• English
  • Login / Register

2015 லாஸ் ஏஞ்சில்ஸ் ஆட்டோ ஷோவில், சிறிய அளவிலான மாற்றங்களுடன் புதுப்பிக்கப்பட்ட 2016 மிட்சுபிஷி அவுட்லேண்டர் ஸ்போர்ட்

modified on நவ 20, 2015 10:40 am by bala subramaniam for மிட்சுபிஷி பாஜிரோ

  • 17 Views
  • ஒரு கருத்தை எழுதுக

சென்னை:

இந்திய சந்தையில் இருந்து பஜேரா ஸ்போர்ட் அநேகமாக நிறுத்தப்பட்டது போல தெரிந்தாலும், சர்வதேச அளவில் மிட்சுபிஷி நிறுவனம் தொடர்ந்து சுறுசுறுப்பான வியாபாரத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் இந்நிறுவனத்தின் 2016 அவுட்லேண்டர் ஸ்போர்ட் காரின் ஸ்டைல்கள் மற்றும் அம்சங்களில் ஒரு சில மேம்பாடுகளை அளித்து வெளியிடப்பட்டுள்ளது. மிட்சுபிஷியின் சிறந்த விற்பனையாகும் CUV-யான அவுட்லேண்டர் ஸ்போர்ட் காரின் முன்பக்க வடிவமைப்பு கருத்தின் கீழ் அமைந்த பிராண்டின் “டைனாமிக் ஷில்டு” மூலம் இப்போது ஒரு மிரட்டும் வெளிப்புறத் தோற்றத்தை பெற்றுள்ளது. மேலும் பவர் ஃபோல்டிங் சைடு மிரர்கள் உடன் LED டேன் இன்டிகேட்டர்கள், வீல் லிப் மோல்டிங்கள், ஆட்டோ-டிம்மிங் ரேர் வியூ மிரர் உடன் ஹோம்லிங்க் மற்றும் ஒரு புதிய 18-இன்ச் அலாய் வீல் டிசைன் என்ற மற்ற புதிய அம்சங்களையும் கொண்டுள்ளது.

இது குறித்து MMNA எக்ஸிக்யூட்டிவ் துணை தலைவர் டான் ஸ்வேரின்ஜின் கூறுகையில், “மிட்சுபிஷி மோட்டார்ஸ் நிறுவன தயாரிப்புகளில், அவுட்லேண்டர் ஸ்போர்ட் ஒரு பிராண்ட் முன்னோடியாக திகழ்கிறது. எனவே இக்காரின் கவர்ச்சிகரமான 2016 ஆண்டு மாடலை வெளியிடுவதில் நாங்கள் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம். இந்த அவுட்லேண்டர் ஸ்போர்ட் கார், நம்பகத்தன்மை மற்றும் மதிப்பு ஆகியவற்றில் நம்பிக்கையின் மகிழ்ச்சியை அளிக்கும் வாகனமாக எப்போதும் இருந்துள்ளது. இந்நிலையில் 2016 ஆண்டு மாடலும் இதேபோல தொடரும் வகையில், மிட்சுபிஷியின் CUV வரிசையில் ஒருங்கிணைந்த ஒரு சிறப்பான புதிய குடும்ப தோற்றத்தை கொண்டுள்ளது” என்றார்.

புதிய அவுட்லேண்டர் ஸ்போர்ட் காரின் உட்புறத்தில், ஒரு மறுவடிவமைப்பை பெற்ற ஸ்டீயரிங் வீல், புதிய 6.1 இன்ச் டிஸ்ப்ளே ஆடியோ, உயர்தர சீட் துணிகள் மற்றும் ஒரு புதிய லைட் க்ரே உட்புற தேர்வு ஆகியவற்றை கொண்டுள்ளது. பாதுகாப்பு அம்சங்களில் ஒரு மேம்பட்ட ஏழு ஏர்பேக் SRS சிஸ்டம் மற்றும் மிட்சுபிஷியின் காப்புரிமை பெற்ற ரீஇன்ஃபோர்ஸ்டு இன்ஃபேக்ட் சேஃப்டி இவோல்யூஷன் (RISE) பாதுகாப்பு செல் பாடி கட்டமைப்பு ஆகியவற்றை பெற்றுள்ளது. மேலும் கூல் சில்வர், டைமண்டு வைட் பியர்ல் மற்றும் குவார்ட்ஸ் பிரவுன் ஆகிய 3 புதிய வெளிப்புற நிறத் தேர்வுகளில் கிடைக்கிறது.

என்ஜின் அமைப்பை குறித்து எந்த கருத்தும் வெளியிடப்படவில்லை. ஆனால் என்ஜினின் வெளிப்புற வரிசை அதுபோலவே தொடரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி ஒரு 148 hp 2.0-லிட்டர் என்ஜின் அல்லது ஒரு 2.4-லிட்டர் என்ஜினை கொண்டு 168 hp வெளியீடு ஆகிய இரண்டில் ஏதாவது ஒன்றை தான் தேர்வு செய்ய முடியும். இவை ஒரு 5-ஸ்பீடு மேனுவல் அல்லது ஒரு CVT தேர்வு உடன் பொருத்தப்பட்டு இயங்கும்.

இதையும் படியுங்கள்:

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment on Mitsubishi பாஜிரோ

Read Full News

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending எஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience