மாருதி XL6 படங்கள்: வெளிப்புறம், உள்புறம், அம்சங்கள் மற்றும் பல
published on செப் 03, 2019 02:11 pm by sonny for மாருதி எக்ஸ்எல் 6 2019-2022
- 18 Views
- ஒரு கருத்தை எழுதுக
புதிய MPV மற்றும் அதன் முழு விவரங்களை அறிந்து கொள்ளுங்கள்
புதிய மாருதி XL6 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, இதன் விலை ரூபாய்.9.8 லட்சம் முதல் ரூ.11.46 லட்சம் வரை (எக்ஸ்ஷோரூம், இந்தியா) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எர்டிகாவை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டிருந்தாலும் அதை விட இது உயர்ரக MPV, மேலும் மாருதி சுசுகியின் நெக்சா விற்பனை நிலையங்கள் மூலம் மட்டுமே விற்கப்படும்.
வெளிப்புறம்
XL6 எர்டிகாவை காட்டிலும் உயர்ரக, வலிமையான தோற்றமுடைய புதுப்பிக்கப்பட்ட முன்புற வடிவமைப்பை பெற்றுள்ளது. இதன் அகலம் வழக்கமான மாருதி MPVகளை விட 40மி.மீ கூடுதலாக 1735மி.மீ ஆக உள்ளது.
மூன்று பகுதி பல்-பிரதிபலிப்பு (Multi-reflector) LED முகப்புவிளக்கு LED DRL உடன் இடம்பெற்றுள்ளது. இதன் திருப்பு சுட்டிகாட்டி (Turn indicator) கீழ் மூலையில் அமைந்துள்ளது.
முன் பனிவிளக்குகள் கூட LED தான், இவை கடினமான கிளாடிங்கால் சூழப்பட்டு முன் பம்பரின் காற்று தடுப்பானுக்கு (Air Dam) இருபுறமும் பொருத்தப்பட்டுள்ளன.
XL6ன் முன்புற கிரில்லின் மத்தியில் இரட்டை குரோம் பட்டையால் மூடப்பட்டு அது இருபுறமும் அமைந்துள்ள LED DRL வரை நீள்கிறது.
இதன் பக்கவாட்டுத் தோற்றத்தை பொறுத்தவரையில் ஒத்தமாதிரியான MPVயாக இருப்பதால் பெரும்பாலும் எர்டிகாவைப் போலவே இருக்கிறது. இரண்டின் சக்கர அச்சிடை நீளம் (Wheelbase) கூட ஒன்றே தான். இருந்தாலும் முன்புற மறுவடிவமைப்பு செய்யப்பட்டுள்ளதால் இதன் நீளம் எர்டிகாவை விட 50 மி.மீ கூடுதலாக பெற்று 4445 மி.மீ ஆக இருக்கிறது. கறுப்பு கிளாடிங்கிலுருந்து முற்றிலும் மாறுபட்டு சாம்பல்-கறுப்பு நிறத்தில் அமைந்த பக்கவாட்டு ஸ்கர்ட் இதன் உயர்ரக தோற்றத்திற்கு அழகூட்டுகிறது.
கூரை பாளங்கள் காரணமாக XL6ன் உயரம் எர்டிகாவை விட 10மி.மீ கூடுதலாக இருக்கிறது.
எர்டிகாவில் உள்ள அதே 15" கலப்பு உலோக (Alloy) பல்-ஆரைக்கால் (Multi-spoke) சக்கரங்கள் XL6ல் இடம்பெற்றுள்ளது. ஆனால் இதன் பளபளப்பான கறுப்பு நிற வடிவமைப்பு ஸ்போர்ட்டியான தோற்றத்தை தருகிறது.
XL6 ன் பின்புற வடிவமைப்பில், டெயில்லாம்ப்கள் மற்றும் டெயில்லாம்ப்புகள் வரை நீளும் குரோம் பட்டையை கொண்டிருக்கும் டெயில்கேட் உள்ளிட்ட பெரும்பகுதி எர்டிகாவைப் போலவே அமைந்திருக்கிறது. இதில் கறுப்பு கிளாடிங் மற்றும் பின்புற உராய்வு தட்டை உள்ளடக்கிய புதிய பின்புற பம்பர் இடம்பெற்றுள்ளது. இதனால் இதன் கடினமான உயர்ரக தோற்றம் மேம்படுகிறது. பின்புற பிரதிபலிப்பான்கள் எர்டிகாவைப்போல கிடைமட்டமாக அல்லாமல் செங்குத்தாக வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.
இதையும் படியுங்கள்: மாருதி சுசுகி XL6 vs எர்டிகா: எதை வாங்கலாம்?
இதன் டெயில்கேட்டின் குரோம் பட்டைக்கு மேற்புறம் பளபளப்பான கறுப்பு பகுதி இடம்பெற்றுள்ளது.
டெயில் விளக்குகள் எர்டிகாவில் வழங்கப்படும் அதே LED அலகுகள் தான், ஆனால் எர்டிகாவைப் போலல்லாமல் வால்வோ போன்ற LED விளக்குகள் இடம்பெற்றுள்ளன.
உட்புறம் & அம்சங்கள்
மாருதி XL6 எர்டிகா போன்றே முழுக்க கறுப்புநிற உட்புறத்தையும் அதே தளவமைப்பையும் (Layout) கொண்டுள்ளது.
முகப்பு பெட்டியின் வடிவமைப்பில் இடம்பெற்றிருக்கும் ஸ்டோன் எஃபெக்ட் XL6ன் உயர்ரக தோற்றத்திற்கு மெருகூட்டுகிறது.
பெயரே உணர்த்துவது போல மாருதி XL6 நடு வரிசையில் கேப்டன் இருக்கைகள் இடம் பெற்றிருக்கும் 6-இருக்கை வாகனமாகும்.
இதன் தோலுறையாலான முழுக்க கருப்பு வண்ண இருக்கைகளின் இடையில் ஆர்ம்ரெஸ்ட்டும் கதவருகில் தனியே ஆர்ம்ரெஸ்ட்டும் இடம்பெற்றிருக்கின்றன. பென்ச் வகை இருக்கையை விட கேப்டன் இருக்கைகள் வசதியாகவும், தாராளமாகவும் இருக்கின்றன.
மூன்றாவது வரிசை இருக்கைகள் கூட தோலுறைகளால் ஆனதால் உயர்ரகமாக உணர முடிகிறது. இருபுறமும் கோப்பை தாங்கிகளும் (Cup holders), இடப்பக்கம் பவர் சாக்கெட்டும் இடம் பெற்றிருக்கின்றன.எர்டிகாவை போன்றே இருக்கைகளை பயன்படுத்தாத நேரத்தில் 50:50 விகிதத்தில் மடித்துக் கொள்வதன் மூலம் கூடுதல் சுமையை வைத்துக்கொள்ளலாம்.
மூன்றாவது வரிசை இருக்கைகளை எளிதில் அடைவதற்காக கேப்டன் இருக்கைகள் ஒற்றை தொடுகை சாய்த்தல் மற்றும் நகர்த்துதல் வசதியைக் கொண்டிருக்கின்றன.
முகப்புப்பெட்டியின் மையத்தில் 7" தொடுதிரை கேளிக்கை-தகவல் சாதனம் சுற்றிலும் பளபளப்பான கருப்பு வண்ணத்தோடு பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்ப்ளே ஸ்டூடியோ அமைப்பில் ஆண்டிராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளேவையும் இயக்கிக்கொள்ள முடியும்.
XL6ன் கேளிக்கை-தகவல் சாதனத்தில் ஸ்போர்ட்டியான பின்னொளியுடன் தானியங்கு தட்பவெப்ப கட்டுப்பாடு இடம்பெற்றுள்ளது.
முன்பகுதியில் எர்டிகாவைப் போன்றே 12V பவர் சாக்கெட்டுடன் கூடிய குளிரூட்டப்பட்ட கோப்பை தாங்கிகள், USB போர்ட், AUX போர்ட் ஆகியவை இடம்பெற்றுள்ளன.
பின்வரிசை இருக்கைகளுக்காக கூரையில் சார்பற்ற குளிரூட்டும் துவாரங்களும் XL6ல் இடம்பெற்றிருக்கின்றன.
மாருதி புதிய XL6 ல் எர்டிகாவைப் போலல்லாமல் பயணக் கட்டுப்பாட்டு (Cruise control) வசதியை பொருத்தியுள்ளது.
எர்டிகாவை போன்றே இரண்டு அனலாக் டயல்களுக்கிடையில் அமைந்த 3.5 அங்குல பல்-தகவல் வண்ண திரையை உள்ளடக்கிய உபகரண தொகுப்பு இடம் பெற்றிருக்கிறது.
மாருதி XL6 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் தெரிவுடன் மட்டுமே கிடைக்கும், மேலும் சிறப்பான எரிபொருள் திறனுக்காக லேசான ஹைபிரிட் அமைப்பை பெற்றிருக்கிறது.
இது 5-வேக மேனுவல் விசைஊடிணைப்பு (Transmission) மற்றும் 4-வேக தானியங்கு விசைஊடிணைப்பு ஆகிய இரண்டு தெரிவுகளுடன் கிடைக்கும்.
மாருதி XL6 ஆறு இருக்கைகளும் பயன்படுத்தப்படும் நிலையில் 209 லிட்டர் சுமை கொள்ளளவை (Boot space) வழங்கும், மூன்றாவது வரிசை இருக்கைகள் மடக்கப்பட்ட நிலையில் 550 லிட்டராக கொள்ளளவு அதிகரிக்கும். இரண்டாவது வரிசை இருக்கைகளையும் நீங்கள் மடக்கிவிட்டால் கொள்ளளவு 692 லிட்டராக இருக்கும்.
இதையும் படியுங்கள்: மாருதி XL6 vs மாருதி எர்டிகா vs மஹிந்திரா மராசோ vs ரெனால்ட் லாட்ஜி: விலைகள் என்ன சொல்கின்றன?
மேலும் படிக்க: மாருதி XL6ன் சாலை விலை (on road price)