மெர்சிடீஸ் பென்ஸ் இந்தியா C 63 S எஎம்ஜி கார்களை செப்டெம்பர் 5 2015 ல் அறிமுகப்படுத்தவுள்ளது.
raunak ஆல் ஆகஸ்ட் 18, 2015 11:46 am அன்று பப்ளிஷ் செய்யப்பட்டது
- ஒரு கருத்தை எழுதுக
இந்த அசகாய சூர கார்கள் 510 குதிரைகளின் வேகத்திறன் கொண்டது மட்டுமன்றி 700 nm என்ற அளவுக்கு முறுக்கு விசையை தரவல்ல 4.0 லிட்டர் பை - டர்போ எஞ்சினால் சக்தியூட்டப்பட இருக்கிறது.
ஜெய்பூர்: தொடர்ந்து தனது பல கார்களை அறிமுகப்படுத்திவரும் மேசிடீஸ் பென்ஸ் நிறுவனம் இப்போது AMG வரிசையில் புதிய C – கிளாஸ் - C 63 S AMGஎன்ற கரை அறிமுகப்படுத்த உள்ளது. அடுத்த மாதம் 2 ஆம் தேதி இந்த வாகனம் அறிமுகம் ஆகா உள்ளது. இந்த வருடம் அறிமுகப்படுத்த போவதாக பென்ஸ் நிறுவனம் அறிவித்திருந்த 15 கார்களில் இந்த புதியAMG அடுத்ததாக களம் காணுகிறது. மேலும் இதைத்தவிர S 63 AMG கூபே, S 500 கூபே , G63 AMG க்ரேஸி கலர் மற்றும் S 63 AMG செடான் கார்கள் பென்ஸ் நிறுவனத்தால் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் மற்ற AMG சீரீஸ் கார்களை போலவே இந்த புதிய C – கிளாஸ் - C 63 S AMG கார்கள் சிபியூ (CBU) வழியில் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட உள்ளன. இந்த வாகனம் பிஎம்டபல்யூ தயாரிப்பான M3 காருக்கு சரியான போட்டியாக இருக்கும் என்று கணிக்கப்படுகிறது.
இதற்கு முந்தைய C 63 யை போல் இல்லாமல் இந்த புதிய C – கிளாஸ் - C 63 S AMG கார்கள் AMG GT காரில் பயன்படுத்தப்பட்ட சக்தி வாய்ந்த 4.0 லிட்டர் V8என்ஜின் சக்தியூட்டப்படுகிறது. இந்த என்ஜின் 510 குதிரை சக்தியை நிமிடத்திற்கு 5500 – 6250 சுழற்சி (rpm) மற்றும் 1750 - 4500 சுழற்சியின் இடைப்பட்ட நேரத்தில் 700 nm என்ற அளவில் முறுக்கு விசையையும் வெளிப்படுத்துகிறது. இதனுடன்AMG ஸ்பீட்ஷிப்ட்MCT 7 – வேக கியர் அமைப்பும் பொருத்தப்படுள்ளது. இந்த கைகளால் உருவாக்கப்பட்ட AMG மோட்டார் இந்த புதிய C 63 S கார்களை வெறும் நான்கு நொடிகளிலேயே மணிக்கு 0 – 100 கி.மீ வேகத்தை தட்டு இந்த கார்களை பாய்ந்து செல்ல வைக்கிறது. அதிகபட்ச வேகம் மணிக்கு 250 கி.மீ. என்ற அளவுக்கு வரையறுக்கப்பட்டு மின்னணு முறையில் கட்டுப்படுத்தப்படுள்ளது.(எனினும் ஓட்டுனர் தன விருப்பத்திற்கு ஏற்ப 290 கி.மீ வரை வேகத்தை திருத்தி அமைத்துக் கொள்ளலாம்.) இவைகளைத் தவிர எப்போதும் சி - கிளாஸ் கார்களில் உள்ளது போன்ற உடலமைப்பு சற்று மாற்றப்பட்டு இந்த AMG ஸ்போர்டியான தோற்றம் தரும் பம்பர்கள், அல்லோய்கள் மற்றும் கிட்ஸ் பொருத்தப்படுள்ளன. உட்புறம் முழுதும் கருப்பு வண்ணம் பூசப்பட்டு AMG சீரீஸ் கார்களுக்கான தோற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.