அறிமுகமாக உள்ள TUV 300 வாகனத்தின் ஸ்டீரிங் வீல் அமைப்பை வெளியிட்டு மஹிந்திரா நிறுவனம் ஆவலை தூண்டுகிறது.
அறிமுகமாக உள்ள மஹிந்திரா நிறுவனத்தின் கச்சிதமான SUV TUV 300 வாகனத்தின் ஸ்டீரிங் அமைப்பை காட்டும் புகைப்படத்தை மஹிந்திரா நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதனுடன் இணைந்து இன்ஸ்ட்ருமண்டேஷன் க்ளஸ்டர் மற்றும் கேபின் வண்ணங்களும் அந்த புகைப்படத்தில் பளிச்சிடுகிறது. முன்னதாக அறிமுக தேதியை (செப்டம்பர் 10, 2015) வெளியிட்ட போது இந்நிறுவனம் TUV 300 வாகனத்தின் முன்புற அமைப்பை வெளியிட்டிருந்தது நினைவிருக்கலாம்.
இந்த புதிய டீசர் பற்றி பேசும் போது TUV 300 எஸ்யூவியில் முற்றிலும் புதிய ஸ்டீரிங் வீல் பொருதப்பட்டுள்ளது. இப்போது விற்பனையில் உள்ள எல்லா மஹிந்திரா வாகனங்களில் உள்ளதை விடவும் இந்த வாகனத்தில் சிறியதான ஸ்டீரிங் வீல் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் மூன்று ஸ்போக் உடையதாகவும் கீழ்புற ஸ்போக் நேர்த்தியான வெள்ளி நிறத்திலும் பொலிவுடன் காட்சியளிக்கிறது. ஆடியோ மற்றும் ப்ளூடூத் டெலிபோனி ஆகியவைகளை இயக்க தேவையான பொத்தான்கள் ஸ்டீரிங் வீலில் இணைக்கப்பட்டுள்ளது. குரோம் வளையங்களுடன் கூடிய இரட்டை டயல் மாதிரியில் இன்ஸ்ட்ருமண்டேஷன் க்ளஸ்டர் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த இன்ஸ்ட்ருமண்டேஷன் க்ளஸ்டர் மற்றும் ஏசி லோவர்ஸ் இரண்டயும் சுற்றி குரோம் பூச்சு கொடுக்கப்படுள்ளது. இதைத் தவிர படத்தில் உள்ளது போல் டேஷ்போர்ட் படத்தில் உள்ளது போல் கருப்பு மற்றும் பழுப்பு ஆகிய இரட்டை வண்ணங்களுடன் பார்க்க மிக அழகாக மிளிர்கிறது. இதைத் தவிர வெளிப்புறம் உள்ள ரியர் வியூ கண்ணாடியை சரிசெய்யக்கூடிய டாகல் வலதுபக்கம் ஸ்டீரிங் வீலின் கீழே அமைகப்படுள்ளது.
மஹிந்திரா இந்த வாகனத்தை செப்டம்பர் 10 ஆம் தேதி அறிமுகப்படுத்தி பின் விநியோகத்தை தொடங்கும். இதைத் தவிர வேறு தகவல்கள் இந்த 4 மீட்டருக்கும் குறைவான எஸ்யூவி வாகனத்தைப்பற்றி தற்போதைக்கு இல்லை. மஹிந்திரா நிறுவனம் முற்றிலும் புதிய கோட்பாடுடன்உருவாக்கப்ப்படுமிந்த வாகனமானது எம்ஹாக்80 டீசல் என்ஜின் மூலம் சக்தியூட்டப்பட உள்ளதாக தெரிவிக்கிறது.