டும். இது தவிர, வேறு எந்த மெக்கானிக்கல் மாற்றங்களும் இந்த காரில் இடம்பெறவில்லை. புதிய பஜெரோவில் பொருத்தப்பட்டுள்ள 2.2 லிட்டர் டீசல் இஞ்ஜின் மேனுவல் ட்ரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்படும் போது, 178 PS சக்தி மற்றும் 400 Nm டார்க்கை உற்பத்தி செய்கிறது. அதே நேரத்தில், ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்படும் போது 350 Nm டார்க்கை உற்பத்தி செய்கிறது.
ஆதாரம்: Autocar India
மேலும் வாசிக்க
2016 மிட்சுபிஷி பாஜிரோ ஸ்போர்ட்ஸ் / சேலன்ஜரின் மறைப்பு திரை விலகியது
0 out of 0 found this helpful