எம்ஜி குளோஸ்டர் 2020 தீபாவளியில் அறிமுகமாகும்; டொயோட்டோ ஃபார்டியூனர், ஃபோர்டு எண்டெவர் ஆகியவற்றிற்கு போட்டியாக இருக்கும்
published on பிப்ரவரி 26, 2020 11:19 am by dhruv for எம்ஜி குளோஸ்டர் 2020-2022
- 63 Views
- ஒரு கருத்தை எழுதுக
சீனாவில் மேக்ஸஸ் டி90 என்றும், ஆஸ்திரேலியாவில் எல்டிவி டி90 என்றும் விற்கப்படும் எம்ஜி குளோஸ்டர் ஆனது ஒரு முழு அளவிலான, சிறந்த வெளிப்புற கட்டமைப்பை உடைய எஸ்யுவி ஆகும், இது விரைவிலேயே எம்ஜியின் இந்தியத் தயாரிப்பு வரிசையில் முதன்மையானதாக மாறும்
-
பெட்ரோல் மற்றும் டீசல் என்ற இரு இயந்திரங்களும் 2.0-லிட்டர் அலகுகளைப் பெற்றிருக்கும், இதில் பெட்ரோல் இயந்திரம் ஒரு டர்போவை பயன்படுத்துகிறது, டீசல் இயந்திரங்கள் இரு டர்போவை பயன்படுத்துகிறது.
-
பற்சக்கரப்பெட்டியானது 8-வேகத் தானியங்கியும், நான்கு-சக்கர இயக்க அமைப்பையும் கொண்டுள்ளது.
-
எல்இடி விளக்குகள், 12.3-அங்குல தொடுதிரை மற்றும் 360 டிகிரி கோணத்தில் காட்சியைக் பார்க்கும் அமைப்பு போன்ற சில அம்சங்கள் இடம்பெறுகிறது.
-
இதன் விலை ரூபாய் 28 லட்சம் முதல் ரூபாய் 35 லட்சம் வரை இருக்கும்.
எம்ஜி ஆட்டோ எக்ஸ்போ 2020 இல் குளோஸ்டரை காட்சிப்படுத்தியது. இந்த எஸ்யுவியின் அளவு டொயோட்டோ ஃபார்டியூனர் மற்றும் எண்டெவர் போன்ற வாகனங்களுடன் ஒப்பிடும் வகையில் மிகப் பெரியதாக உள்ளது, மேலும் இது தீபாவளியின் போது விற்பனைக்கு வருகிறது, இது சந்தையில் மேற்கூறிய வாகனங்களுக்குப் போட்டியாகவும் இருக்கும்.
குளோஸ்டாரின் வடிவமைப்பு பாணி என்று வருகையில், மிக அற்புதமாக உள்ளது. இதன் அளவு மிகப்பெரியதாக உள்ளதால் சாலையில் எவ்வித பாதிப்பும் இல்லாமல் ஓட்டிச் செல்ல உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதன் அளவு பெரிதாக இருந்தாலும், அதைச் சுற்றியுள்ள மென்மையான கோடுகள் எஸ்யுவியின் தனித்தனி பாகங்களின் தோற்றத்தை ஆக்ரோஷமானதாக மாற்றாது என்பதைக் குறிப்பிடுகிறது. இந்த எஸ்யுவியின் அளவு பெரிதாக இருப்பதால், சக்கரங்களின் அளவு 19- அங்குலங்களாக உள்ளது, இவற்றைக் காருடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது சிறிய அளவிலான தோற்றத்தை வெளிப்படுத்தும்.
முன்புற இயந்திரத்தைப் பொறுத்தவரை, குளோஸ்டர் (மேக்ஸஸ் டி90) பெட்ரோல் மற்றும் டீசல் இயந்திரத்தைப் பெற்றுள்ளது. சீன-தனிச்சிறப்பம்சம் பொருந்திய எஸ்யுவியின் பெட்ரோல் இயந்திரமானது அதிகபட்சமாக 220பிஎஸ் ஆற்றலையும், 365என்எம் உயரிய முறுக்குத்திறனையும் உருவாக்குகிற 2.0-லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட மோட்டாராக உள்ளது. டீசல் இயந்திரமும் 2.0-லிட்டர் அமைப்பைப் பெற்றுள்ளது, ஆனால் இதில் ஒரு டர்போவுக்கு பதிலாக, இரண்டு டர்போசார்ஜர்களைப் உபயோகித்து இயந்திரத்திற்குள் காற்றை உட்செலுத்துகிறது. அதாவது, அதன் ஆற்றல் வெளியீடு பெட்ரோல் இயந்திர வகைக்கு சமமாக இருக்கும், ஆனால் முறுக்குத்திறன் அளவு 480என்எம் ஆக இருக்கும். இரு வகைகளிலும் ஜெட்எஃப் இலிருந்து பெறப்பட்ட 8-வேகத் தானியங்கி உட்செலுத்தல் அமைப்புகள் உள்ளது, இதன் இயக்கத்திற்கு நான்கு சக்கர இயக்க அமைப்புகள் உள்ளது.
சீனாவில் உள்ள மேக்ஸஸ் டி90 போல குளோஸ்டரில் மிகச்சிறந்த அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. சீன சந்தையில், மேக்ஸஸ் டி90 ஆனது எல்இடி முகப்புவிளக்குகள் மற்றும் டிஆர்எல்கள், அழகான வெளிப்புற காட்சியைக் காணக்கூடிய மேற்கூரை அமைப்பு, தானியங்கி முறையிலான மூன்று-பருவ காலநிலை கட்டுப்பாட்டு அமைப்பு, 8-அங்குல டிஜிட்டல் கருவித் தொகுப்பு, 12.3-அங்குல தொடுதிரை, மின்மயமாக்கப்பட்ட முன்புற இருக்கைகள், 360-டிகிரி கோணம் வரை தெளிவாகக் காணக்கூடிய கேமரா போன்ற சிறந்த அம்சங்களுடன் வழங்கப்படுகிறது. இந்த அனைத்து அம்சங்களும் எம்ஜி குளோஸ்டரிலும் இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். ஆறு காற்று பைகள், இஎஸ்பி, மலையேற்ற கட்டுப்பாடு மற்றும் மலையிறக்க கட்டுப்பாடு ஆகிய பாதுகாப்பு அம்சங்களும் இதில் இடம்பெறும்.
எம்ஜி ஆனது குளோஸ்டரை அறிமுகப்படுத்தும் போது, இதன் போட்டி கார்களுக்கு மத்தியில் இதனுடைய விலை ரூபாய் 28 லட்சம் முதல் ரூபாய் 35 லட்சம் வரை இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். இது டொயோட்டோ ஃபார்டியூனர், ஃபோர்டு எண்டெவர், மஹிந்திரா அல்ட்டுராஸ் ஜி4 மற்றும் ஸ்கோடா கோடியாக், விடபில்யு டிகுவான் ஆல்ஸ்பேஸ் ஆகியவற்றில் உள்ளதைப் போலச் சிறந்த உட்கட்டமைப்பு உடைய இசுஸூ எம்யு-எக்ஸ் ஆகியவற்றுக்கு போட்டியாக இருக்கும்.