CLA-வின் உற்பத்தியை துவங்குவதாக மெர்சிடிஸ் அறிவிப்பு
published on செப் 09, 2015 07:52 pm by manish for மெர்சிடீ ஸ் சிஎல்ஏ
- 13 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஆடம்பரம் மற்றும் ஸ்போட்டி சேடனான CLA-யின் உற்பத்தியை துவக்கப் போவதாக மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. 4-சிலிண்டர் டர்போசார்ஜ்டு டீசல் என்ஜின் மூலம் இயக்கப்படும் இந்த கார், லிட்டருக்கு 17.9 கி.மீ மைலேஜ் அளித்து, 100kW (136 hp) ஆற்றல் மற்றும் அதிகபட்ச முடுக்குவிசையான 300 Nm-யை உற்பத்தி செய்கிறது. 2-லிட்டர் பெட்ரோல் வகை கார்களின் மூலம் 135 kW (183 hp) ஆற்றலும், 300Nm முடுக்குவிசையும் பெற்று, 7.8 விநாடிகளில் மணிக்கு 100 கி.மீ வேகத்தை எட்ட உதவுகிறது. அதே வேளையில் இந்த காரில் அதிகபட்சமாக மணிக்கு 235 கி.மீ வேகம் வரை செல்ல முடியும். மேலும் இந்திய சாலைகளின் சூழ்நிலைகளுக்கு ஏற்ப, சஸ்பென்ஸன் அமைப்பையும் கொண்டுள்ளது. 2699mm வீல்பேஸை கொண்டுள்ள CLA, இதமான பயணத்தை அளித்து, இயக்கவியலை கையாளுதல் (ஹேண்டலிங் டைனாமிக்ஸ்) மற்றும் ஓட்டுவதற்கு சிறப்பான செயல்திறன் ஆகியவற்றை அளிக்கிறது. இந்த சிறப்புகளால் இது ஒரு முன்னேறிய போட்டியாளராக காட்சியளிக்கிறது.
மெர்சிடிஸ் மேபேக் S600-யை விரைவில் வீதிகளை எட்டும்
இது குறித்து மெர்சிடிஸ்-பென்ஸ் இந்தியாவின் CEO மற்றும் நிர்வாக இயக்குநரான எபர்ஹார்டு கெர்ன் கூறுகையில், “CLA-வின் ஆச்சரியப்படுத்தும் வடிவமைப்பு, தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் மற்றும் பல வகை பிரிவுகளின் முதல் பண்பு ஆகியவை இணைந்து, ஏற்கனவே இதை எங்களின் முதலீட்டில் வெளிவரும் ஒரு வெற்றிகரமான தயாரிப்பாக மாற்றியுள்ளது. எங்களின் பிராண்ட்டிற்கு பல புதிய வாடிக்கையாளர்களை மிக விரைவில் தேடி தரும் இது, சர்வதேச அளவிலான இதன் வெற்றி பெருக்கத்தை, இந்தியாவிலும் பிரதிபலிக்கும். CLA-வின் மூலோபாயத்தில் நாங்கள் மிகவும் திருப்தி அடைந்துள்ளோம். புதிய தலைமுறை கார்களின் வளர்ச்சியில் பெரும் பங்கு வகித்த இந்த கார், அந்த பிரிவையே முழுமையாக மாற்றி அமைத்துள்ளது. CLA-வை வாங்குவோரின் மனநிலைக்கு ஏற்பவும், அவர்களின் மதிப்புள்ள கருத்துகளை நிறைவேற்றும் வகையிலும், உள்ளூர் தயாரிப்பு இன்னும் கவர்ச்சிகரமாக மற்றும் அதிகளவில் கிடைக்கவும் உதவிகரமாக இருக்கும் என்று நம்புகிறோம்” என்றார்.
மெர்சிடிஸ்-பென்ஸ் C63 கூபே DTM-ன் மறைவு விலகியது
இது குறித்து மெர்சிடிஸ்-பென்ஸ் இந்தியாவின் செயல்பாடுகள் பிரிவின் நிர்வாக இயக்குநர் பியூஸ் அரோரா கூறுகையில், “CLA-வின் பெட்ரோல் மற்றும் டீசல் என்ற இரு வகைகளையும் ஒரே நேரத்தில், உள்ளூரில் தயாரிக்க தீர்மானித்திருப்பது ஒரு முக்கியத்துவம் வாய்ந்த முடிவாகும். இதன்மூலம் இந்த சேடனை வாங்குவதற்கான காத்திருப்போரின் நீண்ட பட்டியலை குறைக்க முடியும். எதிர்காலத்திற்கு தயாரான நிலையில் காணப்படும் புதிய தயாரிப்பு தொழிற்சாலை, அதன் பலனை ஈட்டி வருவதால், CLA-வின் இரு வகைகளின் தயாரிப்பையும் துவக்க முடிந்தது. மேலும் பெட்ரோல் GLA-விற்கு புதிய கூட்டணைப்பு நிலையும் கிடைத்துள்ளது. குறிப்பிடத்தக்க உள்ளூர் தன்மைகளை இணைத்து, கூடுமான வரை குறுகிய காலத்தில் உலக தரம் வாய்ந்த தயாரிப்பை, எங்களின் இந்திய வாடிக்கையாளர்களுக்கு அளிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்” என்றார்.
வெளிபுறத்தை பொறுத்த வரை, காரின் போனட் மீதான பவர்டோம்ஸ் மற்றும் சிக்னேச்சர் டைமண்ட் ரேடியேட்டர் கிரில் ஆகியவை காரை ஜொலிக்க செய்வதாக உள்ளன. லைட் மோடூல்ஸ் மற்றும் ஹெட்லெம்ப்பை மூடியுள்ள கிளாஸின் பின்புறத்தில் காணப்படும் LED-கள் மூலம் டேடைம் டிரைவிங் லைட்கள் (DRLs) மற்றும் இன்டிகேட்டர்களுக்கு ஒளிர்வது போன்ற பண்பு கிடைக்கும் என்று மெர்சிடிஸ் நிறுவனம் நம்புகிறது. CLA—வின் வெளிப்புறம் ஸ்போட்டியான ஸ்டைலையும், உட்புறத்தில் உயர்ந்த தரமான பொருட்களின் கூட்டு கலவையையும் கொண்டுள்ளது. இந்த காரில் பெனோராமிக் சன்ரூப் மற்றும் மெர்சிடிஸ்-பென்ஸ் ரேடியோ, பயன்பாட்டிற்கு எளிய நேவிகேஷன், துல்லியமான வரைப்பட தகவல் ஆகியவற்றை உட்படுத்திய புதிய தலைமுறையின் மல்டிமீடியா சிஸ்டத்தையும் கொண்டுள்ளது. 5-ஸ்டார் யூரோNCAP ரேட்டிங் பெற்றுள்ள CLA-வில் உள்ள இதர அம்சங்களுடன் ABS, BAS, ESP மற்றும் 6 ஏர்பேக்குகள் போன்ற பாதுகாப்பு அம்சங்களும் உள்ளன.