இந்திய சாலையில் வேவு பார்க்கப்பட்ட மார்க்-7 வோல்க்ஸ்வேகன் கோல்ஃப்: இது அபார்த் புண்டோவின் தாக்கமா?
published on டிசம்பர் 01, 2015 03:45 pm by manish
- 15 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஜெய்ப்பூர்:
இந்தியாவில், புனே நகரின் சாகனில் உள்ள இந்த ஜெர்மன் வாகனத் தயாரிப்பாளரின் தலைமை தயாரிப்பு தொழிற்சாலையின் அருகே, மார்க்-7 வோல்க்ஸ்வேகன் கோல்ஃப் கார் வேவுப் பார்க்கப்பட்டது. இந்த வேவுப் பார்க்கப்பட்ட சோதனை வாகனம், இடதுகை ஓட்டுநர் கட்டமைப்பை கொண்டதாக இருந்தது. இந்த காரை பார்க்கும் போது, கவர்ச்சிகரமான இந்த ஹாட்ச், வருங்காலத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட வாய்ப்புள்ளதா? என்ற ஆர்வத்தை தூண்டுவதாக உள்ளது. (நாம் முன்னே கூறிய கூற்றிற்கு ஏற்ப) இந்த வாய்ப்பிற்கு ஏற்ப அந்நிறுவனம் செயல்பட முடிவு செய்யும்பட்சத்தில், இந்தியாவிற்கான கார் வகையை உள்ளூரிலேயே உற்பத்தி செய்ய அதிக வாய்ப்புகள் உள்ளது. இது போன்ற ஒரு கவர்ச்சிகரமான பிரிமியம் ஹாட்ச்சை அறிமுகம் செய்ய, இந்திய ஆட்டோமொபைல் தொழில்துறையின் சமீபகால சூழ்நிலை ஏற்றதாக உள்ளது. சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஃபியட் அபார்த் புண்டோ இவோ மற்றும் அவென்ச்சுரா ஆகிய கார்களுக்கு கிடைத்த சாதகமான வரவேற்பு, இதற்கு சிறந்த உதாரணம் ஆகும்.
இங்கிலாந்தில் வோல்க்ஸ்வேகன் கோல்ஃப் காரின் விலை ஏறக்குறைய ரூ.17 லட்சம் என்று துவங்கும் நிலையில், இந்திய வாடிக்கையாளர்களை பொறுத்த வரை, இந்த விலை பெரும் தொகையாக இருந்தாலும், உள்ளூரிலேயே தயாரிப்பு மற்றும் உதிரிப் பாகங்களில் கட்டுப்பாடு ஆகிய நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் வோல்க்ஸ்வேகன் நிறுவனத்தால், சந்தையில் ஏற்பட்டுள்ள இந்த சுங்க வரி செலவீனத்தை குறைக்க முடியும். இந்திய சந்தையில் உள்ள போட்டியாளர்களுக்கு சவாலாக அமையும் வகையில், வோல்க்ஸ்வேகன் கோல்ஃப்-பின் அமெரிக்கன் வகையை அந்நிறுவனம் இங்கு கொண்டு வருவதே சரியான தேர்வாக அமையும் என்பது எங்களின் கருத்து. அமெரிக்க சந்தைகளில் ஏறக்குறைய ரூ.13.5 லட்சம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ள இந்த Mk7 வோல்க்ஸ்வேகன் கோல்ஃப், ஒரே ஒரு பெட்ரோல் வகையான 1.8-லிட்டர் TSI யூனிட்டை மட்டுமே பெற்று, 170 bhp ஆற்றலை வெளியிடும் திறனைக் கொண்டுள்ளது. இந்தியாவில் உள்ளூரில் தயாரிக்கப்பட்டு, இதே விலை நிர்ணயத்தில் விற்பனை செய்யப்படும் பட்சத்தில், 145bhp வெளியீடை கொண்ட 1.4-லிட்டர் அபார்த் புண்டோவை எதிரான பலமான போட்டியாளராக நிற்க முடியும். இப்போதைக்கு மேற்கூறிய நமது யோசனைகளை வோல்க்ஸ்வேகன் நிறுவனம் தீவிரமாக பரிசீலிக்கும் என்று நம்புவோம். சமீபகாலமாக பல சர்ச்சைகளில் சிக்கி தவிக்கும் இந்த பிராண்டிற்கு இந்த தயாரிப்பின் மூலம் ஒரு நல்ல அபிப்பிராயம் ஏற்பட உதவலாம்.
இதையும் படியுங்கள்
0 out of 0 found this helpful