மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு உதவ முன்வந்துள்ளது மாருதி நிறுவனம்
published on நவ 20, 2015 03:12 pm by sumit
- 15 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஜெய்பூர் :
இந்தியாவின் பிரதான கார் தயாரிப்பாளர்களான மாருதி நிறுவனத்தினர் சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு உதவி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இது சம்மந்தமாக தன்னுடைய டீலர்கள் மற்றும் வொர்க் ஷாப் நிர்வாகத்திற்கு மழையால் பழுதுப்பட்ட வாகனங்களை விரைவாக பழுது பார்த்து தருமாறு பரிந்துரை செய்துள்ளது.
“எங்களுடைய டீலர் வொர்க் ஷாப் பலவும் மழை வெள்ளத்தால் சூழப்பட்டு இயங்காமல் உள்ளது. ஆனால் எங்கள் பொறியியல் வல்லுனர்கள் அதிவிரைவில் அவற்றை சரி செய்து மீண்டும் இயங்கச் செய்துள்ளனர் " என்று மாருதி நிறுவனம் கூறியுள்ளது. மேலும், இதுவரை சுமார் 200 வாகனங்கள் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு எங்கள் டீலர்ஷிப்களுக்கு வந்தன. அவற்றில் ஏற்கனவே 65 வாகனங்கள் சரி செய்யப்பட்டு வாடிக்கையாளர்களிடம் டெலிவரி செய்யப்பட்டுவிட்டன என்றும் வரும் நாட்களில் மேலும் நிறைய வாகனங்கள் இதே போன்ற மழை நீர் சம்மந்தமான பிரச்சனையினால் வரலாம் என்று எதிர்பார்பதாகவும் மாருதி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
இப்போது குறிப்பாக, மழைநீர் புகுந்ததால் ஏற்பட்டுள்ள பிரச்சனையை குறிப்பாக ஆராய்ந்து தேவையான உதிரிபாகங்களை எங்களுடைய குர்கான் தொழிற்சாலையில் இருந்து வரவழைத்து மாற்றி தருகிறோம்.
“ வாகனங்கள் பழுதானதால் தவித்து வரும் வாடிக்கையாளர்களுக்கு காப்பீட்டு நிறுவனங்களும் நல்ல முறையில் தேவையான உதவிகளை செய்ய முன்வந்துள்ளது" என்று மேலும் மாருதி வெளியிட்டுள்ள அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு இதே போன்ற ஒரு நிலைமையை கேஷ்மிர் மற்றும் மும்பையில் எதிர்கொண்ட அனுபவம், இப்போது சென்னையில் நிலைமையை கையாளுவதற்கு மிகவும் உதவிகரமாக உள்ளது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் எங்கள் டீலர்கள், கனமழைக்கு பிறகு உடனே மழை வெள்ளம் சூழ்ந்த பகுதிகள் பற்றி வாடிக்கையாளர்களுக்கு தெரிவித்து அவர்களை அந்த இடங்களுக்கு செல்ல வேண்டாம் என்று SMS மூலம் எச்சரிக்கை செய்தனர்.
“மழை வெள்ளம் வாகனத்தை சூழ்ந்திருக்கும் பட்சத்தில் அந்த வாகனத்தை ஸ்டார்ட் செய்ய வேண்டாம் . அப்படி ஸ்டார்ட் செய்தால் 'ஹைட்ரோ லாக் ' ஆகவோ அல்லது என்ஜின் நின்றுபோகவோ வாய்ப்பு உண்டு என்று அந்த குறுந்தகவலில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது வாகனம் பழுதாகும் அளவை பெருமளவில் குறைத்தது " என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. பழுதான வாகனங்களுக்கான காப்பீட்டு தொகையை விரைவாக பெற்று தருவதற்காக மாருதி நிறுவனம் காப்பீட்டு நிறுவனத்துடன் இனைந்து பணியாற்றி வருகிறது.
இதையும் படியுங்கள் :
0 out of 0 found this helpful