மாருதி சுஸுகி S - க்ராஸ் : விரிவான தனித்துவமிக்க புகைப்பட தொகுப்பு
modified on ஜூலை 30, 2015 06:41 pm by arun for மாருதி எஸ்-கிராஸ் 2017-2020
- 13 Views
- 2 கருத்துகள்
- ஒரு கருத்தை எழுதுக
மாருதி சுசூக்கி தனது S க்ராஸ் மாடலை உயர் ரக க்ராஸ் ஓவர் பிரிவில் நிலைநிறுத்தி பெருமைப்படுகிறது. இந்த உயர் ரக க்ராஸ் ஓவர் மேல்மட்ட சந்தையில் மட்டுமே இருத்தி வைக்கப்பட்டுள்ளது மேலும் மாருதி சுசூக்கியின் புதிய “நெக்ஸா” உரிமம் பெற்ற விற்பனையாளர்கள் மூலமாக மட்டுமே விற்கப்படும் என தெரிவித்துள்ளது. இந்த உயர் ரக க்ராஸ் ஓவர் தற்போதுள்ள அதிக விருப்ப தெரிவுகளான டஸ்டர், டெர்ரானோ, எக்கோ ஸ்போர்ட், மற்றும் புதிதாக வரவுள்ள கிரேட்டா ஆகிய கார்களிடமிருந்து மக்களின் கவனத்தைத் தன்பக்கம் ஈர்க்கவுள்ளது. மாருதி நிறுவனம், தன்னால் வாகனச் சந்தையில் ஒரு திருப்புமுனையை திடமாக ஏற்படுத்த முடியும் என்று நம்பிக்கை கொண்டுள்ளது. நாம், இப்போது வாடிக்கையாளர்களின் விருப்பத்தை திசை திருப்ப என்ன புதிய சிறப்பம்ஸங்களை மாருதி S – க்ராஸ் பெற்றுள்ளது என பார்க்கலாம். அழகிய முன்புறம் பிரதிபலிக்கும் முகப்பு விளக்கு, சாவி இல்லாமல் உள்ளே சென்று வரும் வசதி, தொடு திரை இன்போடெயின்மெண்ட் சாதனம், தானியங்கி தட்ப வெப்ப கட்டுபாட்டு சாதனம் ஆகிய அனைத்தும் உள்ளடக்கிய மிகுந்த ஆச்சர்யமிக்க அவதாரமாக சிறந்து விளங்குகிறது. நாசிக் நகரின் அழகிய பின்னணியோடு உள்ள இந்த புதிய S-கிராஸ் புகைப்பட வரிசையைப் பாருங்கள்!