மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி கூபே ரூபாய் 62.70 லட்சத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது
published on மார்ச் 05, 2020 12:45 pm by rohit for மெர்சிடீஸ் ஜிஎல்சி கூப்
- 37 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஃபேஸ்லிஃப்ட் பிஎஸ்6 பெட்ரோல் மற்றும் டீசல் இயந்திரங்களைப் பெறுகிறது. துரதிர்ஷ்டவசமாக, இந்த தருணத்தில் ஏஎம்ஜி வகை இல்லை
-
இந்தியாவில் 3 டிசம்பர் 2019 அன்று வழக்கமான ஜிஎல்சி ஃபேஸ்லிஃப்ட் அறிமுகப்படுத்தப்பட்டது.
-
அதன் ஸ்போர்ட்டியர் தோற்றமுடைய உடன்பிறப்பான ஜிஎல்சி கூபே இரண்டு வகைகளில் கிடைக்கிறது: ஜிஎல்சி 300 மற்றும் ஜிஎல்சி 300 டி.
-
இதன் புதுப்பிக்கப்பட்ட சிறப்பம்சங்களில் எல்ஈடி முகப்பு விளக்குகள் மற்றும் பின்புற விளக்குகள் மற்றும் புதிதாக வடிவமைக்கப்பட்ட 19 அங்குல உலோக சக்காங்கள் ஆகியவை அடங்கும்.
-
இது இரண்டு பிஎஸ்6 இயந்திரங்களுடன் வருகிறது: 2.0 லிட்டர் டர்போ-பெட்ரோல் யூனிட் (258 பிஎஸ்/370 என்எம்) மற்றும் 2.0 லிட்டர் டீசல் (245 பிஎஸ்/500 என்எம்).
-
மெர்சிடிஸின் நடுத்தர-அளவு எஸ்யூவி கூபே போட்டியாளர்களில் பிஎம்டபிள்யூ எக்ஸ் 4 மற்றும் லெக்ஸஸ் என்எக்ஸ் ஆகியவை அடங்கும்.
ஜெர்மனி கார் தயாரிப்பு நிறுவனமான மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியாவில் முகப்பு மாற்றம் செய்யப்பட்ட ஜிஎல்சி கூபேவை அறிமுகப்படுத்தியுள்ளது. இது இரண்டு வகைகளில் கிடைக்கிறது: ஜிஎல்சி 300 மற்றும் ஜிஎல்சி 300 டி ஆகும். இவற்றின் விலை முறையே ரூபாய் 62.70 லட்சம் மற்றும் ரூபாய் 63.70 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் பான்-இந்தியா) ஆகும்.
மாற்றங்களைப் பொறுத்தவரை, முகப்பு மாற்றம் செய்யப்பட்ட ஜிஎல்சி கூபேயில் புதுப்பிக்கப்பட்ட மல்டிபீம் எல்ஈடி முகப்பு விளக்குகள் மற்றும் பின்புற விளக்குகள், புதிய 19 அங்குல உலோக சக்கரங்கள், மறுவடிவமைப்பு செய்யப்பட்ட முன் புற பாதுகாப்புச் சட்டகம் மற்றும் சற்று மாற்றியமைக்கப்பட்ட மோதுகைத்தாங்கிகளுடன் வருகிறது. முகப்பு மாற்றம் செய்யப்பட்ட ஜிஎல்சி கூபே மெர்சிடிஸ் மீ கனெக்ட் மற்றும் எம்பியூஎக்ஸ் டிஜிட்டல் உதவி தொழில்நுட்பம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. சுற்றுச்சூழல், வசதி, தனிநபர், விளையாட்டு மற்றும் விளையாட்டு+ ஆகிய ஐந்து வெவ்வேறு முறைகளுக்கு இடையே வாகனத்தை இயக்க உங்களை அனுமதிக்கும் பயன்முறைகள் இதில் பொருத்தப்பட்டுள்ளது.
புதுப்பிக்கப்பட்ட ஜிஎல்சி கூபே 64 சுற்றுப்புற ஒளிரும் வண்ண விளக்கு விருப்பங்கள் மற்றும் 10.25 அங்குல தொடுதிரை ஒளிபரப்பு அமைப்புடன் வருகிறது. நிலையான ஜிஎல்சியில் இருந்து அதன் உட்புறத்தை அமைக்கும் ஒரு விஷயம், மற்ற மெர்சிடிஸ் பென்ஸ் மாதிரிகளில் காணப்படுவது போல் புதிய 12.3 அங்குல டிஜிட்டல் கருவி தொகுப்பு ஆகும். முகப்பு மாற்றம் செய்யப்பட்ட ஜிஎல்சி கூபேவில் பாதுகாப்பு அம்சங்களில் ஏழு காற்று பைகள், வாகனத்தை நிறுத்தும் உதவி மற்றும் 360 டிகிரி கேமரா ஆகியவை அடங்கும்.
முன்புற இயந்திர கதவின் கீழ், எஸ்யூவி பிஎஸ்6-இணக்கமான பெட்ரோல் மற்றும் டீசல் இயந்திரங்களுடன் வழங்கப்படுகிறது. 2.0 லிட்டர் டர்போ-பெட்ரோல் அலகு 258 பிபிஎஸ் ஆற்றலையும் 370 என்எம் முறுக்கு விசையையும் வெளியேற்றும், 2.0 லிட்டர் டீசல் இயந்திரம் 245 பிபிஎஸ் மற்றும் 500 என்எம் ஆகியவற்றை வழங்குகிறது. இரண்டு இயந்திரங்களும் 9-வேக தானியங்கி செலுத்தும் கருவிப் பெட்டியுடன் இணைக்கப்பட்டுள்ளன. ஜிஎல்சி கூபே 4MATIC ஆல்-வீல் டிரைவ் (AWD) டிரைவ் இயக்கியுடன் இரண்டு வகைகளிலும் நிலையாக வருகிறது. துரதிர்ஷ்டவசமாக, 3.0 லிட்டர் வி 6 பிடர்போ பெட்ரோல் மோட்டார் மூலம் இயக்கப்படும் ஏஎம்ஜி வகை இனி நாட்டில் கிடைக்காது.
இதையும் படியுங்கள்: இந்தியாவில் மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி ஃபேஸ்லிஃப்ட் ரூபாய் 52.75 லட்சத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது
புதுப்பிக்கப்பட்ட ஜிஎல்சி கூபேவின் விலை ரூபாய் 62.70 லட்சம் முதல் ரூபாய் 63.70 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம், பான்-இந்தியா) இருக்கிறது, இது 2019 டிசம்பரில் அறிமுகப்படுத்தப்பட்ட முகப்பு மாற்றம் செய்யப்பட்ட ஜிஎல்சியை விட கூடுதல் விலை கொண்டதாக இருக்கும். இது பிஎம்டபிள்யூ எக்ஸ்4, ஆடி க்யூ5, லெக்ஸஸ் என்எக்ஸ் மற்றும் போர்ஸ் மக்கான் ஆகிய கார்களுக்குப் போட்டியாக இருக்கும்.
மேலும் படிக்க: இறுதி விலையில் மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி கூபே
0 out of 0 found this helpful