• English
  • Login / Register

அறிமுகத்திற்கு முன்னரே ஆன்லைனில் வலம் வரும் மாருதி இன்விக்டோவின் தெளிவான படங்கள்

published on ஜூன் 26, 2023 04:25 pm by rohit for மாருதி இன்விக்டோ

  • 47 Views
  • ஒரு கருத்தை எழுதுக

மாருதி இன்விக்டோ அதன் சிறப்பம்சங்கள் மற்றும் பவர் டிரெய்னை டொயோட்டா இன்னோவா ஹைகிராஸுடன் பகிர்ந்து கொள்ளும்.

Maruti Invicto spied

  • இன்னோவா ஹைகிராஸ் அடிப்படையிலான, மாருதி இன்விக்டோ தோற்றத்தில் மாறுபாடுகளைப் பெறுகிறது.

  • மாருதி, எம்பிவி -க்கு ரூ.25,000 -க்கு முன்பதிவு கட்டணமாக நிர்ணயித்துள்ளது.

  • புதிய படங்கள், குரோம் ஸ்லாப்கள் மற்றும் அண்டர்லைனிங் மற்றும் டிரை-பீஸ் LED பாகங்களுடன் கூடிய திருத்தியமைக்கப்பட்ட கிரில்லை காட்டுகின்றன.

  • இது வெவ்வேறு அலாய் வீல்களைப் பெறுகிறது மற்றும் டெயில்கேட்டில் உள்ள வேரியன்ட் பேட்ஜையும் தவறவிட்டது.

  • டொயோட்டா எம்பிவி -யில் பழுப்பு நிறம் கலந்த இருக்கைக்குக்கு பதிலாக பிளாக் தீம் மட்டும் உட்புறம் மாற்றப்பட்டு  இருக்கும்.

  • 2-லிட்டர் ஸ்ட்ராங்-ஹைப்ரிட் பவர்டிரெய்னுடன் மட்டுமே வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • எதிர்பார்க்கப்படும் அம்சங்களில் 10 இன்ச் டச் ஸ்கிரீன், டூயல் ஜோன் AC மற்றும் 360 டிகிரி கேமரா ஆகியவை அடங்கும்.

டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் அடிப்படையிலான  மாருதி இன்விக்டோ அறிமுகத்திற்கு இன்னும் 10 நாட்களே உள்ளன. இதன் முன்பதிவுகள் இப்போது ரூ.25,000 -க்கு நடந்து வருகின்றன, அதே சமயம் இதன் வெளியீடு ஜூலை 5-ஆம் தேதி நடைபெற உள்ளது. விலை அறிவிப்புக்கு முன்னதாக, பிரீமியம் மாருதி எம்பிவி மீண்டும் மறைக்கப்படாமல் வெளியில் தென்பட்டது, இந்த முறை அதன் வடிவமைப்பில் தெளிவான தோற்றத்தை அளிக்கிறது.

தோற்றத்தில் ஏதேனும் மாற்றங்கள் உள்ளதா?

மாருதி எம்பிவி வெள்ளை நிறத்தில் படம் எடுக்கப்பட்டுள்ளது, இன்விக்டோ மற்றும் இன்னோவா ஹைகிராஸ் இடையே உள்ள ஒரே பெரிய வித்தியாசம் மாற்றப்பட்ட கிரில் ஆகும். இது இப்போது டூயல் குரோம் ஸ்லேட்டுகள் மற்றும் தடிமனான குரோம் அன்டர்லைனிங் ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.  பார்க்கப்பட்ட மாடல் இன்விக்டோவின் குறைந்த வேரியன்ட்டாகத் தோன்றியது, ஏனெனில் இது ஃபாக் விளக்குகள் மற்றும் அகலமான சன்ரூஃப் ஆகியவற்றைத் தவறவிட்டது, இவை இரண்டும் டாப்-ஸ்பெக் இன்னோவா ஹைகிராஸில் கிடைக்கும்.

Maruti Invicto rear spied

இன்விக்டோ வேறுபட்ட அலாய் வீல்களைப் பெறுகிறது, அதே நேரத்தில் அதன் முழு விவரமும் அப்படியே இருக்கும். பின்புறத்தில், அதன் LED டெயில்லைட்கள் நவீன நெக்ஸா வேரியன்ட்களில் காணப்படுவது போல் ட்ரை-பீஸ் பாகம் இருப்பதை நீங்கள் கவனிப்பீர்கள். அதன் மீதியிருக்கும் பின்புற தோற்றம் மாறாமல் இருக்கிறது (நிச்சயமாக 'இன்விக்டோ' மோனிகரைச் சேர்ப்பதைத் தவிர). இது வேரியன்ட் பேட்ஜையும் இழக்கிறது, இது அதன் டொயோட்டா உடன்பிறப்பில் வழங்கப்படுகிறது.

கேபினில் உள்ள வேறுபாடுகள்

Maruti Invicto seats

மாருதி நெக்ஸா கார்களில் பிரதானமாக இருப்பது போல், இன்விக்டோ முமுமுழுமையான கருப்பு கேபின் தீமில் வரும் (அதன் சமீபத்திய டீஸர்களில் ஒன்றில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது). இரண்டு MPV களின் உட்புறங்களில் வேறு எந்த மாற்றத்தையும் நாங்கள் எதிர்பார்க்கவில்லை.

டூயல் ஜோன் கிளைமேட் கன்ட்ரோல், 10 இன்ச் டச் ஸ்கிரீன், டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்பிளே மற்றும் இரண்டாவது வரிசை கேப்டன் இருக்கைகளுக்கான ஓட்டோமான் செயல்பாடு போன்ற ஹைகிராஸின் அம்சங்களுடன் மாருதி இன்விக்டோவை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாதுகாப்பைப் பொறுத்தவரை, இன்விக்டோ ஆனது நிலையான, எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), முன்புற மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள் மற்றும் ரிவர்சிங் 360 டிகிரி கேமரா மற்றும் அதிகபட்சம் ஆறு ஏர்பேக்குகளுடன் வரலாம். ஹைகிராஸ் ADAS உடன் வருகிறது (அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம்) ஆனால் மறைவாக படம் பிடிக்கப்பட்ட இன்விக்டோ யூனிட்டில்  அது பொருத்தப்பட்டதாக தெரியவில்லை.

மேலும் காணவும்: மாருதி சுசுகி i eVX எலக்ட்ரிக் SUV சோதனை ஆரம்பம், உட்புற விவரங்களும் பார்க்கப்படுகின்றன

ஸ்ட்ராங்-ஹைபிரிட் மட்டுமே

அறிக்கைகள் மற்றும் டீலர் ஆதாரங்களை நம்பினால், இன்விக்டோ  ஆனது இன்னோவா ஹைகிராஸின் இன் 184PS 2-லிட்டர் ஸ்ட்ராங்-ஹைப்ரிட் பவர்டிரெய்னுடன் வழங்கப்படும். இது e-CVT கியர்பாக்ஸுடன் வரும், மேலும் 21.1kmpl மைலேஜை வழங்குகிறது.

இருப்பினும், இந்த பார்வையானது, முன்பதிவு செய்வதற்குக் கிடைக்கும் வகையில், மாருதி இன்விக்டோ ஒரு முழு உபகரணங்கள் பொருத்தப்பட்ட வேரியன்ட்டில் வழங்கப்படும் முந்தைய அறிக்கைக்கு முரணானது. அல்லது ரீபேட்ஜ் செய்யப்பட்ட எம்பிவி ஆனது, டொயோட்டா எம்பிவி -யின் உபகரணப் பட்டியலை மாற்றி அதன் விலையைக் குறைக்கும்.

விலை மற்றும் போட்டியாளர்கள்

Maruti Invicto teaser

ஒரு ஹைபிரிட் மட்டுமே கொண்ட  மாடலாக வழங்கப்பட்டால், மாருதி பிரீமியம் இன்விக்டோ எம்பிவி-யின் விலை ரூ. 22 லட்சத்திலிருந்து (எக்ஸ்-ஷோரூம்) எதிர்பார்க்கப்படுகிறது. அதன் ஒரே நேரடி போட்டியாளர் டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் ஆகும். எம்பிவி பிரிவில் மாருதி XL6 . கியா கேரன்ஸ்  ஆகிய கார்களுக்கு மேல் இடம் பெற்றிருக்கும்.

படங்களின் ஆதாரம்

was this article helpful ?

Write your Comment on Maruti இன்விக்டோ

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending எம்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
  • எம்ஜி m9
    எம்ஜி m9
    Rs.70 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    மார, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • க்யா கேர்ஸ் ev
    க்யா கேர்ஸ் ev
    Rs.16 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    ஏப், 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • ரெனால்ட் டிரிபர் 2025
    ரெனால்ட் டிரிபர் 2025
    Rs.6 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    ஜூன, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • vinfast vf9
    vinfast vf9
    Rs.65 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    பிபரவரி, 2026: அறிமுக எதிர்பார்ப்பு
×
We need your சிட்டி to customize your experience