மஹிந்திரா நிறுவனதின் ஹரித்வார் தொழிற்சாலையின் உற்பத்தி 7 லட்சம் வாகனங்களை தாண்டியது
published on செப் 30, 2015 11:16 am by cardekho
- 20 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஜெய்பூர் :
மஹிந்திரா நிறுவனத்திற்கு சுக்கிர திசை தான் என்று சொல்ல தோன்றுகிறது. 5 லட்சம் ஸ்கார்பியோ வாகனங்களை விற்று புதிய மைல் கல்லை எட்டிய வெகு சில தினங்களிலேயே தன்னுடைய ஹரித்வார் தொழிற்சாலையின் மொத்த வாகனங்களின் உற்பத்தி 7 லட்சம் என்ற புதியதொரு இலக்கை தாண்டி சாதனை படைத்துள்ளது. நவம்பர் மாதம் 2014 ஆம் ஆண்டு 6 லட்சம் என்ற மைல் கல்லை அடைந்த மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் அடுத்த பத்தே மாதங்களில் மேலும் 1 லட்சம் வாகனங்களை உற்பத்தி செய்து புதிய சாதனை புரிந்துள்ளது.
மஹிந்திரா நிறுவனத்தின் ஹரித்வார் தொழிற்சாலையில் பொலிரோ, ஸ்கார்பியோ, சிறிய ரக டெம்போ வாகனமான ஜியோ மற்றும் ஆல்பா உட்பட பலதரப்பட்ட வாகனங்கள் தயாராகிறது. வட இந்தியாவில் உள்ள ஒரே மஹிந்திரா தொழிற்சாலை இந்த ஹரித்வார் தொழிற்சாலை என்பதால் இது அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. சகன், நாசிக், சஹீராபாத், கந்திவளி மற்றும் இகத்புரி ஆகிய நகரங்களிலும் மஹிந்திரா நிறுவனத்தின் தொழிற்சாலைகள் இயங்குகின்றன. ப்ரெஸ் ஷாப் , பாடி ஷாப், CED லைன், பெயிண்ட் ஷாப் மற்றும் அச்செம்ப்லி பிரிவுகள் என ஒரு முழுமையான வாகன தயாரிப்புக்கு தேவையான அனைத்து தொழில்நுட்ப அம்சங்களையும் உள்ளடுக்கி இந்த தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தின் தலைவர் & தலைமை அதிகாரி திரு. பிரவீன் ஷா நிகழ்ச்சியில் பேசுகையில் தன்னுடைய ஹரித்வார் அணிக்கு புகழ் மாலை சூட்டி தங்கள் ப்ரேன்ட் தத்துவத்தின் சிறப்பை வலியுறுத்தி பேசினார். “ எங்களது நீண்ட வாகன தயாரிப்பு பயணத்தில் இந்த குறிபிடத்தக்க சாதனை, தங்களது அயராத உழைப்பையும் அர்பணிப்பையும் தொடர்ந்து அளித்து வரும் ஒவ்வொரு ஹரித்வார் தொழிற்சாலை ஊழியரின் திறமைக்கு தக்க சான்றாக விளங்கும். இந்த தொழிற்சாலை உற்பத்தி தரத்தில் எந்த விதமான சமாதானமும் செய்து கொள்ளாமல் முழு உத்வேகத்துடனும், அர்பணிப்பு உணர்வுடனும் தொடர்ந்து செயல்பட்டு 'ரைஸ்' (எழுச்சி) என்ற எங்கள் தத்துவத்தை பிரதிபலிக்கிறது. இன்னும் இது போல பல மைல்கல்லை அடைவதற்கு இந்த சாதனை ஒரு படிக்கல்லாக இருக்கும்" என்று ஒரு அறிக்கையில் கூறியுள்ளார்.
0 out of 0 found this helpful