முதல் முறையாக S1O1-யின் முதல் படத்தை மஹிந்திரா வெளியிட்டது
published on டிசம்பர் 18, 2015 12:09 pm by raunak
- 15 Views
- ஒரு கருத்தை எழுதுக
அடுத்த மாதம் அறிமுகம் செய்யப்படலாம் என்று கூறப்படும் இந்த வாகனம், ஆரம்ப நிலை ஹேட்ச்பேக் பிரிவின் ஒரு பகுதியாக இணைந்து, ரூ.4 லட்சம் முதல் ரூ.7 லட்சத்திற்குள் இடைப்பட்டு விலை நிர்ணயிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெய்ப்பூர்: S101 என்ற குறியீட்டு பெயரை கொண்ட அடுத்து வரவுள்ள கச்சிதமான கிராஸ்ஓவரின் முதல் படத்தை (டீஸர்), முதல் முறையாக மஹிந்திரா நிறுவனம் வெளியிட்டுள்ளது. சாங்யாங் உடனான கூட்டமைப்பில் மஹிந்திரா அண்டு மஹிந்திரா நிறுவனம் தயாரித்துள்ள ஒரு புதிய பெட்ரோல் என்ஜின்களின் குடும்பத்தை, இந்த வாகனத்தில் அறிமுகம் செய்யப் போவதால், இந்த வாகன தயாரிப்பாளருக்கு இது ஒரு முக்கியத்துவம் வாய்ந்த தயாரிப்பாக தெரிகிறது. S101-ல் உள்ள பெட்ரோல் ஆற்றலகம் குறித்து, TUV3OO-யின் அறிமுக நிகழ்ச்சியில் அறிவிக்கப்பட்டது. S101-க்கு KUV100 என்று பெயரிடப்படும் என்ற வதந்தி உலா வருகிறது. மேலும், மாருதி சுசுகியின் அடுத்து வரவுள்ள இக்னிஸ் (அறிவிக்கப்பட்டது), இதனுடன் நேரடியாக போட்டியிட உள்ளது.
இதன் வடிவமைப்பு குறித்து பார்க்கும் போது, முதல் படம் மற்றும் சமீபகால வேவுப் பார்க்கப்பட்ட படங்களின் மூலம், S101-க்கு ஒரு கிராஸ்ஓவரின் நிலைப்பாடு இருப்பதை காணலாம். ஆனால் இதை ஒரு புதிய SUV என்றே மஹிந்திரா அழைக்கிறது. இந்த வாகன தயாரிப்பாளர் மூலம் வெளியிடப்பட்டுள்ள இவ்வாகனத்தின் முதல் படத்தில், முன்பக்கம் காட்டப்படுவதால், டேடைம் ரன்னிங் LED-கள் உடன் கூடிய நேர்த்தியான புதிய மஹிந்திரா கிரில் மற்றும் தடித்த பம்பர் ஆகியவற்றை பெற்றிருப்பது காண முடிகிறது.
புதிய பெட்ரோல் என்ஜினை பற்றி பார்க்கும் போது, இதில் ஒரு 1.2-லிட்டர் யூனிட்டை கொண்டு, பெரும்பாலும் ஒரு 3-சிலிண்டர் அமைப்பை பெற்று, 80 PS ஆற்றலையும், ஏறக்குறைய 110 Nm முடுக்குவிசையையும் வெளியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. S101-யில் புதிய பெட்ரோல் என்ஜினை தவிர, TUV3OO-ல் அறிமுகம் செய்யப்பட்ட 1.5-லிட்டர் mஹவுக் என்ஜினையும் காணலாம். மேற்கூறிய இரு என்ஜின்களும், ஒரு 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் உடன் பொருத்தப்பட்டு இருக்கும். TUV3OO-ல் இருந்த 5-ஸ்பீடு AMT (ஆட்டோமேட்டேட்-மேனுவல் டிரான்ஸ்மிஷன்), இதிலும் காணப்பட அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
இதையும் படியுங்கள்
0 out of 0 found this helpful