• English
  • Login / Register

மஹிந்த்ரா ரேவாவின் ‘ஃபெஸ்டிவல் ஆஃப் குட்னேஸ்’ நிகழ்ச்சியில் பங்குபெற்றவர்களுக்கு டிசம்பர் 30 2015 அன்று அதிர்ஷ்ட குலுக்கல்

published on டிசம்பர் 29, 2015 01:17 pm by sumit

  • 17 Views
  • ஒரு கருத்தை எழுதுக

Mahindra Reva e2o

2015 டிசம்பர் 30 –ஆம் தேதி அன்று, e2o கார் உரிமையாளர்களுக்கு ஒரு அதிர்ஷ்ட குலுக்கல் நிகழ்ச்சியை நடத்தப் போவதாக மஹிந்த்ரா ரேவா அதிகாரபூர்வமான அறிவித்துள்ளது. 2015 அக்டோபர் 3 –ஆம் தேதியில் இருந்து நவம்பர் 15 –ஆம் தேதி வரை, இந்த கார் தயாரிப்பாளர் நடத்திய ‘ஃபெஸ்டிவல் ஆஃப் குட்னேஸ்’ என்னும் விளம்பர திட்டத்தைத் தொடர்ந்து, இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது. பெங்களூருவில் உள்ள பிரிகேட் ரோட்டில் உள்ள ஹோட்டல் மொனார்க்கில், காலை 11.00 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை, இந்த அதிர்ஷ்ட குலுக்கல் நடைபெறும்.

அதிர்ஷ்ட குலுக்கலில் கலந்து கொள்ள முக்கிய விதி என்னவென்றால், இதற்கு முன் நடந்த ஃபெஸ்டிவல் ஆஃப் குட்னேஸ் என்ற விளம்பர நிகழ்ச்சியில் பங்கு நபர்கள் மட்டுமே இந்த திட்டத்தில் பங்கு கொள்ள முடியும். அதிர்ஷ்ட குலுக்கலில் பம்பர் பரிசாக, இரண்டு நபர்களை சிங்கப்பூருக்கு சுற்றுப்பயணம் (மேலும் பல விதிகளுக்கு உட்பட்டது) கூட்டிச் செல்கின்றனர். ஆனால், ஒரு குறிப்பிட்ட காலத்தில் (அக்டோபர் 3 2015 –இல் இருந்து நவம்பர் 15 2015 வரை) இந்த காரை டெஸ்ட் டிரைவில் ஒட்டிப்பார்த்து வாங்கி இருந்தால் மட்டுமே, அவர் இந்த பம்பர் பரிசுப் போட்டியில் பங்கு பெற தகுதி பெற்றவராவார்.

ஃபெஸ்டிவல் ஆஃப் குட்னேஸ் என்னும் திட்டத்தை, ரேவா நிறுவனம் தனது e2o காரை விளம்பரப் படுத்துவதற்காகவே நடத்தியது. மின்சார காரைத் தயாரித்துள்ள இந்த நிறுவனம், இந்த விளம்பர நிகழ்ச்சியின் போது இந்த காரை வாங்கியவர்களுக்கு, நிச்சய பரிசைத் தரும் ஒரு ஸ்கிராட்ச் கார்டை வழங்கியது. இது தவிர, மேலும் பல நிச்சய பரிசுகள் வழங்கப்பட்டன. அவை, ஒவ்வொரு நபருக்கும் ரூ. 60000 மதிப்புள்ள iPhone (8 அதிர்ஷ்டசாலிகளுக்கு); 4 அதிர்ஷ்டசாலிகளுக்கு தலா ரூ. 50000 மதிப்புள்ள LED TV ஒன்று; மற்றும் 8 அதிர்ஷ்டசாலிகளுக்கு தலா ரூ. 13500 மாதிப்புள்ள 22kt தங்க நாணயம் ஆகியவற்றிக்கான eவௌச்சர்கள் அளிக்கப்பட்டது; 8 அதிர்ஷ்டசாலிகளுக்கு தலா ரூ. 4,900 பணமும் மற்றும் 72 அதிர்ஷ்டசாலிகளுக்கு ரூ. 1000 பணமும் பரிசளிக்கப்பட்டது.  இந்த ஃபெஸ்டிவல் ஆஃப் குட்னேஸ் திட்டத்தின் கீழ் விற்பனை ஆன முதல் 100 கார் உரிமையாளர்களுக்கு மட்டுமே இத்தகைய சலுகைகள் அளிக்கப்பட்டன.

அதிர்ஷ்ட குலுக்களில் பங்கேற்க வேண்டும் என்று நினைப்பவர்கள், ‘எப்படி மஹிந்த்ரா e2o பலவித நன்மைகளை தரும் காராக இருக்க முடியும்?’ என்ற கேள்விக்கு பதில் எழுதிப் போட வேண்டும். எனினும், இந்த போட்டியில் மஹிந்த்ராவின் ஊழியர்கள் மற்றும் இந்த நிறுவனத்துடன் தொடர்பு கொண்ட சப்ளையர்கள், ஏஜன்சிகள், மஹிந்த்ராவின் பங்கு தாரர்கள் மற்றும் வியாபார நிறுவனங்கள் ஆகியோருக்கு, இந்த நிகழ்ச்சியில் பங்கு பெற தகுதி இல்லை.

மேலும் வாசிக்க

வெளியிட்டவர்
was this article helpful ?

Write your கருத்தை

Read Full News

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience