• English
    • Login / Register

    மஹிந்த்ராவின் XUV  500 ஃபேஸ்லிஃப்ட் மாடல் இத்தாலி நாட்டில் அறிமுகம்

    sumit ஆல் நவ 20, 2015 11:22 am அன்று பப்ளிஷ் செய்யப்பட்டது

    11 Views
    • ஒரு கருத்தை எழுதுக

    இந்திய சாலைகளில் மஹிந்த்ராவின் XUV  500 கார், இந்த ஆண்டின் முற்பகுதியில் இருந்து பயணிக்க ஆரம்பித்தது. இப்போது, மஹிந்த்ராவின் XUV  500 ஃபேஸ்லிஃப்ட் மாடல் இத்தாலி நாட்டில் அறிமுகம் செய்யபட்டுள்ளது. இத்தாலி நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த ஃபேஸ்லிஃப்ட் மாடலுக்கு மஹிந்த்ரா & மஹிந்த்ரா நிறுவனம் 5 ஆண்டுகள் அல்லது 100,000 km  -க்கான வாரண்டியை வழங்குகிறது. தோற்றத்தை அழகுபடுத்தும் ஒரு சில அம்சங்கள் தவிர, கார் உபகரணங்கள் அடிப்படையில் முழுமையான மேம்பாடுகளை இந்த ஃபேஸ்லிஃப்ட் மாடல் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்க செய்தியாகும். ஐரோப்பிய நாடுகளில், W   6 மற்றும் W   8 என இரு மாறுபட்ட ஃபேஸ் லிஃப்ட் மாடல்களில் புதிய XUV 500 கிடைக்கின்றன. மேலும், பாதுகாப்பு அம்சங்களான ஏர் பேக்ஸ், ABS , EBD , ESP, ISOFIX  மௌண்ட்ஸ், மலை ஏறவும், மலை இறங்கவும் உதவும் சாதனம் ஆகியன அனைத்தும் இந்த காரில் பொருத்தப்பட்டு வருகிறன.

    2.2 லிட்டர் m ஹாக் டீசல் இஞ்ஜின் மற்றும் 6 ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸ் ஆகியவை, இந்திய மற்றும் இத்தாலிய வகைகளில் பொதுவான அம்சமாக உள்ளன. சர்வதேச சந்தைக்கு ஏற்ப பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட பெட்ரோல் இஞ்ஜின், இந்த புதிய மாடலில் புதிதாக பொருத்தப்பட்டு வருகிறது.

    முன்புற முகப்பு பகுதியில், அழகிய புதிய வேலைப்பாடுடன் கூடிய கிரில் மற்றும் அதனுடன் இணைந்த ஹெட் லாம்ப் ஆகியன பொருத்தப்பட்டுள்ளதால், இந்த காரின் முன்புறத் தோற்றம் பார்ப்பதற்கு முன்பை விட மிகவும் நேர்த்தியாக உள்ளது. காரின் உட்பகுதியில் புதிய வண்ணத்தில் டாஷ் போர்டு மற்றும் அதற்கு ஒத்த சீட் துணிகள் மற்றும் புதுப்பிக்கப்பட்ட சென்டர் கன்சோல் ஆகியன இந்த காருக்கு புதுப்பொலிவைக் கொடுக்கின்றன. உயர்தர ஐரோப்பிய மாடலான W  8 காரில், ரிவர்ஸ் பார்க்கிங் காமிரா, குளிரூட்டப்பட்ட க்லோவ் பாக்ஸ், GPS நேவிகேஷனுடன் செயல்படும் டச் ஸ்கிரீன் இன்ஃபோடைன்மெண்ட் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் கிளைமேட் கண்ட்ரோல், 8 விதமாக மாற்றி அமைக்கக் கூடிய டிரைவர் சீட், படுல் லாம்ப், க்ரூயிஸ் கண்ட்ரோல், ஸ்டாட்டிக் கார்னர்ரிங் லாம்ப் போன்றவற்றோடு நிறுத்திக் கொள்ளாமல், இது போன்ற மேலும் பல புதிய அம்சங்களை கொண்டு இத்தாலியில் அறிமுகமான இந்த மாடல் புதுப்பிக்கப்பட்டுள்ளது.  

    மேற்கூறிய அம்சங்கள் தவிர, கூடுதல் அம்சங்களான, வெப்பத்தைத் தடுக்கக் கூடிய புதிய சன்ரூஃப் மற்றும் அழகிய குரோமிய வேலைப்பாடுடன் கூடிய பனி விளக்குகளுடன் வரும் பம்பர் போன்றவை பொருத்தப்பட்டு, அனைத்து பருவகாலங்களிலும் பயணம் செய்ய தோதாக இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த மிடில் சைஸ் க்ராஸ் ஓவர் கார் அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்திழுக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

    ஐரோப்பிய வகை XUV  500 மாடல் காரின் அடக்க விலை, 19,527 யூரோ முதல் 25,466 யூரோ வரை (தோராயமாக இந்திய ரூபாய் மதிப்பில் 13.74 லட்சம் முதல் 18.01 லட்சம் வரை) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவில் இருந்து CBU  முறையில் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    மேலும் வாசிக்க:

    was this article helpful ?

    Write your Comment on Mahindra எக்ஸ்யூஎஸ்

    கார் செய்திகள்

    • டிரெண்டிங்கில் செய்திகள்
    • சமீபத்தில் செய்திகள்

    டிரெண்டிங் எஸ்யூவி கார்கள்

    • லேட்டஸ்ட்
    • உபகமிங்
    • பிரபலமானவை
    ×
    We need your சிட்டி to customize your experience