மெர்சிடிஸ் – பென்ஸ் C -கிளாஸ் கூபே மாடலை அறிமுகப்படுத்தியது: குறிப்பீடுகளும் வெளியிடப்பட்டன
published on ஆகஸ்ட் 18, 2015 09:24 am by அபிஜித் for மெர்சிடீஸ் நியூ சி-கிளாஸ் 1997-2022
- 13 Views
- ஒரு கருத்தை எழுதுக
2016 ஆம் ஆண்டின் மெர்சிடிஸ் பென்ஸ் C கிளாஸ் கூபே மாடல் இரண்டு நாட்களுக்கு முன்பு காட்சிக்கு வைக்கப்பட்டது, இந்த யூரோப் குறிப்பீட்டு கார் பற்றிய முழு விவரங்கள் தற்போது வெளிவந்து அனைவரையும் ஆச்சர்யத்தில் மூழ்கடித்துள்ளன. C கிளாஸ் சேடன், பார்ப்பதற்கு S கிளாஸின் அமைப்புகளைக் கொண்டுள்ளதால், அதன் குழந்தை போலவே இருக்கிறது. இந்த இரண்டு கதவுகளைக் கொண்ட C கிளாஸ் மாடல் இதற்கு முன்பு வெளியான S கிளாஸ் கூபேயின் பல விதமான அம்ஸங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது. இந்த கார் ஐரோப்பிய வாகன சந்தையில் டிசம்பர் மாதத்தில் அறிமுகப்படுத்தபடும் என்றும் அதனை தொடர்ந்து இந்தியாவில் 2016 ஆண்டின் ஆரம்பத்தில் அறிமுகப்படுத்தபடும் என்றும் தெரிய வருகிறது.
இந்த புதிய பென்ஸ் காரை பற்றி பேசும் போது, முன்புற, பின்புற அமைப்புகள் முழுவதும் S க்ராஸ் கூபேயின் வடிவத்தை ஒத்தே உள்ளன, ஆனால் இரு பக்கங்களும் பார்த்தாலே தெரியும் அளவிற்கு அதிக வித்தியாசங்களும் இருக்கின்றன. இதன் பக்க வடிவம், மறுபக்க வளிதிரை விளிம்புடன் (விண்ட் ஸ்கிரீன்) இணைந்த அழுத்தமான நேரான தோள்பட்டை கோடுகளை கொண்டுள்ளன. மேலும் முன்புறம் அழகிய காற்று குழைவுகள் (ஏர் ஸ்கூப்) உடைய முட்டு தாங்கியும் (பம்பர்), மெர்சிடிஸ் அடையாள பிம்பமான மெர்க் கம்பி வலையின் மேல் (கிரில்) கம்பீரமாக பொருத்தபட்டுள்ளன.
இதன் பின்புறம் S கிளாஸ் கூபே போல சரிவான மேற்கூரை, காற்று அடைப்பு அமைப்பு (விண்ட் ஷீல்ட் அரெஞ்ஜ்மெண்ட்), அகண்ட பின்புற விளக்குகள், மற்றும் இதன் பின்புறம் அழகாக வளைந்து காணப்படுகிறது. பெகெமோத் S கிளாஸ் மாடலோடு ஒப்பிடும் போது C கிளாஸ் தோற்றத்தில் ஆர்பாட்டம் இல்லமல் சாதாரணமாக உள்ளது.
இந்த யூரோப்பியன் கூபேவிற்காக மெர்சிடிஸ் அதிக படியான இஞ்ஜின் விருப்ப தெரிவுகளை வெளியிட்டுள்ளது. அவற்றில் C 180 வகையில் 156 PS ஓடு திறன் கொண்ட 1.6 லிட்டர் மோட்டார், C 200 வகையில் 184 PS ஓடு திறன் கொண்ட 2.0 லிட்டர் மோட்டார் ஆகியன அடங்கும். மற்றும் C 250, C 300 வகைகளில் முறையே 211 PS , 245 PS ஓடு திறன்களை தரவல்ல 2.0 லிட்டர் மோட்டார் பொருத்தபட்டுள்ளன.
இந்தியாவில், மெர்சிடிஸ் மிக வேகமாகவும், தொடர்ச்சியாகவும் S கிளாஸ் கூபே மற்றும் AMG இன் தொடர் மாடல்களை அறிமுகப்படுத்தியது போல, C கிளாஸ் கூபே மாடலையும் வழங்கும் என எதிர் பார்க்கபடுகிறது. மேலும், பிரேத்யேக மோட்டாரை தயாரிக்காமல், C கிளாஸ் சேடனின் மோட்டாரை இதில் பொருத்தியதால், இதன் விலை குறைவாக இருக்கும் என்று தெரிகிறது.