மேம்படுத்தப்பட்ட மெர்சிடீஸ் பென்ஸ் A – க்ளாஸ் கார்கள் ரூ. 24.95 லட்சங்களுக்கு அறிமுகம்.

published on டிசம்பர் 08, 2015 05:54 pm by arun for மெர்சிடீஸ் ஏ கிளாஸ்

Mercedes-Benz A-Class Facelft

ஜெய்பூர் :  15 ல் 15 என்ற திட்டத்தின் படி இந்த வருடத்திய 15 ஆவது அறிமுகமாக மெர்சிடீஸ் பென்ஸ் நிறுவனம் தனது ஏ - க்ளாஸ் கார்களின் மேம்படுத்தப்பட்ட  வெர்ஷன்களை  ரூ. 24.95 லட்சங்களுக்கு  அறிமுகம் செய்துள்ளது.  A 180 ஸ்போர்ட் வேரியன்ட்  ரூ. 24.95 லட்சங்கள் ( எக்ஸ் - ஷோரூம் ,மும்பை )  மற்றும் மெர்சிடீஸ் A200 d வேரியன்ட் ரூ. 25.95 லட்சங்கள் ( எக்ஸ் - ஷோரூம் ,மும்பை )  என்ற விலைகளில் அறிமுகம் ஆகி உள்ளது.  மொத்தத்தில் ஒரு மேம்படுத்தப்பட்ட A க்ளாஸ்  வேரியான்ட்களாக தான் இந்த கார்கள் தோற்றம் தருகிறதே தவிர   என்ஜினைப் பொருத்தமட்டில் எந்த வித மாற்றமும் செய்யப்பட்டதாக தெரியவில்லை.  முந்தைய A க்ளாஸ் கார்களில் உள்ள  7 வேக இரட்டை க்ளட்ச் அமைப்புடன் கூடிய கியர் பாக்ஸ் இணைக்கப்பட்ட அதே என்ஜின் தான் இந்த வேரியன்ட்களிலும் பொருத்தப்பட்டுள்ளது.  சர்வதேச சந்தையில் வெளியாகி உள்ள இந்த மேம்படுத்தப்பட்ட மெர்சிடீஸ்  A க்ளாஸ் கார்களில்  மெர்சிடீஸ் 4மேடிக் அமைப்பு கொடுக்கப்பட்டிருந்தாலும் இந்தியாவில் அறிமுகமாகும்  இந்த கார்களில் ஏனோ 4மேடிக் சிஸ்டம் பொருத்தப்படவில்லை என்பது இங்கே கவனிக்கத்தக்கது.   

Mercedes-Benz A-Class Facelift

 மாற்றங்கள் என்று பார்க்கையில் வெளிப்புறம் மற்றும் உட்புற அலங்கரிப்புக்களில்  தான் அதிகம் பார்க்க முடிகிறது.  முன் மற்றும் பின்புறங்களில் மாற்றி வடிவமைக்கப்பட்டுள்ள பம்பர்கள் ,  முன்புற ஆப்ஷனல் LED முகப்பு விளக்குகள் , பின்புற LED விளக்குகள், புதிய சக்கரங்கள் , மாற்றி வடிவமைக்கப்பட்டுள்ள க்ரில்  மற்றும் பின்புற பம்பரில் ஒருங்கிணைக்கப்பட்ட  எக்ஸாஸ்ட் அமைப்பு போன்றவை பார்த்தவுடன் பளிச்சென்று தெரிகிறது.  ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஸ்மார்ட்போன் ஒருங்கிணைப்புக்கு தேவையான மிரர்லிங்க் மென்பொருள் போன்றவற்றை உள்ளடக்கிய 8 அங்குல இன்போடைன்மென்ட் திரை உட்புற வடிவமைப்பில் பிரதானமாக கண்ணில் படுகிறது. இதைத் தவிர லேசாக மாற்றி வடிவமைக்கப்பட்டுள்ள  ஸ்டீரிங் அமைப்பு, உங்கள் எண்ணத்திற்கு ஏற்றார் போல்  மாற்றி ஒளிரச் செய்யும் வகையில் கொடுக்கப்பட்டுள்ள உட்புற விளக்குகள் போன்றவைகளையும் இந்த புதிய மேம்படுத்தப்பட்ட Aக்ளாஸ் கார்கள்  பெற்றுள்ளன. பிஎம்டபுள்யு 1 - சீரீஸ் மற்றும் வோல்வோ V40 கார்களுடன் இந்த புதிய எ க்ளாஸ் கார்கள் போட்டியிடும். மெர்சிடீஸ் நிறுவனம்  இதே வேகத்துடன் A45 AMG கார்களையும் இந்தியாவிற்கு கொண்டு வரும் என்று  நம்பிக்கையுடன் காத்திருப்போம். 

இதையும் படியுங்கள்

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment மீது மெர்சிடீஸ் A Class

Read Full News

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trendingஹேட்ச்பேக் கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience