மஹிந்த்ரா நிறுவனம் XUV 500 காருக்கு ஆட்டோமேடிக் வேரியண்ட்களை அறிமுகப்படுத்துகிறது
published on நவ 24, 2015 03:48 pm by sumit for மஹிந்திரா எக்ஸ்யூஎஸ்
- 17 Views
- ஒரு கருத்தை எழுதுக
மஹிந்த்ரா நிறுவனம், தனது XUV 500 காருக்கான ஆட்டோமேடிக் வேரியண்ட்களை இந்த மாதம் 25 –ஆம் தேதி அறிமுகப்படுத்த உள்ளது. ஹுண்டாய் கிரேட்டாவின் போட்டியைச் சமாளிக்க, இந்த இந்தியா கார் தயாரிப்பு நிறுவனம், 2 வீல் ட்ரைவ் மற்றும் 4 வீல் ட்ரைவ் ஆகிய இரண்டு மாடல்களுக்கும் புதிய ஆட்டோமேடிக் வேரியண்ட்களை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது.
மஹிந்த்ரா ஸ்கார்பியோ காரில் உள்ளதைப் போலவே, இந்த புதிய மாடலிலும் 6 ஸ்பீட் ஆட்டோமேடிக் கியர் பாக்ஸ் பொருத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கிரேட்டாவின் ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிஷன் மாபெரும் வெற்றிக்குப் பின், இந்த ஆட்டோமேடிக் மாடல்கள் அறிமுகமாவதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அதுமட்டுமல்ல, இந்தியாவில் தலைசிறந்த வாகன தயாரிப்பாளரான மஹிந்த்ராவின் TUV 300 காரின் AMT வெர்ஷனும் உற்சாகமான வரவேற்பைப் பெற்று, விற்பனையில் சாதனை புரிந்துள்ளது. ஒரு சமயத்தில், மஹிந்த்ராவின் மொத்த விற்பனையில் TUV 300 AMT மாடலின் பங்களிப்பு 50 சதவிகிதமாக இருந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்க செய்தியாகும்.
மற்றொரு முக்கியமான செய்தி என்னவென்றால், ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிஷன் அமைப்பை அனைத்து வேரியண்ட்களிலும் மஹிந்த்ரா நிறுவனம் இணைக்காது, ஏனெனில், உயர்தர வேரியண்ட்களில் இந்த அமைப்பு பொருத்தப்பட்டால், விலையை கட்டுக்குள் வைக்க முடியாது. எனவே, உயர்தர மாடல்கள் ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிஷன் இணைக்கப்படாமலேயே வரும் என்று தெரிகிறது. மேலும், எந்த விதமான மெக்கானிக்கல் மாற்றங்களும் இந்த மாடல்களில் இடம் பெறாது என்று திட்டவட்டமாகத் தெரிகிறது. XUV 500 அதே 2.2 லிட்டர் இஞ்ஜின் பொருத்தப்பட்டு 140 bhp என்ற அளவில் சக்தியையும், 330 Nm என்ற அளவில் டார்க்கையும் உற்பத்தி செய்யும். ஆனால், மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் மாடல்களின் விலையை விட, ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிஷன் மாடல்கள் ரூ. 50,000 அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. XUV 500 –ளின் ஆட்டோமேடிக் வேரியண்டின் விலை அதன் தென் கொரிய போட்டியாளரை விட சுமார் ரூ. 1 லட்சம் அதிகமாக (ரூ. 15 லட்சங்கள்) இருந்தாலும், கூடுதலாக இரண்டு இருக்கைகள் பொருத்தப்பட்டுள்ளதாலும், சற்றே பெரிய தோற்றத்தில் வருவதாலும், இந்த விலை நியாயப்படுத்தப்படுகிறது.
இதையும் படியுங்கள்