• English
  • Login / Register

பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 -ல் MG M9 எலக்ட்ரிக் எம்பிவி அறிமுகமாகவுள்ளது

எம்ஜி m9 க்காக ஜனவரி 10, 2025 10:25 pm அன்று shreyash ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது

  • 73 Views
  • ஒரு கருத்தை எழுதுக

இந்தியாவில் எம்ஜி M9 எலக்ட்ரிக் எம்பிவி -யானது பிரீமியம் எம்ஜி செலக்ட் அவுட்லெட்டுகள் மூலம் விற்பனை செய்யப்படும்.

  • நேர்த்தியான LED DRL -கள், டூயல்-டோன் அலாய் வீல்கள், ஸ்லைடிங் கதவுகள் மற்றும் இணைக்கப்பட்ட LED டெயில் லைட்ஸ் ஆகியவற்றை வெளியில் பார்க்க முடிகிறது.

  • உள்ளே இந்தியா-ஸ்பெக் MG M9 EV -யில் டூயல்-டோன் பிளாக் மற்றும் டேன் கேபின் தீம் கொடுக்கப்பட்டுள்ளது.

  • இரண்டாவது வரிசையில் ரிக்ளைனிங் செயல்பாடுடன் பவர்டு ஒட்டோமான் சீட்கள் உள்ளன.

  • இந்தியா-ஸ்பெக் M9 MPV உடன் நடுத்தர வரிசையில் இருப்பவர்களுக்கான 8 மசாஜ் மோடுகள் மற்றும் டூயல்-பேன் பனோரமிக் சன்ரூஃப் போன்ற வசதிகளையும் MG உறுதிப்படுத்தியது.

  • உலகளாவிய-ஸ்பெக் M9 MPV ஆனது 90 kWh பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது WLTP கிளைம்டு 430 கி.மீ (ஒருங்கிணைந்த) ரேஞ்சை கொடுக்கும்.

  • விலை ரூ.70 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) இருந்து தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எம்ஜி M9 பிரீமியம் எலக்ட்ரிக் MPV -யானது விரைவில் பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 காட்சிக்கு வைக்கப்பட உள்ளது. MG -ன் இந்த எலக்ட்ரிக் MPV தற்போது சர்வதேச சந்தைகளில் மேக்சஸ் மிஃபா 9 என்ற பெயரில் விற்பனையில் செய்யப்படுகிறது. இந்தியாவில் MG -யின் பிரீமியம் காராக M9 MPV ஆனது ஏற்கெனவே உள்ள MG சைபர்ஸ்டார் உடன் குறிப்பிட்ட நகரங்களில் உள்ள பிரீமியம் MG செலக்ட் அவுட்லெட்டுகள் மூலம் விற்கப்படும். 

லிமோசின் வடிவமைப்பு

MG MIFA9 Rear Right Side

MG M9 ஆனது கியா கார்னிவல் அல்லது டொயோட்டா வெல்ஃபையர் போன்ற வழக்கமான வேன் போன்ற வடிவமைப்பைக் கொண்டுள்ளது. முன்பக்கத்தில் இது நேர்த்தியான LED DRL -கள் உள்ளன. முன்பக்க பம்பரில் ஹெட்லைட்கள் கொடுக்கப்பட்டுள்ளன. பக்கவாட்டில் பார்க்கும் போது இந்த பிரிவில் MPV களில் காணப்படுவது போல், டூயல்-டோன் அலாய் வீல்கள் மற்றும் ஸ்லைடிங் டோர்களை பார்க்க முடிகிறது. பின்புறத்தில் கனெக்டட் எல்இடி டெயில் லைட்களுடன் தட்டையான கிளாஸ் உள்ளது.

விசாலமான 3-வரிசை இருக்கை

MG MIFA9 Exterior Image

MG -ன் இந்த எலக்ட்ரிக் MPV 3-வரிசை இருக்கை அமைப்பில் கிடைக்கும், 7 பயணிகள் வரை தங்கும் திறன் கொண்டது. இந்தியா-ஸ்பெக் M9 டூயல்-டோன் பிளாக் மற்றும் டேன் கேபின் தீம் உள்ளது. இந்தியா-ஸ்பெக் M9 MPV -ன் டாஷ்போர்டை நாம் இன்னும் பார்க்கவில்லை என்றாலும், ஃபுளோட்டிங் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் டிஸ்ப்ளே மற்றும் 2-ஸ்போக் ஸ்டீயரிங் ஆகியவற்றை உள்ளடக்கிய உலகளாவிய வேரியன்ட் -க்கு இது நெருக்கமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டாவது வரிசையில் ஹேண்ட்ரெயில்களில் டச் ஸ்கிரீன் கன்ட்ரோல்களுடன் பவர்டு கேப்டன் ஓட்டோமான் சீட்கள் மற்றும் இரண்டு இருக்கைகளுக்கும் பிரத்யேக ஏசி வென்ட்கள் உள்ளன. எம்ஜி இருக்கைகள் ரிக்ளைனிங் ஃபங்ஷன் மற்றும் 8 மசாஜ் மோடுகளை கொண்டிருக்கும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. இந்த இந்தியா-ஸ்பெக் எம்ஜி எம்பிவி மேலும் 3-ஜோன் ஏசி செட்டப் மற்றும் டூயல்-பேன் பனோரமிக் சன்ரூஃப் ஆகியவற்றைக் கொண்டிருக்கும். 

12.3 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீன், 7 இன்ச் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே, வென்டிலேட்டட் சீட்கள், வயர்லெஸ் ஃபோன் சார்ஜர், ஏர் ப்யூரிஃபையர், 12-ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம் மற்றும் 64-கலர் ஆம்பியன்ட் லைட்ஸ் போன்ற வசதிகளையும் இது பெறலாம். 7 ஏர்பேக்குகள், EBD உடன் ஏபிஎஸ், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம் (TPMS), 360 டிகிரி கேமரா மற்றும் லெவல்-2 ADAS ஆகியவை பாதுகாப்புக்காக கொடுக்கப்படலாம்.

எலக்ட்ரிக் பவர்டிரெய்ன்

இந்த பிரிவில் உள்ள சில பிரீமியம் MPV -களை போல இல்லாமல் MG M9 ஆனது ஆல் எலக்ட்ரிக் பவர்டிரெயின் உடன் மட்டுமே வரும். குளோபல் பதிப்பிற்கான விவரங்கள் இங்கே:

பேட்டரி பேக்

90 kWh

கிளைம்டு ரேஞ்ச்

430 கி.மீ வரை (WLTP)

பவர்

245 PS

டார்க்

350 Nm

MG MIFA9 Gas Cap (Open)

MG M9 MPV இன் இந்தியா-ஸ்பெக் பதிப்பிற்கு இந்த விவரக்குறிப்புகள் மாறுபடலாம் என்பதை நினைவில் கொள்ளவும்.

எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் போட்டியாளர்கள்

எம்ஜி M9 எலக்ட்ரிக் எம்பிவியின் விலை ரூ.70 லட்சத்தில் இருந்து (எக்ஸ்-ஷோரூம்) எதிர்பார்க்கப்படுகிறது. இது கியா கார்னிவல் மற்றும் டொயோட்டா வெல்ஃபயர் ஆகியவற்றுக்கு எலக்ட்ரிக் மாற்றாக இருக்கும்.

ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகள் வேண்டுமா ? கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.

was this article helpful ?

Write your Comment on M g m9

explore மேலும் on எம்ஜி m9

  • எம்ஜி m9

    4.65 மதிப்பீடுகள்இந்த காரை ரேட்டிங் செய்ய
    Rs.70 Lakh* Estimated Price
    மார்ச் 17, 2025 Expected Launch
    ட்ரான்ஸ்மிஷன்ஆட்டோமெட்டிக்
    அறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக
space Image

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

டிரெண்டிங் எலக்ட்ரிக் கார்கள்

  • பிரபலமானவை
  • உபகமிங்
  • பிஒய்டி sealion 7
    பிஒய்டி sealion 7
    Rs.45 - 57 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    பிபரவரி, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • மஹிந்திரா xev 4e
    மஹிந்திரா xev 4e
    Rs.13 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    மார, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • ஆடி க்யூ6 இ-ட்ரான்
    ஆடி க்யூ6 இ-ட்ரான்
    Rs.1 சிஆர்கணக்கிடப்பட்ட விலை
    மார, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • புதிய வேரியன்ட்
    மஹிந்திரா xev 9e
    மஹிந்திரா xev 9e
    Rs.21.90 - 30.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    மார, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • மாருதி e vitara
    மாருதி e vitara
    Rs.17 - 22.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    மார, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
×
We need your சிட்டி to customize your experience