• English
    • Login / Register

    Mercedes-Maybach SL 680 மோனோகிராம் சீரிஸ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது

    மெர்சிடீஸ் மேபெக் எஸ்எல் 680 க்காக மார்ச் 17, 2025 11:16 pm அன்று dipan ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது

    • 23 Views
    • ஒரு கருத்தை எழுதுக

    மேபேக் ட்ரீட்மென்ட்டை பெறும் முதல் SL மாடல் இதுவாகும். மேலும் பிரீமியமான வெளிப்புறத்துடன் தொழில்நுட்பம் நிறைந்த கேபினையும் இது பெறுகிறது.

    • ஆங்குலர் புரொஜெக்டர் ஹெட்லைட்கள் மற்றும் டெயில் லைட்ஸ், 21-இன்ச் போலி அலாய் வீல்கள் மற்றும் மேபேக் லோகோவுடன் கூடிய பிளாக் சாஃப்ட் டாப் ஆகியவற்றை இது கொண்டுள்ளது.

    • டூயல்-டோன் டேஷ்போர்டு மற்றும் ஸ்டீயரிங் தீம் உடன் வொயிட் கலர் தீம் உடன் இது வருகிறது. 

    • இருக்கைகள் வெள்ளை நிறத்தில் லெதர் அப்ஹோல்ஸ்டரியை கொண்டுள்ளன.

    • செங்குத்தான 11.9-இன்ச் டச் ஸ்கிரீன், 12.3-இன்ச் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே மற்றும் டூயல்-சோன் ஆட்டோ ஏசி ஆகியவை உள்ளன.

    • பாதுகாப்புக்காக மல்டி ஏர்பேக்குகள், டேஷ்கேம், 360 டிகிரி கேமரா மற்றும் ADAS ஆகியவை இதில் கொடுக்கப்பட்டுள்ளன.

    • 585 PS மற்றும் 800 Nm அவுட்புட்டை கொடுக்கும் 4-லிட்டர் ட்வின்-டர்போ V8 இன்ஜின் இதில் உள்ளது.

    • இந்தியாவிற்கு ஒட்டு மொத்தமாக 3 யூனிட்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன. விநியோகங்கள் Q1 2026 முதல் தொடங்கும்.

    இந்தியாவில் ரூ 4.20 கோடியில் (எக்ஸ்-ஷோரூம், பான்-இந்தியா) Mercedes-Maybach SL 680 மோனோகிராம் சீரிஸ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது முதல் மேபேக் SL மாடல் ஆகும். இதன் விலை Mercedes-AMG SL 55 காரை விட 1.50 கோடி அதிகம். இந்த ரோட்ஸ்டருக்கான முன்பதிவு ஏற்கனவே திறக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்தியாவிற்கு 3 கார்கள் மட்டுமே விற்பனைக்கு கொண்டு வரப்படும், இவற்றின் டெலிவரிகள் 2026 முதல் காலாண்டில் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மெர்சிடிஸ்-மேபெக் SL 680 மோனோகிராம் சீரிஸை பற்றி விரிவாக இங்கே பார்ப்போம்:

    வெளிப்புறம்

    Mercedes-Maybach SL 680 Monogram Series
    Mercedes-Maybach SL 680 Monogram Series

    வடிவமைப்புக்காக மெர்சிடிஸ்-மேபெக் SL 680 மோனோகிராம் சீரிஸ், மெர்சிடிஸ்-ஏஎம்ஜி SL 55 மாடலில் இருந்து சில விஷயங்களை பெற்றுள்ளது. அதே ஆங்குலர் LED ப்ரொஜெக்டர் ஹெட்லைட்கள் மற்றும் LED DRL -களை இது கொண்டுள்ளது. இருப்பினும் SL 680 ஆனது ஒரு மேபேக் கிரில் மற்றும் குரோம் ஹைலைட்ஸ் உடன் வருகிறது. இதன் பம்பர் வடிவமைப்பும் மாற்றப்பட்டுள்ளது. மேலும் பம்பரில் நிறைய மேபேக் லோகோ கொடுக்கப்பட்டுள்ளது. இது ஒரு பிரீமியம் கவர்ச்சியை காருக்கு கொடுக்கிறது. ஹூட் பிளாக் கலரில் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது மற்றும் அதில் மேபேக் லோகோக்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

    Mercedes-Maybach SL 680 Monogram Series
    Mercedes-Maybach SL 680 Monogram Series

    இது 5-ஹோல் மோனோபிளாக் அல்லது மற்ற மேபேக் மாடல்களுக்கு பொதுவான ஒரு ஸ்போக் டிசைனுடன் 21-இன்ச் போலியான அலாய் வீல்கள் காரில் உள்ளன. மேபேக் லோகோ, கருப்பு வெளிப்புற ரியர்வியூ கண்ணாடிகள் (ORVM -கள்) மற்றும் ஃப்ளஷ் டோர் ஹேண்டில்களில் குரோம் ஸ்டிரிப் உடன் முன் ஃபெண்டர்களில் குரோம் டிரிம் கொடுக்கப்பட்டுள்ளது.

    Mercedes-Maybach SL 680 Monogram Series
    Mercedes-Maybach SL 680 Monogram Series

    பின்புறத்தில் பிரீமியம் மற்றும் மேபேக் SL 680 நேர்த்தியான ட்ரை ஆங்குலர் LED டெயில் லைட்ஸ், டூயல் எக்ஸாஸ்ட் மற்றும் பின்புற பம்பரில் ஒரு குரோம் துண்டு ஆகியவற்றை கொண்டுள்ளது. மேலும், பிளாக் சாஃப்ட் டாப் மேபேக் லோகோ பேட்டர்ன்களும் உள்ளன.

    இது இரண்டு வண்ண ஆப்ஷன்களில் மட்டுமே கிடைக்கிறது: ரெட் ஆம்பியன்ஸ் மற்றும் வொயிட் ஆம்பியன்ஸ்.

    இன்ட்டீரியர்

    Mercedes-Maybach SL 680 Monogram Series

    வெளிப்புறமானது ஒப்பீட்டளவில் ஸ்போர்ட்டியாக இருந்தாலும் உட்புறம் பிரீமியத்தை கொண்டுள்ளது. இது வொயிட் லெதர் இருக்கைகளுடன் ஆல் வொயிட் கேபின் தீம் கொடுக்கப்பட்டுள்ளது. ஸ்டீயரிங் டூயல்-டோன் பிளாக் மற்றும் வொயிட் கலரில் உள்ளது. டாஷ்போர்டின் மேல் பகுதியும் பிளாக் கலரில் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது. வட்டவடிவ ஏசி வென்ட்களில் குரோம் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது. மற்றும் சென்டர் கன்சோல் சில்வர் மற்றும் பிளாக் கலரில் உள்ளது. 

    Mercedes-Maybach SL 680 Monogram Series

    ஸ்டீயரிங் வீல் மற்றும் ஆக்ஸிலரேட்டர் பெடலிலும் மேபேக் எழுத்துக்கள் கொடுக்கப்பட்டுள்ளன, அதே நேரத்தில் இருக்கைகள் பின்புறத்தில் மேபேக் லோகோ பொறிக்கப்பட்டுள்ளது.

    மேலும் படிக்க: புதிதாக Mahindra Thar Roxx காரை வாங்கிய பிரபல நடிகர் ஜான் ஆபிரகாம்

    வசதிகள் மற்றும் பாதுகாப்பு

    இது ஒரு மேபேக் மாடலாக என்பதால் இதில் வசதிகள் அதிகமாக உள்ளன.  12.3-இன்ச் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே, 11.9-இன்ச் டச்ஸ்கிரீன் ஒரு போர்ட்ரெய்ட் ஓரியன்ட்டேஷன் மற்றும் கலர்டு ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே (HUD) ஆகியவை உள்ளன. இது ஃபிங்கர்பிரின்ட் ஸ்கேனர், வயர்லெஸ் ஃபோன் சார்ஜர், பர்மெஸ்டர் சவுண்ட் சிஸ்டம், டூயல்-ஜோன் ஆட்டோ ஏசி, ஹீட் ஸ்டீயரிங், 64-கலர் ஆம்பியன்ட் லைட்ஸ் மற்றும் சாஃப்ட் கூரை திறந்திருக்கும் போது பயணிகளை சூடாக வைத்திருக்க இருக்கைகளின் பின்புறத்தில் நெக் ஹீட்டர்களும் உள்ளன.

    பாதுகாப்புக்காக மல்டி ஏர்பேக்குகள், 360-டிகிரி கேமரா, டாஷ்கேம், ஆட்டோ பார்க்கிங் அசிஸ்ட் மற்றும் லேன் கீப் அசிஸ்ட் மற்றும் அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல் உள்ளிட்ட அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) -களுடன் இது வருகிறது. 

    பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள்

    மெர்சிடிஸ்-மெபெக் SL 680 மோனோகிராம் சீரிஸில் 4-லிட்டர் ட்வின்-டர்போ V8 இன்ஜின் கொடுக்கப்பட்டுள்ளது, அதன் விவரங்கள் இங்கே:

    இன்ஜின்

    4 லிட்டர் ட்வின் டர்போ V8 பெட்ரோல் இன்ஜின்

    பவர்

    585 PS

    டார்க்

    800 Nm

    டிரான்ஸ்மிஷன்

    9-ஸ்பீடு AT*

    டிரைவ்டிரெய்ன்

    AWD^

    *AT = டார்க் கன்வெர்டர் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன்

    ^4WD = ஆல்-வீல் டிரைவ்

    மேபெக் SL ஆனது 0-100 கிமீ/மணி வேகத்தை வெறும் 4 வினாடிகளில் எட்டும். மேலும் இதன் அதிகபட்ச வேகம் 260 கி.மீ/மணி (மின்னணு ரீதியாக வரையறுக்கப்பட்ட) ஆகும். மேலும் மேபெக் SL 680 ஆனது அதன் சாலை கையாளும் திறன்களுக்கு உதவுவதற்காக பின்புற ஆக்சில் ஸ்டீயரிங், ஆக்டிவ் சஸ்பென்ஷன் செட்டப் மற்றும் ரியர் ஆக்சில் லாக்கிங் டிஃபெரன்ஷியல் ஆகியவையும் உள்ளன. 

    போட்டியாளர்கள்

    Mercedes-Maybach SL 680 Monogram Series

    மெர்சிடிஸ்-மேபெக் SL 680 மோனோகிராம் சீரிஸ் ஆனது பென்ட்லி கான்டினென்டல் ஜிடி கன்வெர்ட்டபிள் மற்றும் பென்ட்லி முல்லினர் ஆகியவற்றுக்கு போட்டியாக இருக்கும்.

    ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து லேட்டஸ்ட் அப்டேட்டுகளுக்கு கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.

    was this article helpful ?

    Write your Comment on Mercedes-Benz Maybach SL 680

    ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

    புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

    கார் செய்திகள்

    • டிரெண்டிங்கில் செய்திகள்
    • சமீபத்தில் செய்திகள்

    டிரெண்டிங் கான்வெர்டிப்ளே சார்ஸ்

    • லேட்டஸ்ட்
    • உபகமிங்
    • பிரபலமானவை
    ×
    We need your சிட்டி to customize your experience