சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

TUV300 வாகனத்தின் முன்பதிவை மஹேந்திரா இன்று முதல்ஆரம்பித்துள்ளது

nabeel ஆல் செப் 01, 2015 12:16 pm அன்று பப்ளிஷ் செய்யப்பட்டது

அதிக எதிர்பார்ப்புகளையும், பிரமிப்புகளையும் கொண்ட மஹிந்த்ராவின் TUV 300 வாகனம், இன்றிலிருந்து பத்து நாட்களில் சந்தையில் அறிமுகப்படுத்தப்படும். உளவு செய்து எடுக்கப்பட்ட போர் டாங்கியின் தோற்றத்தை ஒத்த இதன் வடிவமைப்பு படம் முதல், ஓட்டு சக்கர (ஸ்டியரிங் வீல்) பட வெளியீடு வரை, மஹிந்திரா, அதன் வாடிக்கையாளர்கள் அனைவரையும் அதீத ஆவலுடன் தங்களது இருக்கையின் நுனியில் அமர்ந்திருக்க செய்கிறது. இந்த கச்சிதமான SUV வாகனத்தின் உண்மையான அதிகார பூர்வமான படத்தை இன்று வரை வெளியிடாமல், மறைமுகமாகவே வைத்துள்ளது. எனினும், இந்த இந்திய வாகன தயாரிப்பு நிறுவனம், இன்று (2015 செப்டெம்பர் மாதம் ஒன்றாம் தேதி) முதல் TUV 300 வாகனத்தின் முன்பதிவை ஆரம்பித்துள்ளது.

TUV 300 காரை நுட்பமாக பார்க்கும் போது, இந்த கச்சிதமான SUV வாகனத்தின் mHawk80 இஞ்ஜின், குவாண்டோவில் உள்ள 3 சிலிண்டர் பொருத்திய1.5 லிட்டர் மோட்டாரைப் போலவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இது 4 மீட்டருக்கு உள்ளடங்கிய வாகனமாதலால், இதன் இஞ்ஜினின் கொள்ளளவு ட்டருக்கு குறைவாகலி1.5 இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மஹிந்திரா TUV 300 மாடலின் உட்புறம், பழுப்பு மற்றும் கருப்பு வண்ணத்தில் குரோமிய மற்றும் வெள்ளி நிற வேலைப்பாடுகளுடன் அழகுபடுத்தப்பட்டுள்ளது. புத்தம் புதிய பன்முக செயல்பாட்டு ஓட்டு சக்கரம் (மல்டி ஃபங்சனல் ஸ்டியரிங் வீல்), கவர்ச்சியான குரோமிய கம்பி வளையத்துடன் கூடிய இரண்டு கருவிகளை இணைத்த கருவிமய சாதனம் ஆகிய-பாட் இன்ஸ்ட்ரூமெண்டேஷன் க்லஸ்டர்) வற்றை இந்த சிறப்பம்ஸங்களாக பெற்றுள்ளது. மஹிந்த்ரா TUV 300 மாடல், இதன் வர்க்கத்திலேயே முதன் முதலாக 17 அங்குல ரேடியல் டயர் TUV 300 –இல் பொருத்தப்பட்டுள்ளது. மேலும், 235/65 குறுக்கு பிரிவுகளைக் கொண்ட, R 17 ரேடியல் டயருடன் கூடிய 5 இரட்டை ஸ்போக் அலாய் சக்கரங்களின் மேல் கம்பீரமாக, இந்த வாகனம் உலா வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மஹிந்த்ரா TUV 300 மாடலின் மிக பெரிய போட்டியாளராக ஃபோர்ட் எக்கோ ஸ்போர்ட் இருக்கும் என்றும் 4 மீட்டருக்கு உள்ளடங்கிய இந்த கச்சிதமான SUV மாடலின் விலை, நிச்சயமாக இதன் அமெரிக்க போட்டியாளருக்கு சவால் விடும்படி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share via

Write your Comment on Mahindra TUV 3OO

Enable notifications to stay updated with exclusive offers, car news, and more from CarDekho!

டிரெண்டிங் கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
பேஸ்லிப்ட்
எலக்ட்ரிக்புதிய வேரியன்ட்
Rs.18.90 - 26.90 லட்சம்*
எலக்ட்ரிக்புதிய வேரியன்ட்
Rs.21.90 - 30.50 லட்சம்*
Rs.9 - 17.80 லட்சம்*
புதிய வேரியன்ட்
Rs.11.82 - 16.55 லட்சம்*
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை