இந்திய அரசின் பயணத்திற்கு, இனி மெர்சிடிஸ்-பென்ஸ் E-கிளாஸ் பயன்படும்

மெர்சிடீஸ் இ-கிளாஸ் 2017-2021 க்கு published on அக்டோபர் 23, 2015 05:31 pm by manish

  • 10 பார்வைகள்
  • ஒரு கருத்தை எழுதுக

ஜெய்ப்பூர்:

55 உயர்தர E250 CDI சேடன்களை தயாரித்து அளிக்குமாறு மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனத்திற்கு, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சரகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. ஜெர்மன் வாகன தயாரிப்பு நிறுவனத்திற்கு இந்திய அரசாங்கம் அளித்துள்ள இந்த உத்தரவை ஏற்று, வெளியறவு துறை அமைச்சரகத்திற்கு கார்களை குத்தகைக்கு அளிக்க உள்ளது. இந்த வெளிநாட்டு பிரமுகர்களுக்கான தகவமைப்புகளை பெற்ற வாடகை கார்கள், அரசியலை சார்ந்த மாநில தலைவர்கள், அமைச்சர்கள், பிரதமர்கள் மற்றும் ஜனாதிபதிகள் ஆகியோர் உள்ளிட்டவர்களுக்கு அளிக்கப்பட உள்ளது.

இது குறித்து மெர்சிடிஸ்-பென்ஸ் இந்தியாவின் CEO மற்றும் நிர்வாக இயக்குனர் ரோலண்ட் ஃபோல்கர் கூறியதாவது, “இந்தியா உட்பட சர்வதேச அளவிலான நாடுகளின் தலைவர்களுக்கு, விருப்பமான ஆடம்பர பிராண்ட்டாக மெர்சிடிஸ்-பென்ஸ் உள்ளது. இதை நினைத்து, நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம். E-கிளாஸ் ஆடம்பர சேடன்களை தேர்வு செய்துள்ள வெளியுறவு துறை அமைச்சரகத்தின் இந்த ஆணையை தொடர்ந்து, எங்களின் தயாரிப்புகளின் மீதான உள்ளார்ந்த பலத்தை அதிகரித்து கொள்ளவும், இந்திய ஆடம்பர கார்களுக்கான சந்தையில் மெர்சிடிஸ்-பென்ஸை மிஞ்ச முடியாத பிராண்ட்டாக நிலை நிறுத்தவும் உதவும்” என்றார்.

நம் நாட்டில் இந்நிறுவனத்தின் கடந்தாண்டு புள்ளி விவரங்களோடு ஒப்பிட்டால், இந்தாண்டு ஆகஸ்ட் மாதம் 43% குறிப்பிடத்தக்க வளர்ச்சியை பெற்றுள்ளது. இந்தியாவில் 2015 ஆம் ஆண்டு இந்த ஜெர்மன் வாகன தயாரிப்பாளரால் அறிமுகம் செய்யப்பட்ட 15 புதிய மாடல்களின் முதலீடே, இந்த கணிசமான வளர்ச்சியை பெற்று தந்துள்ளது. இந்தியாவிலேயே மிகவும் பழமையான ஆடம்பர கார் தயாரிப்பு நிறுவனமான மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம், தனது முதல் காரை கடந்த 1995 ஆம் ஆண்டு தயாரித்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தியாவில் இதுவரை 30,000க்கும் அதிகமான மெர்சிடிஸ்-பென்ஸ் E-கிளாஸ் யூனிட்கள் விற்பனையாகி உள்ளன. மேற்கூறிய ஆணையின் மூலம், நம் நாட்டில் இந்த கார் தயாரிப்பாளரின் வளர்ச்சி மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

மேலும் படிக்க:

மெர்சிடிஸ்-பென்ஸ் புதிய MY16 E-கிளாஸ்: துவக்க விலையாக ரூ.48.50 லட்சம் என அறிமுகம்

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment மீது மெர்சிடீஸ் இ-கிளாஸ் 2017-2021

Read Full News

trendingசேடன்-

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பாப்புலர்
×
We need your சிட்டி to customize your experience