மஹிந்திரா XUV 500 வாகனத்தின் விற்பனை 1.5 லட்சத்தை தாண்டியது.
sumit ஆல் அக்டோபர் 05, 2015 06:17 pm அன்று பப்ளிஷ் செய்யப்பட்டது
- ஒரு கருத்தை எழுதுக
ஜெய்பூர்:
மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் தன்னுடைய XUV500 வாகனம் 1,50,000 எண்ணிக்கைகளை தாண்டி ( ஏற்றுமதி உட்பட ) வெற்றிகரமாக தொடர்ந்து விற்பனை ஆகி கொண்டிருக்கிறது என்று அறிவித்துள்ளது. செப்டம்பர் 2011 ல் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த வாகனம் , மிகக் குறுகிய நான்கு ஆண்டு காலத்திற்குள் இத்தகைய சாதனை இலக்கை அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
100% இந்தியாவிலேயே உருவாக்கப்பட்டு வரும் இந்த XUV500, சென்னையில் உள்ள மஹிந்திரா ரிசர்ச் வேல்லி (MRV) பகுதியில் அமையப்பெற்றுள்ள இந் நிறுவனத்தின் உலக தரம் வாய்ந்த ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தின் முழு திறமையையும், தொழில்நுட்ப வல்லமையையும் நன்கு பயன்படுத்திக் கொண்ட வாகனம் என்று நம்மை சொல்ல வைக்கிறது . அறிமுகமானது முதல் தொடர்ந்து பலமுறை, பலவிதமான செயல்திறன் மேம்பாடு மற்றும் உலக தரம் வாய்ந்த பாதுகாப்பு அம்சங்கள் இணைப்பு என்று பலவகையான மெருகூட்டல்களுக்கு ஆளாகி இன்றும் மஹிந்திரா நிறுவனத்தின் பேர் சொல்லும் பிள்ளையாக வெற்றிகரமாக வலம் வந்துக் கொண்டிருக்கிறது இந்த XUV 500 என்று சொன்னால் அது மிகையாகாது.
மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாகி திரு. பிரவின் ஷா பின்வருமாறு கூறினார். “ எங்களுடைய XUV500 அடைந்துள்ள இந்த புதிய மைல்கல் எங்களை இத்தருணத்தில் மிகவும் பெருமைபடுத்தும் நிகழ்வாக உணர வைக்கிறது.. இந்த நேரத்தில் எங்களின் இந்த ப்ரேன்ட் மீது வாடிக்கையாளர்கள் தந்த அளவிட முடியா ஆதரவிற்கும் வைத்திருக்கும் நம்பிக்கைக்கும் எங்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த புதிய மைல்கல் XUV 500 பெற்றுள்ள வரவேற்பை மீண்டும் ஒரு முறை உறுதி செய்வதாக அமையும் அதே நேரத்தில் தனது பிரிவில் தொடர்ந்து பல புதிய சாதனைகளை நிகழ்த்த தொடர்ந்து ராஜா நடை போட்டுக் கொண்டிருக்கிறது இந்த XUV 500 .
சமீபத்தில் தான் 5 லட்சம் என்ற யாரும் எளிதில் தொட முடியா கனவு இலக்கை தொட்டுள்ள மஹிந்திரா ஸ்கார்பியோ பற்றிய செய்தி வெளியாகி இருந்த நிலையில் இந்த XUV 500 மற்றுமொரு இனிப்பான செய்தியை இந்த மஹிந்திரா நிறுவனத்திற்கு வழங்கயுள்ளது குறிபிடத்தக்கது.