மாருதி எஸ் - கிராஸ் கார்களின் மேல் ரூ. 1,00,000 வரையிலான சலுகைகளை மாருதி சுசு கி நிறுவனம் வழங்குகிறது
மாருதி எஸ்-கிராஸ் 2017-2020 க்காக செப் 29, 2015 12:47 pm அன்று cardekho ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது
- 13 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஜெய்பூர் : இந்தியாவின் மிகப்பெரிய கார் தயாரிப்பாளரான மாருதி சுசுகி நிறுவனத்தினர் அறிமுகமாகி இரண்டே மாதங்களான தங்களது எஸ் - க்ராஸ் கார்கள் மீது 1 லட்சம் ரூபாய் வரையிலான சலுகைகளை அறிவித்துள்ளனர். இதே பிரிவில் உள்ள மற்ற கார்கள் தரும் கடும் நெருக்கடியை சமாளித்து விற்பனையை கூட்டவே இந்த அதிரடி சலுகைகளை அறிவித்துள்ளது மாருதி நிறுவனம்.
இந்த தள்ளுபடி சலுகைகள் நாடு முழுதும் ரூபாய் 20,000 முதல் 9,00,000 / 1,00,000 என்ற அளவுக்கு வழங்கப்படுள்ளது. DDiS 200 1.3 லிட்டர் வேரியன்ட்கள் ரூ. 20,000 வரை தள்ளுபடி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும் அதே வேளையில், 1.6 லிட்டர் DDiS 320 வேரியன்ட்கள் ரூ. 1 லட்சம் ( மாருதி சுசுகி கார்களுக்கான ரூ. 30,000 எக்ஸ்சேன்ஜ் போனஸ் தொகையையும் சேர்த்து ) வரை தள்ளுபடி செய்யப்பட்டு சென்னை மற்றும் NCR பகுதிகளில் விற்பனையாகின்றன. இந்தியாவின் மற்ற பகுதிகளை பொறுத்தவரை தள்ளுபடி தொகை ரூ. 90,000 என்ற அளவுக்கு குறைக்கப்பட்டுள்ளது. இவற்றை தவிர எக்ஸ்சேன்ஜ் போனஸ் தொகையும் மாடலுக்கு ஏற்றாற்போல் ரூ. 20,000 முதல் 40,000 வரை மாறுபடுகிறது.
இந்த சலுகை செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி வரை, அதாவது நாளை வரை தான் என்றாலும் இந்த சலுகைகளை பெற விரும்புவோர் நாளைக்குள் ரூ. 11,000 தொகையை செலுத்தி இந்த தள்ளுபடி சலுகையை பின்னர் பயன்படுத்திக்கொள்ள புக் செய்துக் கொள்ளலாம். இந்த புக் செய்யும் வசதி அளிகப்பட்டுள்ளதால் வாடிக்கையாளர்கள் நன்கு யோசித்து தங்களுக்கு தேவையான மாடலை தேர்ந்தெடுத்துக் கொள்ள தேவையான அவகாசம் கிடைக்கும் என்று மாருதி நிறுவனம் நம்புகிறது.