• English
  • Login / Register

இத்தாலி நாட்டு டிசைன் ஹவுஸ் பின்னின்ஃபாரினா-வை, மஹிந்திரா வாங்கியது

modified on டிசம்பர் 18, 2015 12:10 pm by raunak

  • 19 Views
  • ஒரு கருத்தை எழுதுக

ஜெய்ப்பூர்: மஹிந்திரா அண்டு மஹிந்திரா (M&M) மற்றும் டெக் மஹிந்திரா ஆகியவை ஒன்று சேர்ந்து, இத்தாலி நாட்டின் பிரபல வடிவமைப்பு நிலையமான (டிசைன் ஹவுஸ்) பின்னின்ஃபாரினாவை வாங்கியுள்ளது. M&M மற்றும் டெக் மஹிந்திரா ஆகிய இவ்விரண்டும், சர்வதேச அளவில் $16.9 பில்லியன் மதிப்பு கொண்ட மஹிந்திரா குரூப்பில் அங்கம் வகிக்கின்றன. இதன்மூலம் பெராரி, ஆல்ஃபா ரோமியோ, மாசிராட்டி மற்றும் பியூஜியோட் உள்ளிட்ட பலவற்றிலும் வடிவமைப்பின் மூலம் பிரபலமடைந்த இந்த 85 வருட அனுபவம் கொண்ட நிறுவனத்தின் வளர்ச்சி, தற்போது மஹிந்திராவின் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது.

இந்த     ஒப்பந்தத்தோடு, டெக் மஹிந்திரா மற்றும் மஹிந்திரா அண்டு மஹிந்திரா ஆகியவை இணைந்து, பின்னின்ஃபாரினாவின் பங்குகளை தற்போது கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ள பின்கார் S.r.l.-னிடம் இருந்து 76.06% பங்குகளை, ஒரு பங்கிற்கு 1.1 யூரோ என்ற விலையில் வாங்கியுள்ளது. டெக் மஹிந்திரா மற்றும் M&M ஆகிய இரண்டும் இணைந்து ஒரு கூட்டு முயற்சி நிறுவனம் ("JVCo") மூலம் இந்த முதலீட்டை செய்துள்ளன. இந்நிலையில் இதன் உரிமை இவ்விரு பங்குதாரர்களுக்கு இடையே பங்கிட்டு எடுத்துக் கொள்ளப்படும். அதன்படி டெக் மஹிந்திராவிற்கு 60% மீது உரிமையும், M&M-ற்கு 40% மீது உரிமையும் பகிர்ந்து கொள்ளப்படும்.

இதை தொடர்ந்து பின்னின்ஃபாரினாவின் மிஞ்சியுள்ள மற்ற எல்லா சாதாரண பங்குகளுக்கும் ஒரு பகிரங்கமான சலுகையில், பின்கார் மூலம் விற்கப்பட்ட அதே விற்பனை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வரும் 2016 ஆம் ஆண்டின் இறுதிக்குள், பெரிய அளவிலான வடிவமைப்பு மற்றும் ஸ்டைலிங் ஆகியவற்றில் நிதியை உட்புகுத்துவதற்கான அதிகாரம் குறித்து முடிவு செய்து வெளியிடப்படும். பின்னின்ஃபாரினா, தொடர்ந்து ஒரு தனிப்பட்ட நிறுவனமாக செயல்பட்டு, அதன் குழுத் தலைவராக திரு.பவுலோ பின்னின்ஃபாரினா தொடர்வார் என்று மிலன் பங்கு சந்தையின் பட்டியலிடப்பட்டுள்ளது.

மஹிந்திரா குடும்பத்துடன் பின்னின்ஃபாரினா இணைக்கப்பட்டது குறித்து, மஹிந்திரா குரூப்பின் தலைவரான திரு.ஆனந்த் மஹிந்திரா கூறுகையில், “பின்னின்ஃபாரினாவின் இணைப்பு மூலம் என்ஜினீயரிங் சேவைகளில் டெக் மஹிந்திராவின் முதலீடுகளில், மகத்தான மதிப்பை கூட்டுவதாக அமையும். அதே நேரத்தில் பின்னின்ஃபாரினாவின் பழம்பெரும் உன்னத வடிவமைப்பு திறன்களின் மூலம் முழு மஹிந்திரா குரூப்பின் வடிவமைப்பு திறன்களும் கணிசமான அளவில் அதிகரிப்பதாக அமையும் என்பது முக்கியத்துவம் வாய்ந்த ஒரு விஷயமாகும். வாடிக்கையாளர்களின் தேர்வு மற்றும் அனுபவத்திற்கும், எங்களின் வெற்றிக்கும், தயாரிப்பு வடிவமைப்பு ஒரு முக்கிய பங்கு வகிப்பதால், இன்றைய வாடிக்கையாளர்களிடம் அதிகரித்து வரும் வடிவமைப்பு உணர்வுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கிறோம்” என்றார்.

இது குறித்து டெக் மஹிந்திராவின் CEO மற்றும் நிர்வாக இயக்குனர் CP குர்நானி கூறுகையில், “எங்களிடம் இருந்து தொடர்ந்து இன்னும் அதிக சேவைகளை பெற வேண்டும் என்று எங்கள் நுகர்வோர் எதிர்பார்க்கிறார்கள். இந்நிலையில் பின்னின்ஃபாரினாவின் பழம்பெரும் வடிவமைப்பு திறன்கள், எங்களின் ஒருங்கிணைந்த என்ஜினியரிங் தீர்வுகளுடன் இணையும் போது, ஆட்டோமோட்டிவ் ஸ்டைலிங், டிசைனிங் மற்றும் மேம்பாடு ஆகியவற்றில் ஒரு சக்தி வாய்ந்த நுழைவை அளிப்பதோடு, எங்களின் பாடி என்ஜினியரிங் செயல்பாடுகளுக்கு வலுவூட்டுவதாகவும் அமையும். மேலும், ஆட்டோமோட்டிவ் துறையை தவிர, தொழிற்சாலைகளில் வடிவமைப்பு நிபுணத்துவத்தில் பின்னின்ஃபாரினாவின் 25 வருட அனுபவம் மூலம், ஏரோஸ்பேஸ், நுகர்வோர் எலக்ட்ரோனிக்ஸ், கட்டிட கலை & இன்டீரியர்ஸ் மற்றும் போக்குவரத்து போன்ற பகுதிகளில் எங்களுக்கு வெற்றி முனையை எட்டி சேர உதவும். ஏனெனில் ஏற்கனவே அப்பகுதிகளில் நாங்கள் ஒரு பலமான கால்தடத்தை பதித்துள்ளோம்” என்றார்.

பின்னின்ஃபாரினா S.p.A.-வின் தலைவர் பவுலோ பின்னின்ஃபாரினா கூறுகையில், “இந்த உலகமயமாக்கப்பட்ட உலகில், தொழில் முனைவோர் மற்றும் முதலீட்டிற்கு ஒரு பாஸ்போர்ட்டின் அவசியம் கிடையாது. எனவே $ 3.9 பில்லியன் தொழில்நுட்பம் மற்றும் உலக பங்குதாரர் மற்றும் மஹிந்திரா குழுவை சேர்ந்த ஒரு $ 16.9 பில்லியன் பகுதியோடு, நாங்கள் கைகோர்த்துள்ளோம். இதன்மூலம் எங்களின் இத்தாலிய அறிமுகம் பலப்படுவதோடு மட்டுமின்றி, எங்களுக்காக அதிக வாசல்கள் திறக்கப்படவும் உதவும். டெக் மஹிந்திராவின் சர்வதேச அளவிலான செயல்பாடு மற்றும் உலகளாவிய விநியோக மாடல் ஆகியவை மூலம் வாணிகத்தில் ஒரு பெரியளவிலான முக்கியத்துவம் வாய்ந்த போட்டியை அளிக்க எங்களுக்கு உதவும்” என்றார்.

மேலும் வாசிக்க

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your கருத்தை

Read Full News

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience