இன்னும் விற்பனைக்கு வராத மாருதி எஸ் - கிராஸ் கார் விபத்தில் சிக்கியது!
published on ஆகஸ்ட் 01, 2015 04:19 pm by sameer for மாருதி எஸ்-கிராஸ் 2017-2020
- 13 Views
- 1 கருத்துகள்
- ஒரு கருத்தை எழுதுக
ஜெய்ப்பூர்: இதைத் தான் தற்செயல் என்று சொல்வார்களோ? மிகச் சமீபத்தில் அறிமுகமான ஹயுண்டாய் க்ரேடா விபத்தில் சிக்கிய நினைவுகள் மறப்பதற்குள் ஆகஸ்ட் 5 ல் அறிமுகமாக உள்ள மாருதி எஸ் - கிராஸ் கார் ஒன்று அதே போன்ற கோர விபத்தை சந்தித்த செய்தி வெளியாகி உள்ளது. இன்னும் இந்திய சாலைகளில் ஓடத் துவங்காத நிலையில் இந்த கார் ஏதோ சர்வீஸ் ஸ்டேஷனை நோக்கி பயணப்பட்டுக் கொண்டிருந்திருக்க கூடும் என்று தோன்றுகிறது.
விபத்திற்கான காரணங்கள் சரியாக தெரியாத நிலையில், கடைசியாக கிடைத்த செய்தியின்படி ஓட்டுனரின் தவறினாலேயே இந்த விபத்து நிகழ்ந்ததாக அறியப்படுகிறது. உயிரிழப்பு ஏதும் இல்லை என்றாலும், மண்டிக்கிடக்கும் புதரில் விழுவதற்கு முன்னால் கார் பலமுறை உருண்டதற்கான அடையாளமாக மிகப்பெரிய அளவில் சேதங்கள் தென்படுகிறது. இது ஒரு சோதனை ஓட்டத்திற்கு(டெஸ்ட் டிரைவ்) பயன் படும் வாகனம் என்றும் அறியப்படுகிறது.
காரின் முன் பகுதி இனிமேல் சரி செய்யவே முடியாது என்று நினைக்கும் அளவுக்கு சேதமடைந்துள்ளது.பில்லர்கள் நொறுங்கி, முன்பக்க பயணியின் இருக்கை இடது ஜன்னல் வழியே வெளியே தொங்கிக்கொண்டிருந்தது.காரின் அனைத்து கண்ணாடிகளும் முற்றிலும் உடைந்து காணப்படுகிறது. வழவழப்பான காரின் மேல் கூரைபகுதி முற்றிலும் நசுங்கி தரையைத் தொடும் அளவிற்கு வந்துள்ளதைப் பார்க்கையில் விபத்தின் தாக்கத்தை நன்றாக புரிந்துக் கொள்ள முடிகிறது.முன்பு சொன்னது போல எந்த வித உயிர் சேதமும் ஏற்படாமல் காரில் இருந்தவர்கள் லேசான காயத்துடன் தப்பியது ஆச்சர்யமான செய்தி.
விபத்திற்கு காரணம் எதுவாக இருந்த போதிலும் கார் இறுதியில் புதரில் வந்து விழுவதற்கு முன்னால் அதிவேகத்தில் மோதி பல முறை உருண்டு வந்து இறுதியில் தான் புதரில் விழுந்து உள்ளது என்பது நமக்கு தெளிவாக தெரிகிறது. புகைப்படங்களை கூர்ந்து பார்க்கையில் மேலும் சில உண்மைகள் நமக்கு புலனாகிறது. காரின் ஸ்டேரிங்வீல் இன்னும் இருப்பதாகவே தோன்றுகிறது. இதிலிருந்து காற்றுப்பைகள் (ஏர் பாக்) இயங்கவில்லை என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. மேலும் காரின் அல்லாய் சக்கரங்கள் மற்றும் காற்று பைகளை பார்க்கையில் இந்த கார் எஸ் - கிராஸ் கார்களின் டாப் எண்டு மாடல் என்பதும் ஊர்ஜிதமாகிறது. ஓட்டுனர் சீட் பெல்ட் அணியாமல் அலட்சியமாக இருந்ததே விபத்திற்கான காரணமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.
வருகிற 5 ஆம் தேதி பெரும் எதிர்பார்ப்பிற்கு நடுவே அறிமுகமாக உள்ள எஸ் - கிராஸ் கார்களை இப்படி சிதறிய பாகங்களாகப் பார்பதற்க்கு சற்று அதிர்ச்சியாக தான் உள்ளது. இதைப்பற்றிய மேலும் செய்திகள் கிடைக்கும் பொது உடனே உங்களிடம் பகிர்ந்துக் கொள்கிறோம். தொடர்பில் இருங்கள்!
0 out of 0 found this helpful