மாருதி சுசுகி XL6 vs எர்டிகா: எதை வாங்கலாம்?

published on செப் 03, 2019 02:24 pm by dhruv attri for மாருதி எக்ஸ்எல் 6 2019-2022

  • 24 Views
  • ஒரு கருத்தை எழுதுக

மாருதியின் MPVகளில் ஒன்றை வாங்க நீங்கள் திட்டமிட்டால், அதன் அரினா அல்லது நெக்ஸா விற்பனை நிலையங்களுக்கு எதற்கு செல்ல வேண்டும்? நாங்கள் நினைப்பது என்னவென்றால்

Maruti Suzuki XL6 vs Ertiga: Which One To Buy?

மாருதி சுசுகி  எர்டிகாவின் உயர்ரக மீள்பதிப்பை XL6 எனும் பெயரில் ரூ .9.8 லட்சம் முதல் ரூ .11.46 லட்சம் வரையிலான விலை வரம்பில் (எக்ஸ்-ஷோரூம் இந்தியா) அறிமுகப்படுத்தியுள்ளது. இது தற்போது விற்பனையில் இருக்கும் எர்டிகாவை விட ரூ 70,000 அதிகம் மற்றும் இது பெட்ரோல் வகையில் மட்டுமே கிடைக்கும். இருந்தாலும் இதில் தானியங்கு வசதி உள்ளிட்ட  பல்வேறு உயர்ரக வசதிகள் அடிப்படை மாடலிலிருந்தே வழங்கப்பட்டுள்ளன. இரண்டில் எந்த MPV உங்களுக்கு பிடிக்கக்கூடும்? இப்போது தெரிந்துகொள்ளலாம்.

விலைகள் மற்றும் வகைகள்

மாருதி சுசுகி XL6

மாருதி சுசுகி எர்டிகா (பெட்ரோல்)

வேறுபாடு

-

L LXi: ரூ 7.55 லட்சம்

-

-

V LXi: ரூ 8.27 லட்சம்

-

-

V LXi AT: ரூ 9.29 லட்சம்

-

-

Z Zeta: ரூ 9.80 லட்சம்

-

-

Z LXi: ரூ 9.10 லட்சம்

ரூ 70,000

Z ஸெட்டா AT: ரூ 10.90 லட்சம்

Z LXi AT: ரூ 10.06 லட்சம்

ரூ 84,000

ஆல்பா : ரூ 10.36 லட்சம்

Z LXi+: ரூ 9.61 லட்சம்

ரூ 75,000

ஆல்பா AT: ரூ 11.46 லட்சம்

NA

-

* எக்ஸ்ஷோரூம் டெல்லி

  • தொடர்புடைய வகைகளை ஒப்பிடுகையில், எர்டிகாவை விட XL6 இன் விலை  ரூ .70,000 முதல் ரூ .84,000 வரை கூடுதலாக இருக்கும் என தெரிகிறது.

  • உங்கள் பணநிலையைக் கொண்டு XL6 ஐ வாங்க முடியாவிட்டால் குறைந்த விலையில் பல்வேறு வகைகளில் கிடைக்கும் எர்டிகாவை வாங்கலாம்.

வெளிப்புற வடிவமைப்பு

  • XL6ன் சுற்றிலும் வெளிப்புறம் கரடுமுரடான உறைப்பூச்சு (Rugged cladding) இடம்பெற்றுள்ளதுடன் முன்புற முகப்புபெட்டி (Front fascia)  கருமை நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எர்டிகாவில் இடம்பெற்றுள்ள ஹாலோஜன் முகப்பு விளக்குகளுக்கு பதிலாக இதில் பல்-பிரதிபலிப்பு (Multi-reflector) LED முகப்பு விளக்குகளும் LED DRL மற்றும் பனி விளக்குகளுடன் (Fog lamps) இடம்பெறுகிறது.

  • XL6 இன் பக்கவாட்டு விவரங்களை பார்த்தால் கூரை பாளங்கள் (Roof rails) மற்றும் கறுமையாக்கப்பட்ட வெளிப்புற கண்ணாடி (OVRMs) ஆகியவை இடம்பெற்றுள்ளன. மேலும் எர்டிகாவோடு ஒப்பிடுகையில் இதில் பளபளப்பான கறுமை நிறத்தில் வடிவமைக்கப்பட்ட 15" அலாய் சக்கரங்கள் இடம்பெறுகின்றன. எர்டிகாவை விட XL6ன் தரையிளக்கம் (Ground clearance) அதிகம் என நீங்கள் நினைத்துக்கொண்டிருந்தால் அது தவறு.

  • இரண்டின் பின்புற வடிவமைப்பும் முதல் பார்வையில் ஒரே மாதிரியாக இருந்தாலும், XL6 உராய்வு  தட்டுகள் ( Skid plates) மற்றும் செங்குத்து பிரதிபலிப்பானுடன் ( Vertical reflector)  மறுவடிவமைப்பு செய்யப்பட்ட பம்பரைப் பெறுகிறது. மேலும், பதிவெண் தட்டுக்கு மேலே உள்ள பலகம் (Panel) எர்டிகாவைப் போலன்றி பளபளப்பான கருப்பு நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. நீளம் மற்றும் அகலத்தில் கூட எர்டிகாவை விட XL6 சிறிது மாறுபடுகிறது.

  • இரண்டு MPVகளின் வண்ண தெரிவுகள்  ஒரே மாதிரியானவை தான், இருந்தாலும்  XL6 நெக்சா ப்ளூ (Nexa blue), பிரேவ் காக்கி (Brave khaki) உள்ளிட்ட கூடுதல் வண்ணத்தெரிவுகளுடன் கிடைக்கவிருக்கிறது. ஆனாலும் எர்டிகாவின் ஆபர்ன் ரெட் (Auburn red) வண்ணத்தில் XL6 கிடைக்காது.

உட்புற வடிவமைப்பு

  • உட்புறத்தில் ஒட்டுமொத்த தளவமைப்பு (Layout) ஒரே மாதிரியாக இருந்தாலும் எர்டிகாவின் இரட்டை-தொனி (Dual tone) வண்ணத்துடன் ஒப்பிடும்போது XL6 முழுக்க கருப்பு வண்ண முகப்பு பெட்டியைக் (Dash board) கொண்டுள்ளது.

  • உட்புற இருக்கை உறைகள் தோலாலான கருப்பு வண்ணத்தில் XL6 ல் அமைந்திருக்கின்றன அதே வேளையில் எர்டிகாவில் வெளிறிய பழுப்பு வண்ண உறைகள் இடம்பெற்றுள்ளன.

  • எர்டிகாவில் ஏழு இருக்கை அமைப்புடன் ஒப்பிடும் போது, XL6ன் இரண்டாவது வரிசையில் கூடுதல் வசதியான கேப்டன் இருக்கை அமைக்கப்பட்டுள்ளதால் ஆறு பேர் மட்டுமே அமர முடியும்.

அம்சங்கள்

  • இரண்டு MPVகளும் அடிப்படை அம்சங்களின் படி பார்த்தால் சமமாக உருவாக்கப்பட்டிருக்கின்றன. இருப்பினும், XL6 கூடுதலாக பயணக் கட்டுப்பாட்டை (Cruise control) பெறுகிறது, இது நெடுஞ்சாலையில் பயணிக்கும் போது ஒரு வரமாக இருக்கும்.

  • பொதுவான அம்சங்களில், ஆப்பிள் கார் ப்ளே (Apple CarPlay) மற்றும் ஆன்டிராய்டு ஆட்டோவுடன் கூடிய 7 அங்குல தொடுதிரை (புதிய SmartPlay studio), இயக்கு சக்கரத்தில் பொருத்தப்பட்ட ஒலியமைவு கட்டுப்பாட்டு பொத்தான்கள் (Audio controls), தானியங்கு தட்பவெப்ப கட்டுப்பாடு, மின்னியல் மூலம் சரிசெய்துக்கொள்ளக்கூடிய மற்றும் மடிக்கக்கூடிய வெளிப்புற கண்ணாடிகள் (OVRM)  (இந்த வசதி சாவியுடன் ஒத்திசைந்து சாவி மூலம் கார் திறக்கப்படும்/ மூடப்படும் போதெல்லாம் தானாக கண்ணாடி திறந்து/மூடும் வகையில் வசதி இடம்பெற்றுள்ளது), பக்கவாட்டு பனிநீக்கு வசதி (Rear defogger), மற்றும் பல வசதிகள் இடம்பெற்றுள்ளன.

  • இரண்டு MPVகளிலும் இரட்டை முன்புற காற்றுப்பைகள்,  ஈபிடியுடன் கூடிய ஏபிஎஸ், ISOFIX குழந்தை இருக்கைகள், பின்புற வாகன நிறுத்த உணரிகள் (Parking sensors)  மற்றும் கேமரா,  ESP உடன் கூடிய மலையேற்ற துணை வசதி (ATயில் மட்டும்) போன்ற பாதுகாப்பு உபகரணங்கள் இடம் பெற்றுள்ளன.

2018 Ertiga

எஞ்சின் விருப்பத்தெரிவுகள்: 

  • எர்டிகா மற்றும் XL6 இரண்டிலுமே BS-VI விதிமுறைகளுக்குட்பட்ட 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் (105PS/138Nm) பயன்படுத்தப்பட்டுள்ளது. இயக்கத்தை பொறுத்த வரையில் 5-வேக மேனுவல் மற்றும் 4-வேக தானியங்கு மாற்றி விருப்பத்தெரிவுகள் கிடைக்கின்றன. எர்டிகாவின் உச்சவசதி வகையில் தானியங்கு தெரிவு கிடைப்பதில்லை அதே வேளையில் XL6ன் இரண்டு வகையிலுமே இந்த வசதி கிடைக்கிறது.

  • எர்டிகா 1.5 லிட்டர் டீசல் எஞ்சினுடன் கிடைக்கிறது, இது புதிய மாருதி XL6ல் இல்லை.

Maruti Suzuki Ertiga-Based XL6 Launched At Rs 9.80 Lakh

எதை தேர்வு செய்வது?

எர்டிகா பெட்ரோல் வகை இன்னும் சற்று உயர்ரக பதிப்பாக இருந்தால் நன்றாக இருக்கும் என நீங்கள் நினைத்தால், கூடுதல் ஆடம்பர அம்சங்களுக்காக சற்று கூடுதல் பணம் செலவு செய்ய தயங்காதவராக இருந்தால் XL6 உங்களுக்கு சரியான தேர்வு. பின்புற கேப்டன் இருக்கைகள் தரும் மேம்பட்ட அனுபவம் உங்கள் தேர்வுக்கு வலு சேர்க்கக்கூடும். அதேபோல் எர்டிகாவை உச்ச வசதியுடன் கூடிய தானியங்கு வகையாக வாங்க விரும்பினாலும் XL6ஐ வாங்கலாம்.

2018 Ertiga

ஆனால் நீங்கள் டீசல் MPV வாங்க விரும்பினால் உங்களுக்கு இருக்கும் ஒரே தெரிவு எர்டிகா மட்டும் தான். விலை அடிப்படையில் சற்று குறைவானதாக வாங்க விரும்பினாலும் எர்டிகாவை தேர்ந்தெடுக்கலாம். இந்த இரண்டில் தானியங்கு MPV வாங்க விரும்புவோர் XL6 Zeta AT ஐ விட Ertiga VXi AT கிட்டதட்ட ரூ.1.61 லட்சம் குறைவான விலையில் கிடைப்பதை காணலாம்.

· மாருதி XL6 vs மாருதி எர்டிகா vs மஹிந்திரா Marazzo vs ரெனால்ட் லாட்ஜி: விலைகள் என்ன சொல்கின்றன?

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment மீது மாருதி எக்ஸ்எல் 6 2019-2022

2 கருத்துகள்
1
S
sansar chand
Aug 12, 2020, 4:21:09 PM

XL6 is a best for me i bookd after one month

Read More...
    பதில்
    Write a Reply
    1
    s
    santh praveen
    Aug 28, 2019, 12:27:15 PM

    XL6 looks premium and better in price and service when compare with other models.

    Read More...
      பதில்
      Write a Reply
      Read Full News

      கார் செய்திகள்

      • டிரெண்டிங்கில் செய்திகள்
      • சமீபத்தில் செய்திகள்

      trendingஎம்யூவி கார்கள்

      • லேட்டஸ்ட்
      • உபகமிங்
      • பிரபலமானவை
      ×
      We need your சிட்டி to customize your experience